சமுர்த்தி அதிகார சபை 3060 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 87 கிராமங்கள் இவ்வாண்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி. குணரட்னம் தெரி வித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்டுள்ள 87 கிராமங்களிலும் இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பல்வேறு கருத்திட்டங்கள் மற்றும் வறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் திரிய பியச வீட்டு அபிவிருத்தி என்பன மேற்படி திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.
இக்கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள மக்கள் சபை மூலம் அடையாளப்படுத்தப்பட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரினால் முன்மொழியப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் குணரட்னம் மேலும் தெரிவித்தார்.

0 commentaires :
Post a Comment