யுத்த நடவடிக்கைகளற்ற பிரதேசமாகவுள்ள புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிகளை அண்டிய குறிப்பிட்ட பிரதேசங்களிலும் மற்றும் அடுத்துள்ள பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அப்பகுதிகளிலிருந்து அரச படையினருக்கெதிராக தாக்குதல்களைத் தொடுத்து வரும் புலிகள் இயக்கத்தினர் மீது அரச படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாதிருப்பதற்குக் காரணம், அவ்வாறான தாக்குதல்களால் தமிழ் மக்களுக்குப் பாரிய உயிரிழப்புகள் ஏற்படுமென்பதாலேயே. மேலும், புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் இதே காரணத்தால் தான் அரச படையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பி வருகின்றனர். இந்த வகையில் புலிகள் இயக்கத்தினர், தமிழ் அகதிகள் வாழும் யுத்த நடவடிக்கைகளற்ற வலயப்பகுதியிலும் அடுத்துள்ள பகுதிகளிலுமே தற்போது பதுங்கியுள்ளனர். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் தலைவர்களும் அப்பகுதியிலேயே இரகசியப் பதுங்கு குழிகளில் மறைந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காக யுத்தம் செய்வதாகக் கூறும் புலிகள் இயக்கத்தினர் தமிழ் மக்களையே பலாத்காரமாக மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களிடையே சிறுவர்களையும் இளைஞர்களையும் பலாத்காரமாகப் பிடித்துச் சென்று அரைகுறைத் துப்பாக்கிப் பயிற்சிகளின் பின்னர் அரச படையினருடன் மோதல்களுக்கு அனுப்பி பலியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி அரச படையினரின் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பியிருப்பதுடன், அவருடைய ஏனைய தலைவர்களும் எஞ்சியிருக்கும் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்களும் இன்று உயிருடன் இருப்பது தமிழ்ப் பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வரும் இழிவான யுத்த தந்திரம் காரணமாகவே. இதனை இன்று சர்வதேசமே நன்கு அறிந்துள்ளது. இதனால் தான் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, இந்தியா போன்ற முன்னணி நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் எல்லாமே இன்று பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தும் புலிகள் இயக்கத் தலைவரின் இழிவான தந்திரத்தைக் கைவிட்டு தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்குமாறு பகிரங்கமாக பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
எவ்வாறாயினும், புலிகள் இயக்கத் தலைவர்கள் தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதை எந்தவகையிலும் அனுமதிக்கத் தயாரில்லை. அவ்வாறு மக்கள் வெளியேறும் பட்சத்தில் சுமார் ஒரு வார காலத்துக்குள் தலைவர் பிரபாகரன் உட்பட தலைவர்கள் எஞ்சியிருக்கும் சுமார் 500 வரையிலான புலிகள் இயக்கத்தினரைத் தோற்கடித்து அவர்களுக்கு எஞ்சியிருக்கும் சுமார் 8 சதுர கிலோ மீற்றர் வரையான குறுகிய பிரதேசங்களையும் கைப்பற்றும் யுத்த ஆற்றல் அரச படையினருக்கு உண்டு. இவ்வாறு இறுதியில் அரசபடையினரின் தீவிர தாக்குதல்களில் தாம் இறுதித் தோல்வியை அடைந்து விடுவோம் அல்லது கொல்லப்பட்டு விடுவோம் என்பதைப் பிரபாகரனும் தலைவர்களும் நன்கறிவார்கள். இதனால் தான் மனிதக் கேடயங்களாகத் தடுத்துவைத்திருக்கும் தமிழர்களை விடுவிக்கும்படி சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் கோரிக்கை விடுத்தும் பிரபாகரன் அவர்களை விடுவிக்க மறுத்து வருகிறார். இதற்கு மேலாக இவ்வாறு அப்பகுதியிலிருந்து தப்பியோடும் முயற்சிகளும் மக்கள் மீதும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் மேற்கொண்ட சம்பவங்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்களும் அவர்களைப் பலாத்காரமாகப் பிடித்துச் சென்று அரச படையினரின் தாக்குதல்களுக்கு எதிராக முன்னணியில் அனுப்பி பலிக்கடாக்கள் ஆக்கும் சம்பவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலிருந்து தப்பிவரும் மக்கள் அனைவருமே இதைப் பொறுத்தவரையில் இதே தகவல்களையே கூறுகின்றனர்.
இந்த வகையில் அண்மையில் தப்பிவந்துள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ள தகவல்கள், புலிகள் இயக்கத் தலைவர்களின் இந்தப் பலாத்கார நடவடிக்கைகளைத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் பொட்டம்மான் தப்பியோடும் மக்களைச் சுட்டுக் கொல்லுமாறு பகிரங்கமாகவே கட்டளையிட்டுள்ளார். இதற்காக பொட்டம்மானுக்கு அடுத்து உளவுப் பிரிவு உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான வேலன் எனப்படும் தலைவர் தனது குழுவினருடன் தப்பியோட முயற்சிக்கும் தமிழர்களை வேட்டையாடும் விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் , பொட்டம்மான், சூசை, ரமேஷ் , ஜெயம், ரத்தின் மாஸ்டர் போன்ற எஞ்சியிருக்கும் தலைவர்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் இறுதி மார்க்கமாகவே இவ்வாறு தமிழ் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில், அங்கு அத்தியாவசியத் தேவைகளின்றி மடிந்து வரும் தமிழர்களை வெளியேற விடாது தடுப்பதற்காக "சுட்டுத்தள்ளும்' கட்டளையையும் பொட்டம்மான் பகிரங்கமாக விடுத்துள்ளார்.
இன்று புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் உட்பட தலைவர்கள் மட்டத்தில் சுமார் 30 க்கும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே எஞ்சியிருக்கின்றனர். அவர்களில் அரச படையினருக்கு எதிராகப் படையணியினருக்குத் தலைமை தாங்கி தாக்குதலை நடத்தக் கூடிய தலைவர்கள் பிரபாகரன் உட்பட பத்துக்கும் குறைவானவர்களே உள்ளனர். ஏனைய தலைவர்களில் சூசை, பானு, சொர்ணம் போன்ற தலைவர்கள் படுகாயப்பட்டவர்களாக உள்ளனர். மற்றும் பொட்டம்மான் உயர்மட்டத் தலைவராக இருந்தபோதும் ஆயுதப் படையணியினரை நடத்திச் சென்று யுத்தம் செய்யும் திறமையற்ற தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏனைய புலித்தேவன், பாலகுமார், நடேசன், திருநாவுக்கரசு, தஸ்கன்,இளங்கோ, இளங்குமாரன், இளந்திரையன், திலீபன் போன்ற தலைவர்கள் படையணித் தலைவர்களல்ல. இவர்கள் புலிகள் இருக்கும் அந்தக் குறுகிய பிரதேசத்தில் தான் இன்னும் இருக்கிறார்களா அல்லது தப்பியோடிவிட்டார்களா தெரியவில்லை. தலைவரின் ஏற்பாட்டின் கீழ் இவர்களில் சிலர் நாட்டைவிட்டு இந்தியாவுக்கோ, மலேசியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ தப்பிச் சென்றிருக்கலாம். எவ்வாறாயினும் புலிகளின் பேச்சாளராக இருந்த இளந்திரையன் இரகசியமாகப் படையினர் பகுதிக்குத் தப்பியோட முயன்று புலிகளால் பிடிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தற்போதுள்ள நிலையில் அரச படையினருடன் இறுதி மோதலுக்காக எஞ்சியிருப்பவர் தலைவர் பிரபாகரன் உட்பட ஜெயம், ரமேஷ், பிரபா ,பூரணி போன்ற பத்துக்கும் உட்பட்ட படையணித் தலைவர்கள் மட்டுமே ஆகும். இந்நிலையில், அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த முடியாத நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டால் அவர் தனதும் தனது அமைப்பினதும் இறுதி முடிவை மிகக் குறுகிய காலத்தில் அடைந்துவிடுவார். எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரசு கடந்த புதன்கிழமை விடுத்துள்ள இறுதி அறிக்கையில், தடுத்து வைத்திருக்கும் தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்கும்படி புலிகள் இயக்கத் தலைவர்களுக்கு இறுதிக் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உடன்படாத பிரபாகரன் தனது பயங்கரவாதப் பாணியில் தப்பியோடுபவர்களைச் சுட்டுக் கொல்லும்படி பொட்டம்மானுக்குக் கட்டளையிட்டுள்ளார். அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்காக தனக்கு அடுத்த தலைமை மட்டத்திலிருக்கும் வேலனுக்குப் பொட்டம்மான் சுட்டுக்கொல்லும் கட்டளையை இட்டுள்ளார். இதன் ஏற்பாடுகளின் கீழ் வேலனும் அவருடைய உளவு அணியினரும் தப்பியோடும் தமிழ் மக்களைச் சுட்டுக் கொல்லும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

0 commentaires :
Post a Comment