4/03/2009

ஜி-20 மாநாடு லண்டனில் ஆரம்பம்நாலாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் 86 பேர் கைது, ஒருவர் பலி



பிரிட்டனில் நேற்று ஜி-20 மாநாடு ஆரம்பமானது. இரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இம் மாநாட்டில் உலகின் வளர்ந்த நாடுகள் 20 பங்கேற்கின்றன. மற் றும் ஐரோப்பிய யூனியனும் இதில் கலந்துகொண்டது. 1930ம் ஆண்டி லிருந்து இம்மாநாடு வருடாவரு டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
லண்டன் மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் வைக்கப்பட்டுள்ள பதாகை
இம்முறை சவூதி அரேபியாவும் இந்த அமை ப்பில் இணைந்து கொண்டது. உல கின் பொருளாதார விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக் குடன் இம்மாநாடு ஆரம்பிக்கப் பட்டது. நிதிநெருக்கடியில் மாட் டியுள்ள இன்றைய உலகிற்கு லண்டனில் நடைபெறும் மாநாடு முக்கிய கவனமாயு ள்ளது.
வறு மைக்கு முக்கியத்துவம் வழங்கும் படி 16வது பாப்பரசர் வேண்டியு ள்ளதுடன் லண்டன் மாநாடு இன் றைய பொருளாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணாவிட் டால் உலகில் பெரும் விளைவுகள் ஏற்படுமென எச்சரித்து ள்ள ஐ.நா செயலாளர் பான்கி மூன் வங்கிகளின் செயற் பாடுகளைக் கட்டுப்படுத்த முன்வரும்படி ஜி-20 நாடுக ளின் தலைவர்களைக் கோரியுள்ளார்.
ஏப்ரல் 01ம் திகதி மாநாட்டுக்கான ஆயத்தங்கள் நடந்தபோதும் 2ம், 3ம் திகதிகளில் தான் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகின்றது. இக்கூட்டத்தை எதிர்த்து லண்டன் நகரில் நாலாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். முட் டாள்களின் தினத்தன்று ஆரம்பமான இம்மாநாடு முட்டாள்களின் வேலை.
இவர்களின் அசட்டுத்தனத்தால் உலக பொருளாதாரம் விழுந்ததாகத் தெரிவித்தனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தாலும் பின்னர் இது வன்முறையாக மாறி வருகின்றது. இது வரை 86 பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.
ஒருவர் பலியாகியுள்ளார். நிலைமை மோசமடைந்தால் துப்பா க்கிப் பிரயோகம் மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், சவூதி அரேபியா, ஜப் பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் இம்மாநாட்டில் பங் கேற்றன. லண்டனில் கூடியுள்ள தலைவர்கள் தனித்தனி சந்திப்புக்களையும் கூட்டான சந்திப்புக்களையும் நடத்து கின்றனர்.
பெரும்பாலும் இச் சந்திப்புகள் மாநாடு முடி வுற்று ஓய்வு நேரங்களில் நடைபெறுகின்றது. ரஷ்ய, அமெ ரிக்க தலைவர்களின் சந்திப்பில் உலகில் ஆயுத போட் டிகளைக் கட்டுப்படுத்த இணக்கம் கண்டுள்ளனர். அபிவி ருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு மேலதிகமாக கடன் களை வழங்கவும், வட்டி வீதத்தைக் குறைக்கவும் வங்கி களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முடிவடைந்த முதலாம் கட்ட மாநாடு இன்று இரண்டாவது நாளாகவும் நடைபெறுகி ன்றது.



0 commentaires :

Post a Comment