பாதுகாப்புப் படையினருடனான யுத்தத் தில் தோல்வியடைந்த புலிகள் பொதுமக் களின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலய த்துக்குள் புகுந்து சிவிலியன்களை மனிதக் கேடயங்களாக்கித் தங்களைப் பாதுகாப்பத ற்கு முயற்சித்தது மாத்திரமன்றி, அங்கிரு ந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தலையும் தொடுத்தனர். இதன் மூலம் புலி கள் பொதுமக்களை ஆபத்துக்கு உள்ளாக் கினார்கள்.
புலிகளுக்கு ஆதரவாக சர்வதேச மட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களிலும் இப்பொதுமக்கள் பாத்திரமானார்கள். யுத்த நிறுத்தமொன்றுக்கு வழிவகுப்பதற்காக இம்மக்களை முன்னிறுத்திப் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலிகளுக்கு ஆதரவாக அவர்களோடு தங்கியிருக்கின் றார்கள் என்றும் அவர்கள் மீது அரச படையினர் தாக்குதல் தொடுக்கின்றார்கள் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் தமிழ்நாட்டு அரசியல்வாதி களும் பிரசாரம் செய்தார்கள். ஆனால் உண்மை நிலை இப்பிரசாரத்துக்கு முற்றி லும் முரணானது. மக்கள் பாதுகாப்புப் பிரதேசங்களை நோக்கி வெளியேறுவதற்கு இடமளிக்காமல் புலிகளே அவர்களைத் தடுத்து வைத்திருந்தனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திப் பிரசாரம் செய்யப்பட்டது. மக்கள் சுயவிருப்பின் பேரில் புலிகளுக்கு ஆதரவாக அங்கு தங்கியிருந்தார்கள் என்ப தும் அப்பட்டமான பொய்.
பாதுகாப்பு வலயத்தின் ஒரு ஓரத்தில் புலிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாரிய மண் அணையைப் பாதுகாப்புப் படையி னர் உடைத்து வழி ஏற்படுத்தியதும் பொது மக்கள் அதற்கூடாகச் சாரி சாரியாக வெளி யேறினார்கள். புலிகளின் பிடியிலிருந்து வெளியேறுவதற்கு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருந் தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. சர்வதேச சமூகத்துக்கு இதுவரை பொய் கூறி வந்த புலி ஆதரவுப் பிரசாரகர்கள் இனியா வது உண்மை பேச முன்வர வேண்டும்.
துமாத்தளனில் புலிகளின் மண் அணை மாத்திரம் படையினரின் அதிரடி நடவடிக் கையால் உடையவில்லை. இரண்டு லட்ச த்துக்கு மேற்பட்டவர்கள் யுத்தப் பிரதேசத் தில் சிக்கியிருக்கின்றார்கள் என்றும் அவர் கள் அங்கிருந்து வெளியேறிப் படையின ரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வர விரும்ப வில்லை என்றும் கட்டி வளர்க்கப்பட்ட பொய்த் தோற்றமும் சுக்குசுக்காக உடைந் தது. சிவிலியன்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டுவிடுவார்கள்.
புலிகளின் அரசியல் செல்வழி அழிவுகர மானது என்பதை அவர்களைக் கண்மூடித்த னமாக ஆதரித்தவர்கள் இப்போதாவது விளங்கிக்கொள்ள வேண்டும். இனப் பிர ச்சினையைச் சிக்கலாக்கியது மாத்திரமல் லாமல் கடைசிக் கட்டத்தில் மக்களின் வாழ்க்கையோடும் விளையாடியிருக்கின் றார்கள். அங்கிருந்து வெளியேறும் சிவிலி யன்கள் மீது தாக்குதல் தொடுக்கக் கடைசி நேரத்தில் கூட அவர்கள் தயங்கவில்லை.
0 commentaires :
Post a Comment