உள்ளுராட்சி எனும் விடயம் மாகாணசபைக்கு பகிர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் உள்ளுராட்சி சபைகளின் அமைப்பும், மாதிரியும், கட்டமைப்பும் பாராளுமன்றச் சட்டத்தினால் தீர்மானிக்கப்படவேண்டிய விடயங்களாகும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்று சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக உள்ளுர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி மாகாணசபைகளின் அபிப்பிராயம் பெறப்படவேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதாக நான் அறிகின்றேன்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் மாகாணசபைகளின் தத்துவங்களில் குறுக்கிடுவதாக நான் எண்ணுகின்றேன். அத்துடன் மக்களின் அபிப்பிராயங்களை அறிந்த பின் முடிவுசெய்ய வேண்டிய விடயங்களை மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் வர்த்தகமானிப் பிரகடனங்கள் மூலம் செய்ய முற்படுகிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையில் இருக்கின்ற மாகாணசபைகளிலே சிறுபாண்மை மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்ற எனது கிழக்கு மாகாண சபையிடமே சிறுபாண்மை கட்சிகள் மற்றும் மக்களுக்குரிய நலன்கள் பாதிக்கப்படுகின்ற வகையில் அமைந்திருக்கின்ற இச்சட்ட மூலத்தை இப்படியே நாம் ஏற்பது என்பது இயலாத காரியமே ஆகும். ஆனால் இதனூடாக நாம் ஆளும் தரப்பாக இருந்து கொண்டு அரசை எதிர்ப்பதாக பொருள் கொள்ளத்தேவையில்லை.
இச்சட்டமூலம் தொடர்பாக நாங்கள் சில திருத்தங்களை முன்வைத்து அதனூடாக இது மாகாணசபைக்கு சட்டமூலமாக கொண்டு வருகின்ற பட்சத்தில் நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கின்றோம்.
நான் மீண்டும் சொல்கின்றேன். நாங்கள் ஆளும் தரப்பில் இருந்து கொண்டு அரசை எதிர்ப்பதாக யாரும் விமர்சிக்கத்தேவையில்லை. இது தொடர்பில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து அதனை ஏற்று அங்கிகரித்து அரசாங்கத்திற்கு நாங்கள் எங்களது பலத்தை வழங்குவமே ஒழிய நாங்கள் அரசை எதிர்க்கவில்லை.
ஆனால் இறுதியில் சபையில் ஏற்கப்பட்ட குழப்பம் காரணமாக சரியானதொரு முடிவு எடுப்பதில் பிரச்சினை நிலவியதால் தற்காலிகமாக சபை அமர்வு எதிர்வரும் 20ம் திகதி பிற்போடப்பட்டுள்ளது. ஆனால் இந்ததிகதியில் மாற்றம் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுவதனை அவதானிக்க முடிகிறது.

0 commentaires :
Post a Comment