மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்திருந்த குடும்பிமலை கிராம மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள அகதி முகாம்களில் இவர்கள் தங்கியிருந்தனர். இன்று 12 பஸ்களில் 327 குடும்பங்களைச் சேர்ந்த 1400 பேர் மீள் குடியமர்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கிரான் பிரதேசத்திலுள்ள குடும்பிமலை கிராமத்தில் மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்ததையடுத்தே மீள் குடியேற்றம் இடம்பெற்றுள்ளது
0 commentaires :
Post a Comment