அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பொத்துவில் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட 23 பாடசாலைகளிலும் தொடர்ச்சியாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யு மாறு ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்களும் பெற்றார், பாடசாலை அபிவிருத்தி சபை பழைய மாணவர் சங்கங்கள், ஆசிரியர் கள் இணைந்து அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன் ஒன்று திரண்டு ஆரம்பித்த பேரணி நீதிமன்ற சந்தி வழியாக பிரதான வீதியூடாகச் சென்று பொத்துவில் பிரதேச செயலாளர் ஏ. எச். எம். அன்சாரிடம் மகஜரை கையளித்தபின் பொத்துவில் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம். எல். ஏ. காதரிடமும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கான மகஜரை பிரதி கல்விப் பணிப்பாளர் எம். ஐ. எம். முத்தலிபிடமும் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் சகல பாட சாலைகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
பொத்துவில் கோட்டத்திற்குட்பட்ட பாட சாலைகளில் நீண்ட கால ஆசிரியர் பற்றாக் குறையாக 150 பேர் இருந்தும் இக்குறை பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாய் கல்வி அமைச்சின் அனுசரணையின்படி அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வையினதும் அக்கரை ப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஹாஷிம் ஆகியோரின், அயரா முயற்சி யால் கிழக்கு மாகாண கல்வியமைச்சினால் 62 ஆசிரியர்கள் பொத்துவில் கோட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையி லிருந்து 2009 ஜனவரியில் 10 ஆங்கில ஆசிரியர் களும் அக்கரைப்பற்று வலயத்திலிருந்து மேலதிகமாயுள்ள 33 பட்டதாரி ஆசிரியர்களும் கல்முனை வலயத்திலிருந்து 19 பட்டதாரி ஆசிரி யர்களும் பொத்துவிலுக்கு அனுப்ப ட்டும் 12 பேர் மட்டுமே பொத்துவில் பாடசா லைகளுக்கு வந்துள்ளனர்.
இதில் பொத்துவிலைக் காரணங்காட்டி திருகோணமலையில் நியமனம் பெற்ற புதிய ஆசிரியர்களும் இடமாற்ற உத்தரவை மீறியுள் ளதால் பொத்துவில் மாணவர்களின் கல்வி நிலை விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற வற்றிலும், உயர் கல்வியிலும் தொட ர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் ஆர்ப் பாட்ட பேரணியை நடத்தியதாக பழயமாண வர் சங்கம் பெற்றார் ஆசிரிய சங்கம், பிரதேச கல்வி அபிவிருத்தி சங்கம், மாணவர்கள் ஒன்றிணைந்து இவ் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

0 commentaires :
Post a Comment