அம்பாறை மாவட்ட த்தில் குறைந்த நீர்ப்பாசன வசதிகளுடன் மரக்கறிவகை களை உற்பத்தி செய்வதற் கான வேலைத் திட்டமொ ன்றை கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கையின் கீழ் அம் பாறை மாவட்ட விவசா யப் பணிப்பாளர் நிமால் தயாரெத்ன மேற்கொண்டு ள்ளார்.
மாவட்டத்திலுள்ள கமநல சேவைப்பிரிவில் முழுமை யாக மரக்கறி உற்பத்தி செய் பவர்களின் விபரங்களும், அவர்கள் உற்பத்தி செய்யும் மரக்கறிவகைகளும், மேற் கொள்ளப்படும் நிலத்தின் பரப்பும், உற்ப த்திகள் சந் தைப்படுத்தும் வசதிகளும் உள்ளடக்கிய விபரங்கள் திணைக்கள வெளிக்கள உத்தி யோகத்தர்களால் சேகரிக்கப் பட்டு வருகின்றன.
குறைந்த நீர்ப்பாப்பாசன வசதிகளுடன் அதிகமான விளைச்சலைத் தரக்கூடிய காய்கறிகள் உற்பத்தி செய் வது, இயற்கையான உரம் பாவிப்பது போன்ற விபர ங்கள் தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு தெரிவு செய்யப்பட்ட உற் பத்தியாளர்களுக்கு பிரதே சத்திலுள்ள கமநல சேவை நிலையங்களில் நடாத்த ப்படவிருக்கிறது. தெரிவு செய்யப்படுபவர்களின் காணி யில் 45 அடி ஆழமான கிணறுகள் அமைத்துக் கொடுத்து, நீர் இறைக்கும் இயந்திரங்களும் எதிர்கால த்தில் வழங்கப்படவிருக்கிற தென்றும் தெரிவிக்கப்படு கிறது.
உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளை சந்தை ப்படுத்துவதற்கு மாவட்ட த்திலுள்ள கோப்சிற்றி விற் பனை நிலையங்களில் ஒழு ங்குகள் செய்யப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்படு கிறது.
0 commentaires :
Post a Comment