ஏப்ரல் 10, அது என்றும் மாறாத வடுவாக கிழக்கு மாகாண மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்ட ஒரு கரிநாள். அன்றுதான் யாழ் மேலாதிக்கம் சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து கிழக்கு மக்களின் உரிமைக்குரல்கள் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்ட நாள். வெருகலாற்றுக்கரைகளை கடந்து கிழக்கு மண்ணின் மீது வன்னிப்புலிகள் தமது காட்டுமிராண்டித்தனங்களை அரங்கேற்றியநாள். ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் ஏவலாளிகள் கிழக்கு மாகாணத்துக்குள் புகுந்து ஜனநாயக வழிக்கு திரும்பிய 175 போராளிகளை கொன்று வீசிய நாள். பெண்போராளிகளை மானபங்கம் செய்து குற்றுயிராக்கி கொலைவெறியாடிய நாள். 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ம் நாள் இந்த படுகொலையை நிறைவேற்றியதன் ஊடாக எந்த வரலாற்றின் தொடக்கத்தைக் கட்டிப்போட வன்னிப்புலிகள் முயன்றனரோ அந்த வரலாறு இன்று நிமிர்ந்து நிற்கிறது. அன்று கொன்ற வீசப்பட்ட கிழக்கு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அந்த கொடிய நாளை கரிநாளாக அனுஸ்டிக்கும் கிழக்கு மாகாண மக்களுடன் எமது முன்னணியும் கரம் கோர்த்துக் கொள்கிறது. அந்தக் கரி நாளில் தமது இன்னுயிர் ஈந்த அந்த 175 போராளிகளையும் நாமும் அஞ்சலி செலுத்தி ஆராதிக்கின்றோம்.
வெருகல் ஆற்றுப்படுக்கையெங்கும் -
எம்வேந்தர்கள் வீழ்ந்து கிடந்த போது
வெட்டப்பட்ட எம்கரங்கள்
மீண்டும் முளைத்தனஆயிரமாய்.........................
ஜனநாயகத்திற்கான கிழக்கிலங்கை முன்னணி
10-04-2009
0 commentaires :
Post a Comment