4/13/2009

நாசிகளின் சாயல் - குவர்னிகா -




ஈழவிடுதலையின் இறுதி ஏமாற்று வேலை உலகம் ப+ராவும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. அசிங்கம் பிடித்த மனம் யார் எதைச் சொன்னாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிறது. நான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதை மறுத்து முப்பது கால் என்று அடம் பிடிப்பதை என்னவென்று சொல்வது? 25வருடமாக விடுதலைப்புலிகளது செய்திகளையே கேட்டுப்பழகிய மனம், அதன்மீதே ஆசைகொண்ட மனம், அதையே எதிர்பார்த்திருக்கும் மனம் இன்று திடீரென தனக்குப்புறம்பானதொரு தனக்கு எதிரானதொரு செய்தியை கருத்தளவில் தன்னும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த நிலை எல்லோருக்கும் வருவதுதான். ஒரு கோட்பாட்டில் ஒரு வாழ்தல் முறையில் நம்பிக்கையுடன் நீண்டகாலங்கள் இருந்து விட்டு ஒருகணத்தில் அது தகர்ந்து விடும் போது உடனடியாக அந்தத் தகர்தலை ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கும். இப்படிப் பலரை நாம் கடந்து வந்த காலங்களில் சந்தித்திருக்கிறோம். இதே நிலையே இன்றுள்ள நமது மக்களுக்கும் நேர்ந்துள்ளது.
30வருடங்களாக எந்தவொரு தருணத்திலும் மக்களது விடுதலையின்பால் அக்கறையற்ற புலிகள் தாம் செய்துவந்த அரசியலை மக்களுகக்கானதாக சுத்துமாத்துச் செய்து கருத்துரைத்தவர்கள். அதையே நம்பச்செய்தவர்கள். ஆனால் அந்த அரசியலூடாக தமிழர்களது சுதந்திரத்தினை நோக்கி ஒரு இம்மியும் நகரவிடாது பாதுகாத்தவர்கள். தமிழர்களுக்கு அவர்கள் நினைத்த சுதந்திரம் வந்து விடக்கூடாது என்பதில் ஒவ்வொரு தடவையும் கவனமாக இருந்து தட்டிக்கழித்தவர்கள். ஏனெனில் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைத்தால் அடுத்த கணம் தாங்கள் மக்களிடத்தி;ல இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் என்ன திருகுதாளக் கதை விட்டாவது மக்களை நம்பவைத்து விடும் வல்லமை புலிகளுக்கு இருந்தது. இதை புலிகளது வல்லமை என்று செல்வதை விட மக்களை மந்தைகளாக்கி வைத்த நிலை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு யுத்த நிறுத்த காலத்திலேயே புலிகள் மக்களுக்கு தேவையற்றவர்களாகி விடுவார்கள். மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு மாறும் போது புலிகள் ஒவ்வொரு தடவையும் மக்களிடத்தில் இருந்து அன்னியப்பட்டே இருந்திருக்கிறார்கள். புலிகள் மக்களுக்குத் தேவை எனில் குண்டுச்சத்தமும் யுத்தமும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பது புலிகளுக்கத் தெரியும். அதனால் தான் 30வருடத் தொடர் யுத்தமும் அழிவும்.
ஆனால் இன்றோ கதை வேறுமாதிரி. புலிகளது காலுக்குள் யுத்தம். யுத்தத்தின் கைகளில் மக்கள். புலிகள் நினைத்தது ஒன்று. நடந்தது வேறு. இன்று நடக்கின்ற யுத்தம் மக்களைப் பெருமளவில் அழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது மக்கள் புலிகளுக்காக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிக்கொடியே தமிழர்களது தேசியக் கொடி என்றும் தமிழர்களது ஒரே தலைவர் பிரபாகரன் என்றும் வானம் முட்ட முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முத்துக்குமாரில் தொடங்கி பத்துப்பேர் வரையில் ஒவ்வொரு கட்சிக்காரரும் தீக்குளித்து மாண்டு போய் விட்டார்கள். ஐ.நா. முன்றல், இந்தியத் தூதரக முன்றல், செஞ்சிலுவைச் சங்கமுன்றல், ஐரேப்பிய ய+னியன் முன்றல் இலங்கைத் தூதரக முன்றல் என்று உண்ணாவிரதங்களும் நடைபவனிகளும் உரிமைப் போர் முழக்கங்களும் ஊர்வலங்களும் செய்து எத்தனையோ கவனயீர்ப்பு செய்தாகிவிட்டது. இப்போது தொடர் போராட்டம் என்று இடைவிடாத கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் இன்றுவரை இந்தசர்வதேசத்திற்கு யாருடைய கவனமும் ஈர்க்கவில்லை. என்ன வெறுமையாகச் சொன்னால் வேடிக்கைகூடப் பார்க்கவில்லை. அதற்குரிய காரணம் புலிகளுக்கு நன்றாகத் தெரியும். புலிகளுக்குத் தெரியும் என்று சர்வதேசத்திற்கும் தெரியும். அதனால் யாரும் எந்தக்காரணத்திற்காகவும் யாரையும் எதிர்பார்த்து இருக்கவில்லை.
இந்தியாவில் ராஜீவ் படுகொலையும் ஐரோப்பாவில் புலிகளது ஆயுத வன்முறை சபாலிங்கம் படுகொலையை நாடாத்தி முடித்ததும். கனடாவில் உலகத்தமிழரது அடாவடியும் பணப்புழக்கமும் அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவும் சர்வதேசம் உற்று நோக்கியவை. ஆனால் வெளித் தெரிந்த இச்த சம்பவங்கள் மட்டுமல்ல சர்வதேசம் புலிகளது அழிவை விருப்புவதன் நோக்கம். புலிகள் தாம் ஒருமிகப்பெரிய நாசகாரக் கும்பல் என்றும் பயங்கரவாதக் கும்பல் என்றும் ஒன்றுக்கு ஆயிரம் தடவை தாங்களே நிரூபித்து விட்டார்கள். இன்று நேற்றல்ல நலைந்து வருடத்திற்கு முன்னரேயே புலிகளென்ற அமைப்பு ஒரு தடைசெய்யப்பட்ட அமைப்பாக சர்வதேசம் பிரகடனப்படுத்திவிட்டது. அதன்பிறகு புலிகளுடன் எந்தெந்த பினாமிகள் அமைப்பாக இருக்கிறது என்றும் கண்டுபிடித்து விட்டது. யார் என்ன கோசம் போட்டாலும் எத்தனை தீக்குளித்தாலும் சர்வதேசம் தெளிவாக இருக்கிறது. அது வன்னியிலுள்ள மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. சர்வதேசத்தின் நாக்கு அதிகம் புலிகளை நோக்கியே நீளுகிறது.
ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் என்ன செய்வார்கள் பாவம். புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு இப்படி தெருத்தெருவாய் அலையும் போது புலிகள் காப்பாற்றப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் புலிகளின் செத்தைக்குப்பின்னால் நின்று பொட்டுக்குள்ளால் இராணுவம் புலிகளைப் பார்த்துக் கொண்டிருகிறது. புலிகளது வாழ்நாள் இன்னும் கொஞ்சநாள். அதன்பிறகு சர்வதேசம் கண்விழிக்கும் அப்போதுதான் இந்த அநியாயப்பட்ட புலம் பெயர்ந்த மக்களுக்கு விளங்கும்.
இங்கே நடக்கின்ற இன்னுமொரு அநியாயம் என்னவென்றால் முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த மக்கள் சொல்லும் சோகக் கதைகளையே நம்பமறுக்கும் புலி விசுவாசிகள் இராணுவம் நிர்வாணமாய் நடக்கவிடுகிறது. வவுனியா முகாம்களில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள் என்று புலிகள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பிவிடும் பரிதாப நிலயில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் புலிகளது செய்தி உடகங்களே. தப்பிவந்து முகாம்களில் வாழும் மக்கள் சொல்லும் எந்தவொரு கதையையும் இவர்கள் நம்பத்தயார் இல்லை. புலிகளிடம் இருந்து ஒரு இலட்சம் மக்கள் தப்பி வந்து முகாம்களில் இருக்கிறார்கள் என்பதைக் கூட நம்ப மறுக்கிறார்கள். தினமும் மக்கள் புலிகளைவிட்டு ஓடிவருகிறார்கள் என்பதையும் நம்பமறுக்கிறார்கள். இந்த மந்தைகளுக்கு யாருமே மணிகட்டமுடியாது. புலிகள் ஒட்டுமொத்தமாய் அழிந்தாலும் புலிகள் வைத்திருக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாய் அழிந்தாலும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று றேடியோவில் பாட்டு போட்டுக் கொண்டிருக்கும் எருமை மாடுகள்தான் இவர்கள். இவர்களுக்கும் நாசிகளுக்கும் வித்தியாசமில்லாத கோடு இதுதான்.
இறுதியாக ஒரேயொரு கேள்வி. மிகச்சாதாரணமான கேள்வி. 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களது தரப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் புலிகள். சாத்தியமேயற்ற தமிழீழத்திற்குள் தமிழீழக் காவல்துறை என்றும் தமிழீழ நீதித்துறை என்றும் தமிழீழ உழவுப்பிரிவு என்றும் கேணல் கிட்டு அரசியல் விஞ்ஞானபீடம் என்றும் ஒரு தனியரசுக்கான மிகப்பெரிய வலுக்களுடன் இருந்தவர்கள். எடுத்த இடத்திலெல்லாம் சீமெந்தின் விலையைக் கூட பொருட்படுத்தாது சிலைகளும் தூபிகளும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் கட்டி மக்களுக்கு தமது தனித்தன்மையைக் காட்டி வந்தவர்கள். ஒரு ஆறுமாதகாலத்திற்குரிய மருந்து உணவு போன்றவற்றை மக்களுக்காக பாதுகாத்து வைக்க முடியவில்லை. புலிகள் மாலிலாற்றில் யுத்தத்தை விரும்பித் தொடங்கியபோது ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது அந்த மக்களுக்குரிய மருந்து உணவு போன்றவற்றை சேமித்து வைக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து செய்வதெல்லாம் செய்து விட்டு மருந்தை அனுப்பு என்று சொல்வதும். உணவை அனுப்பு என்று சொல்வதுமாக கெஞ்சிககொண்டிருக்க கூடாது..இவ்வளதொகையானவர்களைக் கொன்று விட்டு பின்பு மருந்தும் அவன் அனுப்புவது என்பது வேடிக்கை இல்லாமல் வேறுஎன்ன?


0 commentaires :

Post a Comment