4/04/2009

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அவர்களின் இழப்பானது எவராலுமே ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும். –கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்..


கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.ஆர்.எம். மஹ்றூப் இன்று காலமானார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் விவசாய அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொணடடிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் மரணம் தொடர்பில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட முதல்வர் இன,மத பேதங்களை மறந்து கிழக்கு மாகாணத்தின் நலனுக்காக உழைத்த ஒரு மனிதனை இன்று நாம் இழந்திருப்பதானது கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரமன்றி கிழக்கு வாழ் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு இழப்பாகவே நான் பார்க்கின்றேன்.
இரு தசாப்தங்களாக செயலிழந்திருந்த கிழக்கின் விவசாயத்துறையினை கிழக்கு மாகாணசபையினது தோற்றத்தின் பின்னர் வளர்ச்சியடையச் செய்ததில் பெரும் பங்கு வகித்தவராவார். கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ் இருக்கின்ற அனைத்துத் துறைகளையும் சரியான முறையில் வழிநடத்திச் சென்றவராவார். அத்தோடு கிழக்கில் முதன்முதலாக தேசிய நெல் அறுவடை தினத்தினை கிழக்கு மாகாண சபையும் விவசாய அமைச்சும் சேர்ந்து நடாத்திய போது முக்கிய பங்குவகித்வரும் இவரே.
கிழக்கில் கல்வி மான்கள், புத்திஜீவிகள் மிகவும் அரிதாக இருக்கின்ற இச் சந்தர்ப்பத்தில் அன்னாரின் மரணம் எவராலுமே ஈடு செய்ய முடியாததொன்றூகும். அத்தோடு கிழக்கின் விவசாயப் பெருமக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகவும் அமையும் எனக் குறிப்பிட்டட முதல்வர் சநத்pரகாந்தன் , அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு கிழக்கு மாகாண மக்கள் சார்பாகவும் மாகாண சபை சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



0 commentaires :

Post a Comment