4/01/2009

அரபு நாடுகளின் வருடாந்த உச்சிமாநாடு கட்டாரில் ஆரம்பம்

அரபு நாடுகளின் வருடாந்த உச்சிமாநாடு இன்று திங்கட்கிழமை கட்டாரில் ஆரம்பமானது.

இந்த உச்சிமாநாட்டின் ஆரம்ப நாளில் மேற்படி அரபு அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் 22 நாடுகளில் 17 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த இரு நாள் உச்சிமாநாட்டின் முதல் நாள் கூட்டமானது சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத்தின் உரையுடன் ஆரம்பமானது. டார்பூரில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சூடான் ஜனாதிபதி ஓமர் அல்பஷீரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டார்.

மேற்படி குற்றச்சாட்டுகளின் நிமித்தம் கடந்த 4 ஆம் திகதி ஒமர் அல்பஷீரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணையை பிறப்பித்திருந்தது. கட்டாரின் தலைநகருக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க செயலாளர் பான் கீ மூனும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

""சூடான் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடாகும். இந்நிலையில் சுதந்திர நீதி அமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சூடானுடன் ஐக்கிய நாடுகள் தொடர்பு கொள்வதை தடுக்க முடியாது'' என ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 commentaires :

Post a Comment