அரசாங்கம் கொண்டு வந்துள்ள உத்தேச உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டபடி நாளை திங்கட்கிழமை (ஏப்ரல் 20 ) நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட மூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்காக மே மாதம் 12 ஆம் திகதியே கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு கூட்டப்படவிருப்பதாக மாகாணசபை செயலாளர் கு. தியாகலிங்கம் நேற்று சனிக்கிழமை பிற்பகல்
தெரிவித்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான ஒருநாள் விவாதம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வில் இடம்பெற்றது. விவாத முடிவில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பேச்சை அடுத்து சட்டமூலத்தை ஏற்பதில்லை என்று சபை ஏகமனதான முடிவை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடைசி நிமிட திருப்பத்தின் காரணமாக சபையின் கூட்டத்தை ஏப்ரல் 20 வரை ஒத்திவைப்பதாக சபையில் தவிசாளர் அறிவித்தார். இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு மே 12 ஆம் திகதியே நடக்கும் என்றும் அப்போது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நடக்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment