கடந்த 2004, சித்திரை மாதம் 10ம் திகதி அன்று அதிகாலை கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளை புலிப்பயங்கரவாதிகள் கொன்று குவித்த நாளே வெருகல் படுகொலையென கிழக்குவாழ் மக்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. புலிப்பயங்கரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி மடிந்த எம்மண்ணின் மைந்தர்களுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பிலும் கிழக்கு மாகாண மக்களின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்து கொள்கின்றோம். எம்மண்ணின் மைந்தர்கள் கிழக்குமாகாண மக்களின் விடிவுக்காய் தம்முயிர்களை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் ஆறானாலும் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நாமோ எம்மக்களோ வாழ்நாளில் மறக்கவும் முடியாது வரலாற்றில் இருந்து மறைக்கவும் இயலாது. அந்தப் படுகொலை அரங்கேறிய நாள் கிழக்குவாழ் மக்கள் அனைவரினது உள்ளங்களிலும் கவலை நிறைந்த நாளாகவே இருந்தது எனலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்திடம் ஈழப்போராட்தத்தில் பெரும் பங்காற்றிய போராளிகளாலும், அப்போராட்டத்தில் தம்முயிர்களைத் துறந்து தியாகங்களைச் செய்த மாவீரர்களின் பெற்றோர்கள் பொது மக்கள் என அனைவராலும் கிழக்குமாகாணம் சார்ந்த சில நியாயபூர்வமான கோரிக்கைகள் முன்வைப்பட்டது. ஆனால் அவர்களால் முன்மொழியப்பட்ட அனைத்து கோரிக்கைகளுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தினால் நிராகரிக்கப்பட்டு, மாறாக 2004-சித்திரை மாதம் 10ம் திகதியன்று அதிகாலை வெருகலாற்றில் நிலைகொண்டிருந்த கிழக்குமாகாணப் போராளிகள் மீது தாக்குதல் நடத்திய புலிப்பயங்கரவாதிகள் அவர்களை ஈவிரக்கமின்றி கொலை செய்திருந்தார்கள்.
அதைவிட மனித நாகரீகமற்ற செயல்களையும் புரிந்து தமது வக்கிரத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் நிதானமாகச் சிந்தித்து செயற்பட்டிருந்தால் அன்று வெருகலாற்றில் கிழக்கு மண்ணில் பிறந்த 120 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் வந்திருக்காது. தமது அமைப்பபைச் சேர்ந்தவர்களும் இன்று மரணத்தை சம்பவிக்க வேண்டிய நிலையும் வந்திருக்காது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிந்தனையில் மனிதத் தன்மையும் தர்மப்பார்வையும் வெருகலாற்றில் நிலைகொண்டிருந்த எம்சகோதரர்களிடம் அவர்கள் காட்டியிருந்தால் அன்று வெருகலாற்றில் எம்மக்களுக்காய் மாய்ந்த எம்மண்ணின் மைந்தர்கள் இன்றும் எம்மோடு இருந்திருப்பார்கள். ஆனால் அந்த இரண்டு குணாம்சங்களும் புலித்தலைமையின் இதயத்தில் இல்லாதமையினாலேயே எம்சகோதர உறவுகளை அன்று வெருகலாற்றில் கொன்று குவித்திருந்தார்கள். ஆனால் அவர்களின் அதர்மப் போக்கில் தர்மத்துடுடன்கூடிய செயற்பாடுகள் காணப்படாதமையினாலேயே இன்று அவர்களும் தமது இருப்புக்களையும் இழந்து உயிர்களையும் பறிகொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
எனவே பயங்கரவாதம் எந்நாட்டிலிருந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் பயங்கரவாதத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும். இந்நாடு சுபீட்சமடைய வேண்டும் எனக் கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு வெருகல் படுகொலையில் கொல்லப்பட்ட அனைவருக்கும் ஆறுவருடங்களானாலும் அவர்கள் எம்நெஞ்சங்களில் இருந்து என்றும் மாறமாட்டார்கள். அந்த உத்தம புருசர்களின் பெறுமதி மிக்க உயிர்கள் அன்று புலிப்பயங்கரவாதிகளினால் பறிக்கப்பட்டாலும் இன்று அவர்கள் தம்மக்களுக்காக, அம்மக்களின் எதிர்கால, தனித்துவமான அரசியல் தலைமைத்துவத்திற்காக மிகப்பெரும் ஆயுதம் ஒன்றை கிழக்கு மக்களின் விடிவுக்காக ஏற்படுத்தியது அவர்களின் உயிர்கள். வெருகல் ஆற்றில் அவர்களின் உயிர்கள் 2004-04-10 இல் பிரிந்தாலும் அதன் விளைவாலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அரசியல் கட்சியை கிழக்கு மண்ணில் தோற்றுவிக்க ஆவனசெய்தது.
எனவே எம்மண்ணின் மைந்தர்கள் புலிப்பயங்கரவாதிகளால் அன்று வெருகலாற்றில் கொல்லப்பட்டிருந்தாலும் அவர்களின் இழப்புக்கள் கிழக்கு மாகாண மக்களின் அரசியலுக்கான அத்திவாரமாக 2004-04-10 இல் வெருகலாற்றில் இடப்பட்டது. அவ்வத்திவாரமே கிழக்கு மக்களால் மெது மெதுவாகக் கட்டப்பட்டு 2008-தை மாதம் 21ம் திகதி அன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அரசியல் கட்சியை உதயமாக்கியது கிழக்கு மண்ணிலே. ஆதலால், எம்முறவுகள் வெருகலாற்றில் கொல்லப்பட்டாலும் அவர்கள் தம்முயிர்களின் இழப்புக்களுக்கு வரலாற்றில் மறக்க முடியாத அர்தத்தினை எம்மண்ணுக்கும் மக்களுக்கும் இட்டுச் சென்றுள்ளார்கள். அரசியலில் அநாதைகள் என்ற எம்மண்ணின், மக்களின் அவப்பெயரை உடைத்தெறிந்தார்கள். தனித்துவமான கட்சிக்கு விடை கொடுத்தது அவர்களின் உயிர் இழப்புக்கள். ஆதலால் வெகலாற்றில் 2004-04-10 அன்று புலிப்பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட எம்மண்ணின் உத்தமபுருசர்களுக்கு தமது கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள். அவர்களின் நினைவுகள் மானிடம் இவ்வையகத்தில் வாழும் வரை ஒலிக்கும். இதனை வரலாற்றில் இருந்து மறைக்கவோ மறுக்கவோ முடியாது என்று கூறிக்கொள்ளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய செயற்குழு தனது கட்சி சார்பிலும் கிழக்குமாகாண மக்கள் சார்பிலும் கண்ணீர் அஞ்சலிகளை வெருகல் படுகொலையில் கொல்லப்பட்டு வெருகலாற்றில் சங்கமமான எம்சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றது.

0 commentaires :
Post a Comment