4/09/2009

பாதுகாப்பு வலயத்தை விட்டும் புலிகள் வெளியேற வேண்டும்!




ஐ.நா.உயர் அதிகாரி கோரிக்கை புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்த சகல பகுதிகளையும் இழந்துள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்தில் இருந்துகொண்டு பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட்டு அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள அப்பாவிப் பொதுமக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். புலிகள் தங்களுக்கான பாதுகாப்பை அவ்வலயத்துக்கு வெளியே வேறு எங்காவது தேடிக்கொள்ள வேண்டும் என உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான ஜ.நா. செயலாளர் நாயகம் பேராசிரியர் வோல்;டர் கெயின்; வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கான தனது 4 நாள் விஜயத்தின் முடிவிலேயே பேராசிரியர் வோல்;டர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் முதல் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வவுனியாவுக்கு வந்து சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார்.பிரிந்த குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய பேராசிரியர் வோல்;டர், நலன்புரி முகாம்களில் உள்ள குடும்பங்களைச் சந்திப்பதற்காக விஷேட வரவேற்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதையும், யு.என்.எச்.சீ.ஆர். மற்றும் சமூக சேவைகள் அமைச்சு ஆகியவற்றுக்கு ஓமந்தை சோதனைச் சாவடி அருகில் அலுவலகங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதையும் பாராட்டியுள்ளார்.

0 commentaires :

Post a Comment