நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருக்கின்றது.இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் இனச் சுத்திகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிக்கப்படுவதாவது:"அருந்ததி ராயின் அண்மைய செய்திக் கட்டுரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிவிலியன்களைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும் எனவும் இலங்கைத் தூதுவராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் 54 வீதமான தமிழ் மக்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் சுகேஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டங்களைப் புலிகள் நிராகரித்து வந்துள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிவிலியன் நலனை முதன்மை நோக்காகக் கொண்டே வடக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்." இவ்வாறு 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
4/02/2009
| 0 commentaires |
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் போலிப்பிரசாரம் செய்கிறார் : 'டைம்ஸ் ஒப் இந்தியா' வில் இலங்கை தூதரகம் கண்டனம்
நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராய் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருக்கின்றது.இலங்கையில் பகிரங்க இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் அநாயாசமான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அருந்ததி ராய் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் இனச் சுத்திகரிப்புக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிக்கப்படுவதாவது:"அருந்ததி ராயின் அண்மைய செய்திக் கட்டுரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிவிலியன்களைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும் எனவும் இலங்கைத் தூதுவராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.சிங்களப் பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் 54 வீதமான தமிழ் மக்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய முதல் செயலாளர் சுகேஸ்வர குணரட்ன தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டங்களைப் புலிகள் நிராகரித்து வந்துள்ளமை நோக்கப்பட வேண்டியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சிவிலியன் நலனை முதன்மை நோக்காகக் கொண்டே வடக்கில் படையினர் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்." இவ்வாறு 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment