பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்களில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பாதுகாப்புப் படையினர் நேற்று வெற்றிகரமாக மீட்டெ டுத்துள்ளனர்.
பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பணியில் ஈடு பட்டுள்ள இராணுவத்தின் 58வது படையினர் புதுமாத் தளன் மற்றும் அம்பலவான்பொக்கணை பிரதேசங்களின் ஊடாகவே இந்த 35 ஆயிரம் மக்களை மீட்டெடுத்துள்ள தாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.
இதேவேளை, புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மேலும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பாதுகாப்புப் படையின ரை நோக்கி வருவதற்கு தயாராக இருப்பதாக மேலும் தெரிவிக்கிறது.
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக் களை மீட்கும் நடவடிக்கையை நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படைப் பிரிவினர் பாதுகாப்பு வலயத்திற்கு மேற்காக புதுமாத்தளன், அம்பலவான்பொக்கணை பிரதேசத்தில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ மீற்றர் நீளமான மண் அணையை நேற்றுக் காலை கைப்பற்றியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
மிக நீளமான மண் அணையை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி சிவிலியன்கள் பாதுகாப்பாக வெளியேற பாதைகளை திறந்ததை அடுத்து அங்கிருந்த பல ஆயிரக் கணக்கான பொதுமக்களை உடனடியாக மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.
மண் அணையை கைப்பற்றி, பொதுமக்களை படையினர் மீட்டெடுப்பதை அவதானித்த ஏனைய பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் நேற்றுக் காலை தொடக்கம் இராணுவத்தினரை நோக்கி சாரை சாரையாக வர ஆரம்பித்தனர்.
பாதுகாப்பு வலயத்தில் அமைக்கப்பட்டி ருந்த தமது கூடாரங்களை இருந்த படியே விட்டுவிட்டு நாலாபாகங்கள் ஊடாக சிதறியடித்து ஓடிவந்த, ஆயிரக் கணக்கான பொதுமக்களை படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்த வண்ணமிருந்தனர்.
வன்னி நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் ஒரே நாளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரண்டு வந்தமை இதுவே முதற் தடவையாகும் என்றும் உலகிலேயே மிகப் பெரிய மீட்புப் பணிக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களை பணயமாக வைத்து புலிகள் மேற்கொண்டு வந்த துன்புறுத்தல் களையும், அடக்கு முறைகளையும் முற்றாக வெறுத்த பாதுகாப்பு வலயத்தி லுள்ள பொதுமக்கள் தமது கட்டுப்பா ட்டையும் மீறி பாதுகாப்பு படையினரை நோக்கி வேகமாகச் செல்வதை அவதா னித்த புலிகள் செய்வதறியாது இராணு வத்தை நோக்கி செல்லும் சிவிலியன்க ளுடன் தங்களது தற்கொலை குண்டுதாரிகளையும் அனுப்பிவைத்துள்ள னர்.
இராணுவத்தை நோக்கி வந்துகொண்டிருந்த மக்களோடு மக்களாக கலந்த புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் தம்மிடமிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக பிரிகேடியர் தெரிவித்தார்.
பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் நடத்திய மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட அதேசமயம் மக்களின் வரு கையைத் தடுக்கும் வகையில் பொது மக்களை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதுடன் மோட்டார் மற்றும் பீரங்கிகளை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொதுமக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் தப்பி வருவதையும் நேரில் பார்வையிடும் பொருட்டு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, படையினரால் மீட்டெடு க்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்க ளுக்குத் தேவையான சகல அத்தியாவசிய வசதிகளை உடனடியாக செய்து கொடுக் குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகம் எஸ். பி. திவாரத்தினவுக்கு ஜனாதிபதி பணிப்பு விடுத்துள்ளார்.
பிரபாகரன் உட்பட எஞ்சியுள்ள புலிகள் சரணடைய நேற்று நண்பகல் 12 மணிமுதல் 24 மணிநேர காலக்கெடுவை அரசாங்கம் விதித்துள்ளது.
0 commentaires :
Post a Comment