சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிர் சென்ற புதன்கி ழமை புனித உம்ரா கட மையை நிறைவேற்ற சவூதி அரேபியா சென்றார். இவரை ஜித்தா மாகாண ஆளுநர் மிஷால் பின் அப்துல் அkஸ் வரவேற்றார். இவ் விஜயம் தனிப்பட்டவொன்று. ஜி-20 மாநாட்டில் பங்குபற்ற வென சவூதி அரேபிய மன் னர் உள்ளிட்ட முக்கிய அரச தலைவர்கள் லண்டன் சென் றதால் அரசியல் ரீதியான சந்திப்புகள் எதுவும் இடம்பெறாதென ஜித்தா மாகாண ஆளுநர் கூறினார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் ஒமர் அல்-பஷிர் விஜயம் மேற்கொண்ட ஐந்தாவது நாடாக சவூதி அரேபியாவு ள்ளது. இதற்கு முன்னர் எரித்ரியா, எதியோப்பியா, கட்டார் ஆகிய நாடுகளுக் கும் சூடான் ஜனாதிபதி சென்றார். கட்டார் மாநா ட்டை முடித்துக் கொண்டு அவர் புனித உம்றாக் கட மையைச் செய்யும் நோக்கு டன் மக்கா செல்லவென சவூதி அரேபியாவுக்கு வந்து ள்ளார்.
இரண்டு தினங்கள் அவர் சவூதி அரேபியாவில் தங்கவு ள்ளார். சூடான் ஜனாதிபதி க்கு எதிரான பிடியா ணையை கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாடு முற்றாக நிராகரித்தமை தெரி ந்ததே. இதனால் ஜனாதி பதி ஒமர் அல்-பஷிருக்கு தைரியம் பிறந்துள்ளதை அவ ரது வெளிநாட்டுப் பயண ங்கள் நிரூபிக்கின்றன. சர்வ தேச பிடியாணை பிறப்பிக் கப்பட்டுள்ளதால் வெளிநா ட்டு விஜயங்களைத் தவிர்க் கும்படி அவரிடம் பல நாடுகள் வேண்டிக்கொண் டன.
இவ்வாறான விஜயங் களில் ஒமர் அல்- பஷிர் கைது செகய்யப்பட வாய்ப்பு ள்ளதைக் காரணம் காட் டியே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது பற் றிக் கருத்துக் கூறிய சூடான் ஜனாதிபதி, சூடானை விட்டு வெளியேற முடியாத நிலை எனக்குத் தோன்றியுள்ள தாகப் பலர் கூறினர். இதைப் பொய்யாக்கிக் காட்டவே நான் வெளிநாட்டு விஜயங் களை மேற்கொள்கின்றேன். பிடியாணை பிறப்பிக்கப் பட்ட பின்னர் ஐந்து நாடு களுக்குச் சென்றுள்ளேன் எனக் கூறினார்.
0 commentaires :
Post a Comment