4/01/2009

கிழக்கு மாகாண கைத்தொழில் மேம்பாட்டுக்கு ரூ.86 மில். நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் மேம்பாட்டுக்கென கிழக்கு மாகாண கிரா மிய, விவசாய, கால்நடைவள அமைச்சு 86 மில்லியன் ரூபாவை இவ்வாண்டு செலவி டவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஏ. ஆர். எம். மஹ்ரூப் தெரிவித்தார்.
இந்நிதியின் மூலம் கிராமிய மட்டத்தில் கைத்தறி தொழிலை மேம்படுத்தி புத்துயிர் ஊட்டவும் மரவேலை, தும்புக் கைத் தொழில், மட்பாண்டம் கைத் தொழில் என்பனவற்றை விருத்தி செய்வதுடன் அது தொடர்பான விற்பனைக் கூட்டங்களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாவட்ட மட்டத்தில் சிறு அளவிலான கைத்தறிக் கிராமங்களையும், கைத் தொழில் கிராமங்களையும் ஏற்படுத்தி வேலை யின்மையை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


0 commentaires :

Post a Comment