மட்டக்களப்பு மாநகர சபையை மக்கள் பிரதிநிதி கள் பொறுப்பேற்று ஓரா ண்டு பூர்த்தியை முன்னி ட்டு நேற்றுத் தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி வரை க்கும் ஒரு வாரத்திற்கான
நிகழ்வுகளை நடத்த மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. நேற்றுக்காலை சமய வழிபாடுகளுடன் ஓராண்டு பூர்த்தி நிகழ்வுகள் ஆரம்பமாகின. மட்டக்களப்பு ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலயத்திலும், புனித மரியாள் இணைப்பேராலயம், மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய மத வழிபாட்டுத் தலங்களில் சமய வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதிமேயர் ஆபிரகாம், ஜோர்ஜ் பிள்ளை, மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், மாநகர ஊழியர்கள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு சின்ன ஊறணி பேச்சியம்மன் கோவில் வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கு கிறவல் இடும் நடவடிக்கையும் நேற்று இடம்பெற்றதுடன் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளமும், மாநகர மேயரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாம் நாளான (18.04.2009) இன்று மட்டக்களப்பு எல்லை வீதி திசவீரசிங்கம் சதுக்கம் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்படுவதுடன் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு முதல்வர் சவால் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

0 commentaires :
Post a Comment