4/02/2009

புதுக்குடியிருப்பு மோதலில் சாள்ஸ் அந்தனி காயம்

புலிகளின் தலைவர் வேலு பிள்ளை பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்தனி புதுக்குடி யிருப்பு பிரதேசத்தில் படை யினர் நடத்திய தாக்குதல் களில் படுகாயமடைந்துள்ள தாக இராணுவப் பேச்சா ளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, புலிகளின் தொழில்நுட்ப பிரிவின் முக்கியஸ்தர் கிருபாகரனும் படையினரின் தாக்குதல்க ளில் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரி விக்கிறது. கடந்த ஓரிரு வார ங்களுக்கு முன்னர் புதுக்குடி யிருப்பு பகுதியில் படையி னருக்கும், புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் கள் இடம்பெற்றன.
இதன்போது சுமார் இரு தடவைகள் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்தனியும் புலிகளுடன் கள முனை யில் நடவடிக்கையில் ஈடுப ட்டிருந்தார். இதன்போது, படையினர் நடத்திய கடு மையான தாக்குதல்களில் சார்ள்ஸ் அன்தனி உட்பட புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் காயமடைந்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.
கடந்த ஓரிரு வாரங்க ளுக்கு முன்னர் இந்தச் சம் பவம் இடம்பெற்றிருந்த போதிலும் பாதுகாப்புப் புலனாய்வுத் துறையினர் நேற்றைய தினமே உறுதி செய்துள்ளதாகவும் பிரி கேடியர் குறிப்பிட்டார்.
பொது மக்களுக்காக அர சாங்கம் அறிவித்துள்ள பாது காப்பு வலயத்தில் அமைக்க ப்பட்ட தற்காலிக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, படை யினர் நடத்திய மற்றுமொரு நேரடித் தாக்குதல்களில் மதி வழகன் என்று அழைக்கப் படும் எஸ். கிருபாகரன் என் பவர் கொல்லப்பட்டுள்ளார்.
புலிகளின் தொழில்நுட்ப முக்கியஸ்தரான இவர், புலிகளின் செய்மதி, வா னொலி தொலைத்தொடர்பு வலை யமைப்பின் பிரதான இணைப்பாளராகவும் செயற் பட்டுள்ளார் என்றும் பாது காப்பு அமைச்சு தெரிவி க்கிறது


0 commentaires :

Post a Comment