4/06/2009

கண்ணீர் சிந்தி மன்னிப்பு கோரினார் பொட்டு அம்மான்


யுத்த முனைக்கு மேலதிக புலிகளை அனுப்ப முடியாமல் போனதற்காக புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் தனது உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
புதுக்குடியிருப்பில் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புகளையடுத்தே பொட்டு அம்மான் மன்னிப்பைக் கோரினாரெனத் தெரிய வந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள படையினர் நடத்திய தாக்குதலில் 420க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில், புலிகளின் வெலிஓயா பகுதி முன்னாள் பொறுப்பாளர் ஆதித்தியன் என்பவரும் இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரெனத் தொலைத் தொடர்பு கருவிகளை ஒட்டுக் கேட்ட போது தெரியவந்து ள்ளது. படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் மறைந்திருக்கும் புலிகளின் தற்போதைய நிழல் தலைவரும், உளவுப் பிரிவுப் பொறுப்பாளருமான பொட்டு அம்மான், கண்ணீர் சிந்திய நிலையில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
“சகல விடயங்களும் எனது கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்று விட்டது” எனக் கூறியுள்ள பொட்டு அம்மான் யுத்த முனையில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். புதுக்குடியிருப்பை முழுமையாகக் கைப்பற்றிய படையினர் அங்கே தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்


0 commentaires :

Post a Comment