4/30/2009

மட்டு/விளையாட்டு துறைக்குத் தடையாக அமையும் வெபர் மைதானம் மாற்றப்படுமா. பூ.பிரசாந்தன்


தூரநோக்கு சிந்தையும், நிலையான திட்டமிடலும் குறைகின்ற வேளையில் அபிவிருத்தி என்பது கனவாகச் சென்றுவிடும். விளையாட்டுத்துறை மனித வாழ்விலும் சமுதாய எழுச்சிக்கும் மிக முக்கியமானதாகும். ஆனால் இன்று வெறும் பொழுதுபோக்கிற்குக் கூட விளையாட்டினை பயன்படத்தாத நிலை மேலாங்கிவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முக்கிய விளையாட்டு மைதானமான வெபர் விளையாட்டு மைதானம் வீரர்களின் பாவனைக்காக பயன்படத்தப்பட்டு வருகின்றபோதும். ஆரகில் நீதிமன்றம் அமைத்துள்ளதினால் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு விளையாட்டு நிகள்வுகளின்போது ஒலிபெருக்கி இடைஞ்சலாக உள்ளது. ஒலிபெருக்கி பாவனை, பான்டுவாத்திய நிகழ்வு, இசை நிகழ்வுகள், ஆரவாரம் என எல்லாம் இணைந்துதான் விளையாட்டு நிகழ்வு. இவை இல்லாதவிடத்து வீரர்களுக்கான உந்துதல் குறைவடைகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வெபர் விளையாட்டு மைதானம் அல்லது நீதிமன்றம் இரண்டும் மிக மிக முக்கியமானவை. இவற்றில் ஒன்று நிச்சயமாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதன் மூலமே இரு துறையும் சிறப்பாகச் செயற்பட முடியும். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இது தொடர்பாக அக்கறையுடன் செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதுவருடத்தினை முன்னிட்டு மட்ஃபுதுக்குடியிருப்பு இளைஞர்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.அமலநாதன் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.


»»  (மேலும்)

கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் நலன்களிற்காக குரல்கொடுக்க முடியும். - கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை


தற்போதைய சூழ்நிலையில் இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் கிழக்கு மாகாண சபையினால் மாத்திரமே சிறுபான்மை மக்களின் நலன்களிற்காக குரல்கொடுக்க முடியும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாணத்துறை, கிராமிய மின்சார, நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் உதுமாலெவ்வை தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்ட மூலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு திருத்தங்கள் செய்யப்பட்டு சபையில் இச்சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டால் தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இதனை ஆதரிப்போம்.
தற்போதுள்ள இச்சட்ட மூலத்தை அங்கீகரிப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகம் செய்வதற்கு நாங்கள் தயாரில்லை.
தலைவர் அஷ்ரப், தலைவர் அதாஉல்லா ஆகியோர்களின் தலைமைத்துவங்களினால் உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள். ஆளும் கட்சியில் இருந்தவாறே எங்களது நிலைப்பாடுகளைத் தைரியமாக அறிவித்துள்ளோம்.
கிழக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பில் நான்கு கட்சிகள் உள்ளன. இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, சிறுபான்மை மக்களது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே இச்சட்ட மூலங்களை தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பர்.
இதுபோலவே முதலமைச்சர் எஸ்.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள் என்றார்.




»»  (மேலும்)

குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


கிழக்கு மகாணத்தின் அபிவிருத்திப் பணிகளும் சமூகஒருமைப்பாடும் முன்னேற்றப் பாதையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற வேளையில் இரு தினங்களில் பாடசாலை மாணவர்கள் மூவர் காணாமல்போய் உள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான நிலமை மீண்டும் பெற்றோர் , மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்வையும் பயங்கரவாதம் தலைதூக்கி விடுமோ என்ற பீதியினையும் ஏற்படத்தியுள்ளது. இக்கொடூர செயலினை மேற்கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன மாணவர்களின் விபரங்கள் வருமாறு.

1.சதீஸ்குமார்-தனுஸ்சிகா(08)மட்/ யூனியர் பாடசாலை.
2.வள்ளுவன் -மதிசுதன். (15)ஏறாவூர் விபுலானந்த வித்தியாலயம்.
3.ஏரம்பமூர்த்தி- ஜனார்த்தனன். (12)மட்/ சிவானந்தா வித்தியாலயம்.

»»  (மேலும்)

தம்பி நீ எழுவாய்! இங்கிருப்பது பயனிலை!! சென்று வருவது செயற்படுபொருள்!!! -எஸ்.எம்.எம் பஷீர்-


“நாட்டை எல்லாந் தொலைத்தாய்;:--அண்ணே!

நாங்கள் பொறுத்திருந்தோம்

மீட்டும் எமை யடிமை –செய்தாய்,

மேலும் பொறுத்திருந்தோம்”

-சுப்பிரமணிய பாரதியார் -

எனது இளம்பிராய பாடசாலை தமிழாசிரியர் பராக்காயிருக்கும் மாணவரைப் பார்த்து “இலக்கண” சுவையுடன் குறிப்பிட்டது என் ஞாபகத்திற்கு வருகின்றது. அதுவே இக்கட்டுரையின் தலைப்பாக இன்றைய புலம்பெயர் புலிசார் மாணவர்களின் நிலையினைப் புலப்படுத்துவதாக தோன்றுகின்றது. மாணவர்கள் பாடசாலைச் சீருடையுடன் ஆர்ப்பாட்டங்களில் லண்டனில் கலந்து கொள்வதுடன் பிரத்தியேகப் போதனா நிலையங்களில் பெருமளவில் செல்வது குறைந்திருப்பது கண்டு ஒருவர் தமிழ் மாணவர்கள இபபோக்கினைக் கடைப்பிடித்தால் இங்குள்ள ஆசிரியர்களும் இவ்வாறு புலன் இழந்து புலிக்கொடித் தமிழீழத்தில் கனவு காணத் தொடங்கும் மாணவர்களைப் பார்த்து என்ன கூறுவார்கள் என நினைத்தபோது இக்கட்டுரைக்கான தலைப்பும் விழுந்தது. தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டமும் அதன்பின்னரான ஆயதப் போராட்டமும் தலா இரண்டு தசாப்தங்கள்; நடந்து முடிந்தாயிற்று.. இரண்டும் தோல்வி என்றாலும் விக்கிரமாதித்தர்கள் சளைக்கவில்லை. புலம்பெயர் நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இல்லாமல் இப்போது அறப்போராட்டம், அறவழி முற்றுகைப் போராட்டம் என்றெல்லாம் மூன்றாவது பரிமாணப் போராட்டம் இன்று கருக்கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் புலம்பெயர் தளங்களில் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கு நீடிக்கலாமா என்னும் கேள்விக்கு அனிதாப் பிரதாப் (பிரபாகரனின் பரமரசிகை) பிரபாகரனுக்கு வயது 54 மேலும் இரு தசாப்தங்களுக்கு போராடுவாரென கட்டியங் கூறிவிட்டார் .போராட்டம் பலிவிதம் போராடுவோர் புலிரகம் “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும” என்ற எம்.ஜி ஆரின் சினிமாப்பாடலின் வரிகளை எல்லாத் தமிழர் இயக்கங்களும் வரித்துக்கொண்டன. ஏனெனில் அவர்கள் எல்லோருமே ஆயதந் தரித்துப் போராடிய படைகள்தான். ஆனால் புலிகளும் இதனை வரித்துக்கொண்டாலும் குறிப்பாக 1998ல் லண்டன் புலிகளின் முகவரும் இன்றைய பயங்கரவாத குற்றவாளியாக தண்டிக்கப்பட்டிருக்கும் சாந்தன் தலைமையிலான ஐக்கிய தமிழர் அமைப்பு (United Tamil Organisations) தனது ஈழம் ஹவுஸ் வெளியீடுகளில் புலகளே தமிழர்கள், புலிகளல்லாதார் தமிழர்களல்ல என்ற தமது கோட்பாட்டினை உறுதி செயததால் “வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் தமிழ்படை தோற்கின் எப்படை வெல்லும்,” என்று புலிப்படைதான் தமிழ்படைஎன்று நிறுவியிருந்தனர். இன்றும் அறப்போர் தொடுத்திருக்கும் புலிகளின் முகவர்கள் அறம் என்ற சொல்லின் தமிழ் பொருள் அறியாதோர். அறவமி முற்றுகை என்று கல்லெறிந்து இந்தியத் தூதரகத்தின் சாளரக் கண்ணாடிகளை உடைப்போர்கள் கோஷமும் புலிகளின் தாகம் என்பதனை மாற்றி “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம”; என்று புலிகள் எல்லாம் தமிழர்கள்தான் என்று உறுதிசெய்கிறார்கள். இனிமேல் புலிகளல்லாதவர்கள் தமிழர் இல்லையா என்னும் கேள்வி என்றுமே தொக்கிநிற்கப்போகின்றது. ஆக மொத்தத்தில் புலிகளின் ஆய்வாளர்கள் இன்னும் இலங்கையிலே தமிழீழத் தனியரசு என்னும் கற்பனைக்கு ஒவ்வாத சூழல்கள் களத்திலும், தளத்திலும் நிலவும்போதும் சுருதி குறையாமல் தினமும் புலிப்படை வெல்லும் என்று உச்சாடனம் பண்ணுகின்றார்கள். வன்னியிலிருந்த வெளியேறும் மக்களைப் பார்த்தால் வயிறு பதைக்கிறது அதிலும் அங்கிருந்து வருகின்ற குரல்கள் கணிசமானவை மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் தமிழ் உச்சரிப்புடன்தான் ஒலிக்கின்றது குறிப்பாக 1977ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அப்போதைய ஆயதக்குழுக்கல் வவுனியா எல்லைப் பிரதேசங்களில் தமது பாதுகாப்புகருதி (வன்னித் தமிழர்களின்) கொண்டுவந்து குடியேற்றினர். இவர்கள் தமிழீழக் கருத்தியலை தவிர்க்கவொண்ணாமல் சுமந்து புலிகளின் கைதிகளாக வன்னியில் அல்லலுற்றவர்கள். அவர்களில் பலர் இன்று சிங்கள மொழியில் தெளிவாக எடுத்துக் கூறுவதனை கேட்க, காண, முடிகின்றது. இந்த நிலை கிழக்கிலும் காணப்பட்டது, சேனைப்பயிர்ச்செய்கை மாறுபட்ட வேலைச்சூழல், சுய தொழிலாக்கம், கருதி இடம்பெயர்ந்து உறுகாமம், புல்லுமலை போன்ற இடங்களிலும் மலையகத் தமிழர்கள் குடியேறினர். அவ்வாறு குடியேறியவர்களில் பலர் ஆயதக் குழுக்களிலும் இணைந்தனர். விடாக்கண்டன், கொடாக்கண்டனாக சிறீலங்காவின் அரசியலமைப்பினை நாங்கள் அங்கீகரிக்கவில்லை அதற்கு வெளியேதான் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தமிழ் செல்வன் கூறியதுபோய் இன்று அடிமேல் அடியடிக்க அம்மி நகர்ந்த கதையாய் அரசியல் அமைப்பிற்கு உட்பட தீர்வுகாண தயார்என்பதாக நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்திற்கு கோரிக்கைவிடும் புலிகளைவிட புலம்பெயர் புலிப் போஸகர்கள் ஆபத்தானவர்கள். புலிகள் அவரோகணத்தில் தமிழீழ கீதம் பாடத் தொடங்கினாலும் இந்த ஆசாடப+திகள் அவரோ கணத்தில்தான் பாடத் தயாராகவிருக்கிறார்கள். புலியை வழர்த்தவர்கள் புலி மாமிச வெறிகொண்டு அலைந்தபோது சபாஸ்போட்ட றிங் மாஸ்ரர்களுக்கு தேவை கோரப்புலியும் அது காவல்காக்கும் தமிழீழமும். பிரபல இந்தியப் பத்திரிகையாளர் நிருபாமா சுப்பிரமணியம் 2000 ம் ஆண்டு இறுதிப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு விடயம் சுட்டிக்காட்டப்படவேண்டியது. ஏரிக் சொல்கெய்ம் பிரபாகரனைச் சந்தித்துவிட்டு பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தைமூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிரமாக இருக்கின்றார் எனக் குறிப்பிட்டவுடனே மேலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இலங்கைப் பிரச்சினைக்கு இலங்கையின் நில ஆளுகைக்கு உட்பட்டு தீர்வுகாண நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் என்ற நிலை தோன்றியபோது இதற்கான புலம்பெயர் தமிழர்களிடம் இதற்கான அபிப்பிராயங்களை தொகுத்து அவர் புலம்பெயர் தமிழர்கள் ஆயத யுத்தத்தினை தொடர்ந்து நடாத்தி தனிநாடு காணுவதனையே விரும்புகிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும் அவர் அவர்களில் பலர் ஊலடிநச ளுpயஉந ஈழத்தில் ஏற்கனவே வாழ்பவர்கள் எனக்குறிப்பிட்டார். மேலும் வாரி வழங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழீழம் சாத்தியமற்றதை அங்கீகரிக்க முடியாது எனக்குறிப்பிட்டிருந்தார். அது மாத்திரமன்றி 2006 யூனில் லண்டனில் இடம்பெற்ற புலி ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் துறைசார் கற்றவர்கள் தங்களது தமிழீழம்தான் தீர்வு என்பதனை வெளிப்படுத்தினர். குறிப்பாக விஜயதேவா என்னும் பொறியியலாளர் போர்தான் முடிவு என்பதை வலியுறுத்திக் கூறினர். இதில் ஒருவர் இதுவரை இறந்துபோன தமிழர்களுடன் இன்னுமொரு பத்தாயிரம் அல்லது அதற்கு கிட்டியவர்கள் இறப்பார்கள் அது எங்களுக்கு பெரிய வித்தியாசமில்லை என்று போரும், இழப்பும் குறித்த முரசறைந்தார். இவ்வாறு புலம்பெயர் தனிநாட்டு ஆதரவினை றொய்டர் பத்திரிகையாளர் பீற்ற அப்ஸ் என்பவர் தனது அனுமானத்தில் பதிவு செய்துள்ளார். ஒருகதை ஞாபகம் வருகிறத ஒரு குருவும், சிஷியனும் ஒரு ஆற்றங்கரையைக் கடக்கநேர்ந்தபோது அக்கரையில் ஒரு இளம் பெண் இவர்களை அணுகி, தானும் அடுத்த கரைக்குப் போகவேண்டும் தனக்கு நீச்சலும் தெரியாதென்றும் தன்னை மறுகரைக்கு செல்வதற்கு உதவுமாறு வேண்டினார். அதனை குரு அபசாரம் பெண்ணைத் தொடுவது தமது துறவறத்திற்கு இழுக்கென்று ஆற்றில் இறங்கிய பின்னர் சிஷியன் இரக்கமீதியால் அப்பெண்ணையும் தன்னுடன் அக்கரைக்கு நீந்திக் கரைசேர்த்த பின்னர் தமது பயணத்தை குருவுடன் தொடர்ந்தபோது குரு தனது சிஷியனை தொடர்ச்சியாய் கண்டித்தவாறு சென்றார். இறுதியில் பொறுமை இழந்த சிஷியன் சொன்னார்.” ஐயா நான் அந்தப் பெண்ணை கரையிலே இறக்கிவிட்டேன் நீங்கள் இன்னுமா சுமக்கிறீர்கள்” என்று. தமிழீழத்தை புலி விட்டாலும் புலிப் போசகர்கள் விடுவதாய் இல்லை என்பதை இக்கதை எனக்க ஞாபகமூட்டுகின்றது.


»»  (மேலும்)

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-






“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”
-Jon Stewart American Actor and Comedian(1962)-
இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.
திடீரேன தோன்றி படுவேகத்தில் பரவும் இத்தகைய வைரசுகள் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப் பெயர் பெறுகிறது. பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் எனவும் பெயர்கள் உண்டு எனவே ஸ்வைன் ப்ளூ (Swine flu) என ஆங்கிலத்தில் கூறப்படுவதால் பன்றிக் காய்ச்சல் என தமிழில் கூறப்படுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இந்த காய்ச்சலைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸாகும் (Swine fluenza virus- SIV) பன்றிகளுக்குள் புகுந்துவிட்டால் அதன் சுவாசப்பாதையில் பயணிப்பதனூடாக சுவாசத்தை மட்டுப்படுத்தி பன்றிகளை கொன்றுவிடும். இந்த வைரஸில் பல வகைகள் (Strains) விஞ்ஞானிகளால் இனம் காணப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் தன்மைகள் தற்போது கண்டரியப்பட்டுள்ளன ஆர்.என்.ஏ.(R.N.A) வை அடிப்படையாகக் கொண்ட இந்த வைரசுகளின் ப்ளெஸ் பொயின்ட் அவை தங்கள் உருவை (Mutate) மாற்றிக்கொள்ளக் கூடியது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும்போது மனிதனின் உடலிலுள்ள தற்காப்பு முறைமையை (Immune System) இது வென்றுவிடுவதால் மனிதன் பாரதூரமாக இதனால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும் அபாயமும் உண்டு.
அதுமட்டுமல்லாமல் அது மனிதனுக்குள் புகுந்துவிட்டால் மனித உடலில் பல்கிப்பெருகி மனித சூவாசத்தினூடாக மற்றவரையும் தொற்றிக்கொள்ளக் கூடியது இந்த வைரஸ் இதற்கு H1N1 எனப் பெயரிட்டுள்ளனர். ஆகவே ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் வாழும் நமது மக்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்னிரென்டுபேர் அமெரிக்காவில் 2005 ம் ஆண்டு இனங்காணப்பட்டனர். என்றாலும் இந்நோயின் தன்மையினை கண்டறிந்து இது பன்றிகளிலிருந்து பரவியிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடுப்பு மருந்து பன்றிகளுக்கு ஏற்றப்பட்டபோது அமெரிக்காவில் முற்றாக இது தடுக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தனர்.
இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு (Asian Flu) ஆசியக் காய்ச்சல் என்ற ஒன்று நாற்பதைந்து மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதுனாயிரம் பேர்வரை இறந்து போனார்கள். அதன் பதினொரு வருங்களின் பின்னர் 1968 ஆண்டு தொடக்கம் 1969 ம் ஆண்டு காலப்பகுதியில் ஹோங்கோங் காய்ச்சல் (HongKong flu) ஐம்பது மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் முற்பத்தி மூவாயிரம்பேர் இறந்தார்கள். 1976ம் ஆண்டு அமெரிக்க படைவீரர்கள் ஐநூறுபேர் பன்றிக் காய்ச்சலால் (Swine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும் சில மாதங்களின் பின்னால் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதுடன் இந்நோய் மீண்டும் தொன்றுவதற்கு எந்த அறிகுரியையும் காணமுடியவில்லை என்று கூறியிருந்தனர்.
தற்போது ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய தேசங்களுடன் அவுஸ்ரேலியாவையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலானது ஸ்பானிஸ் ப்ளூ (Spanish flu) எனப்படும் ஸ்பானியக் காய்ச்சலிலிருந்து பன்றிக் காய்ச்சலாக மாற்றமடைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் பல இலட்ச்சம் மக்களை இந்தக் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் அபாயமிருப்பதால் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த எஸ்.ஐ.வி.(SIV) வைரஸ் வகை இரண்டு பிரவுகளாக காணப்படுகிறது இன்ப்ளூயென்ஸா சி (Influenzavirus C) அல்லது அதன் மற்றொரு உபபிரிவான இன்ப்ளூயென்ஸா ஏ (Influenzavirus A) என்பனவாகும் அவை.
இந்த வைரஸின் இன்ப்ளூயென்ஸா ஏயின் (Influenza virus A) உப கூறுகளான (H1N1, H3N2, and H1N2) இவை உலகம் முழுவதும் பன்றிகளில் கண்டறியப்பட்டிருந்தது. 1998ம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள பன்றிகளில் H1N1 காணப்பட்டது என்றாலும் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதகாலப்பகுதியில் அமெரிக்கப் பன்றிகளில் H3N2 கண்டறியப்பட்டிருந்த்து. என்றாலும் இரண்டாயிரத்து நாலாமாண்டு H3N2 காணப்பட்ட அமெரிக்கப் பன்றிகளிலும் துருக்கிய பன்றிப் பண்னைகளிலும் இந்தவகை வைரசுகளின் கூறுகள் மனிதனில் (HA, NA, and PB1) பன்றியில் (NS, NP, and M) பறவைகளில் (PB2 and PA) என காவப்பட்டிருந்தது
இதன் பிரதான வடிவமான எபியன் இன்ப்ளூயென்ஸா வைரஸ் (Avian Influenzavirus) H3N2 முதலில் சீன மற்றும் வியட்னாம் பன்றிகளில் இருப்பது கண்டறியப்பட்டபோது அவை இலகுவாக மனிதர்களின் காவப்படக்கூடியது என்றும் அவை காவப்படும்போது இலகுவாக மாற்றமடைந்து புதியவகைகளை தோற்றுவிக்கும் எனவும் உலக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். அவ்வாறே அது மனிதனால் H2N2 வாக காவப்பட்டு மீண்டும் பன்றிகளுக்கு தொற்றியுள்ளது 2004ம் ஆண்டு சீனாவில் பன்றிகளை சோதனையிட்டபோது H5N1 என்ற வடிவத்தில் கண்டறியப்பட்டது.
தற்போது மெக்ஸிக்கோவில் மனிதர்களை உலுக்கும் இந்தப் பன்றிக் காய்ச்சல் மெக்ஸிக்கோவின் பண்ணைகளிலிருந்து மனிதனுக்குள் புகுந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் அது எவ்வாறு மெக்ஸிக்கோவிற்கு வந்து சேர்ந்தது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.
இந்த வைரஸின் ஆர்.ஏன்.ஏவை பரிசோதித்தபோது அதில் வட அமெரிக்கப் பன்றிகளில் காணப்படும் வைரசின் சில ரசாயனங்களும் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதியல் பொருற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவிற்கு வந்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது
தற்போது மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும இந்த வைரஸ் காய்ச்சல் பன்றியின் இறச்சியை உண்பதால் பரவாது என்பதுடன் பன்றியின் இறச்சியை 75 டிக்கிரியில் சூடாக்கினால் அந்த வைரஸ் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.
இந்த நுண்ணுயிர்கள் சுவாசத்தின் மூலமாகவும் வாய், மூக்கு மற்றும் கண்களின் தொடுகையினால் பிரதானமாக பரவுவதாக ஆராச்சிகள் கூறுவதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அனைவரும் மூக்கு வாய்களை மூடியவர்களாக காண முடிகிறது மற்றுமல்லாமல் காதலர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை நோக்கக் கூடியதாக உள்ளது.
தமிழில் ஒரு சொல்வழக்குண்டு “அவளைத் தொடுவானேன் கவலைப்படுவானேன்” எனறு எனவே பன்றியின் இறச்சியை புசிக்கும் நண்பர்கள் அவற்றை தவிப்பதன் மூலம் பன்றி பண்ணைகளை குறைக்க வழி செய்தால் உலகில் பல உயிர்களை காக்க அது வழிவகுக்கும்.
இஸ்லாத்தில் பன்றிகள் வளர்ப்பதற்கோ அல்லது பராமரிப்பதற்கோ அல்லது புசிப்பதற்கோ வலுவான தடைகள் போடப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் எப்போதும் இதைத் தவிர்தே வருகின்றனர்.
இலங்கையில் பன்றியைப் சாப்பிடுவர்கள் அதிகமாக கிடையாது. என்றாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகச் சிலரும் மற்றிய பகுதிகளில் நோக்கின் புற கொழும்புப் பகுதிகளிலும் நீர்கொழும்பு, ஜாஅல, கட்டுநாயக்க, களுத்துறை, மொரட்டுவ பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு இது உயிராபத்தை ஏற்படுத்தவல்லது.
இவ்வகை வைரசுகளை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் பல இருந்தபோதும் இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்துக் கொள்ளலாம் நோய் காணப்படுகின்ற நாடுகளில் வாழ்பவர்கள் வாய், மூக்கு பகுதிகளை மூடிக்கொள்ளுதல், குப்பைகள் சேராமல் சூழலை சுத்தமாக வைத்திருத்தல், நோயினால் பாதிக்கப்பட்டவர் இருமல் வரும் போது வாயில் துணியை வைத்து மறைத்துக் கொள்ளுதல், நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவர்கள் தங்கள் வாய், கண், மூக்குப் பகுதிகளை கையினால் தொடாதிருத்தல், கைகளை சவர்காரம் இட்டு நன்றாக்க் கழுவிக் கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
உலகில் தற்போதுள்ள முன்னனி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வைரசுக்கான தடுப்புசியை தாயாரிப்பதில் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
தற்போதைய உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) இன்றைய தகவலின் படி அமெரிக்காவில் 64 ஆய்வுகூடங்களினால் மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் இதுவரை எந்த மரணமும் சம்பவிக்கவில்லை என்பதுடன் மெக்ஸிக்கோவில் இருப்பத்தாறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. தவிரவும் கனடாவில் 06, நியூலாந்தில் 03 ஐக்கிய இராச்சியத்தில் 02 இஸ்ரேல் 02 ஸ்பெயில் 02 என இவ்வைரசால் பாதிகப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக பாதிகப்பட்ட நாடுகளின் எல்லைகளை மூடும்படியும் பிராயண தடைகளை கையாளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிளைக் கேட்டுக் கொண்டுள்ளது.



»»  (மேலும்)

4/29/2009

ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைவதே பிரபாவுக்கு சிறந்தது





தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் பேட்டியில் தெரிவிப்பு


ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைய புலிகளின் தலைவர் தயாரில்லையென்றால் அவர் செய்யவேண்டிய ஒரே மாற்று வழி சயனைட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்வதேயா குமென்று இராணுவத்திடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் அவர்கள் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது,



இதற்கு முன்னர் புலிகளின் தலைவருக்கு மூன்று மாற்று வழிகள் இருந்தன. அதாவது ஆயுதத்தை கீழே வைத்துவிட்டு சரணடைதல், சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ளல் அல்லது அப்பாவி தமிழ்மக்களை தொடர்ந்தும் துயரத்தில் ஆழ்த்தாது தப்பிச் செல்ல விடுதல் என்பனவாகும்.
எவ்வாறாயினும் புலிகளின் அமைப்பு பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். ஆதலால் புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அந்த நாடுகளின் அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கடைசி நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல புலிகளின் தலைவர் கருதினால் அது ஒரு போதும் சாத்தியப்படாது என புலிகளின் ஊடகப் பேச்சாள ராகவிருந்த தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரன் செய்ய வேண்டியது, தான் சிறைப்படு த்தியுள்ள அப்பாவி மக்கள் பற்றி பொறுப்புடன் சிந்தித்து அவர்கள் தற்போது எதிர்கொண்டு வரும் துயரங்களிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு இராணுவத்திடம் சரணடைவதே யாகுமென ஜோர்ஜ் மாஸ்டர் தெரிவித்திருக்கிறார்.
மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற ஏனைய புலித் தலைமைகளும் உறுப்பினர்களும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு இராணுவ த்திடம் சரணடையுமாறு அவர்கள் கேட்டுள்ளனர். இதன்மூலம் அவர்களை சிறைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கும் சிறந்த எதிர்காலம் கிடைக்குமென ஜோர்ஜ் மாஸ்டர் கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பகுதிக்கு வரும் பொதுமக்களை மாத்திரமன்றி சரணடையும் புலி உறுப்பினர்களையும் அரசாங்கம் நன்றாக கவனித்து வருவதனை தான் விளங்கிக் கொண்டதாக அவர் குறிப்பி ட்டார்.
இதேவேளை புலிகளின் தலைவர் ஒருபோதும் சமாதானத்துக்காக குரல் கொடுக்காத ஒரு தலைவரெனவும் ஜோர்ஜ் மாஸ்டர் கூறியுள்ளார்.



»»  (மேலும்)

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் : யூ.என்.எச்.சி.ஆர்.அனுப்பி வைப்பு




வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவியாக 2850 கூடாரங்கள் முதல் தொகுதி உதவியாக ஐ.நா. வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் டுபாய் களஞ்சியத்திலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன.இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அங்கீகரித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர் ஸ்தானிகரான அன்டோனியோ குட்டாரிஸ் தெரிவித்தார்."அரசாங்கத்தின் தகவலின் படி இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள 38 நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அநேகர் வருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது" என ஐ. நாவின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."முகாம்களில் காணபப்டும் நெருக்கடி பாரிய பிரச்சினையாக உள்ளது.குறிப்பாக மெனிக் பாம் முகாமில் 4,5 பேர் பாவிக்கக் கூடிய கூடாரங்களை 8 முதல் 10 பேர் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் பலர் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கூடாரங்கள் எதுவும் இல்லாதிருக்கின்றார்கள். அரசாங்கம் இவர்களுக்காகப் பொது கட்டிடங்களைத் தந்து உதவவும், காணிகளை ஒதுக்கவும் இணங்கியுள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

4/28/2009

சுவீடிஷ் அமைச்சருக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அரசாங்கம் மறுப்பு


சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு எவ்வித அடிப்படையும் அற்றதென வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று இலங்கை வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வருவ தற்கு விசா மறுக்கப்பட்டதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. அடுத்த மாத முற்பகுதியிலேயே அவர் வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இலங்கைத் தூதரகத்திற்கு அவர் முறையாக விண்ணப்பிக்கவில்லை. இலங்கைக்கு இவர் வருவதனை தடுக்கும் எந்த நோக்கமும் இலங்கை அரசுக்கு கிடையாது.
உண்மையில் சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை வருமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவே அழைப்பு விடுத்திருந்தார்.
மலும், பிரிட்டிஷ் வெளிவிவகாரச் செயலாளரினதும், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரினதும் வருகைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. ஆயினும், சுவீடிஷ் அமைச்சரின் வருகை தொடர்பாக ஆராயப்படவில்லை.
மேற்படி இரு நாடுகளின் அமைச்சர்களின் வருகையானது இருதரப்பு உறவுகளுடன் தொடர்பானது.
எந்த வகையிலும், இவர்களின் வருகையானது, ஐ. நா என்ற வகையிலோ பிராந்திய அங்கத்தவர் என்ற வகையிலோ அமையவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது.


»»  (மேலும்)

இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ அமைச்சர் டக்ளஸ் அவசர கோரி


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யு மாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அந்தப் பிரதேசங்களில் உதவிப் பொருள்களை சேகரிப் பதற்கான மையங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

0602050331,
060 20 50 329

இதேவேளை ஊடகத்துறை அமைச்சின் வழிகாட்டலுடன் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கைகளும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.


»»  (மேலும்)

4/27/2009

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்-


“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது”
-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-
நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் அவர்கள் இனி எப்போதும் வலிந்த தாக்குதல் எதையும் மேற்கொள்ள போவதில்லை (முடிந்தால் செய்யமாட்டார்களா? என்ன?) எனவும் காலவரையரையற்ற முறையில் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கியிருந்த செய்திகளில் அவர்கள் எந்தவித யுத்தநிறுத்தத்திற்கும் இனி இடமில்லையெனவும் தவைவர் இறுதிவரை போராடுவார் எனவும் கூறியிருந்தனர்.
இச்செய்தி வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களிலேயே இந்தச் செய்தியும் வந்திருப்பதானது புலிகள் அவர்களின் பலத்தை மொத்தமாக இழந்திருந்த காரணத்தினால் எந்த முறையடிப்புப் தாக்குதலையும் செய்ய முடியாமல் இருப்பதும். சில நாட்களுக்கு முன்னர் அரசிடம் சரணடைந்த புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் யுத்த பிரதேசத்தில் பிரபாகரனின் நடமாட்டம் தொடர்பாகவும் புலிகளின் தற்போதுள்ள தாக்குதல் திறன் உட்பட்ட பல முக்கிய தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியுள்ளமையால் தங்களின் இயலாமையையும் தாங்களின் இறுதி போராட்டம் மிகவும் சுலபமாக இரானுவத்தினரால் வெற்றிகொள்ளப்படும் செய்தி புலம்பெயர் ஆதரவாளர்களை சோர்வடையச் செய்திவிடும் என்ற காரணத்தினாலும் தந்திரமாக இவ்வாறான ஒரு லேபலுடன் சரணடைவதை அல்லது இராணுவத்தினரிடம் தோற்றுப் போவதை புலிகள் மறைக்க முற்படுகின்றனர்.
இதற்கு முதலும் சார்க் மகாநாடு நடக்கும்போதும் இவ்வாறான ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டடது அதனுடாக சார்க் நாடுகள் உட்பட உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து இன்னுமொருமுறை அவர்களுக்கு காதில் பூ சுற்ற நினைத்தனர் அது கைக்கூடவில்லை.
அதன் பின்னர் புலிகளின் நலன் விரும்பிகள் எனும் புலிக்குடத்திகள் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதும் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதம்இ கவனயீர்ப்புஇ மனிதச் சங்கிலிஇ தீக்குளிப்பு என தோடர் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் அது கைக்கூடாத நிலையில் இந்திய தூதரகம்இ சீனத் தூதரகம்இ இலங்கைத் தூதரகம் என தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாடுகளின் அமைதிக்கும் நல்வாழ்விற்கும் பங்கமும் அந்தந்த நாடுகளின் கௌரவத்தை கெடுக்கும் வண்ணம் தங்களின் காடைத்தனத்தை காண்பித்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் பார்த்த சர்வதேச சமூகம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் அமைதியாக இருந்தாலும் அவர்கள் தாங்களின் நிலைப்பாட்டில் எப்போதும் தெளிவாக இருந்துவருவதுடன் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறே கூறி வருகின்றனர் இது புலிகளுக்குச் சார்பானதாக இல்லாததால் அதை இந்த புலிக்குடத்திகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டிருக்கின்றனர்.
மேற்கில் நாங்கள் வசிக்கும் நாடுகளில் புலிக்குடத்திகள் நடாத்தும் இந்த அராஜகங்களை அந்தந்த அரசுகள் சகித்துக் கொள்வது போல தெரிந்தாலும் அதற்கான எதிர் நடவடிக்கைகள் நிச்சயம் மிகவும் பாரதூரமான அளவில் இதை முன்னெடுப்பதாக இனம் காணப்பட்டவர்கள் மீது அந்த அரசுகளால் மேற்கொள்ளப்படவே செய்யும். தற்போதுள்ள இந்த கொடியும் கோஷமும் அடங்கும் போது சட்டம் தனி நபர்கள் மீது பாயும்.
இவ்வாறான ஒரு நடைமுறையை தற்போதும் மேற்கத்தைய நாடுகள் புலிகள் விடயத்தில் பின்பற்றியே வருகின்றன அதுவே புலிகள் அவர்கள் பலமாக இருந்த காலத்தில் மேற்கத்தைய நாடுகளின் அலோசனைகளை மதியாமல் போனதற்கான பரிசாக இன்று அவர்கள் புலிகளையும் அவர்களின் புலிக்குடத்திகளையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அளிக்கும் ஆதரவாகும்.
வன்னியில் வலைஞர்மடத்தையும் இராணுவத்தினரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்ட புலிகளால் தற்போது தற்காப்பு யுத்த்த்தை நடத்துவது கூட கடினமாக உள்ளமையால் இன்னும் சில நாட்களில் நிகழப்போகும் அந்த விபரீதத்தின்போது “அண்ணன் அடிப்பார்இ சிங்கள இராணுவம் ஓடும்” என்றெல்லாம் கூறி அடிக்கடி ஜோசியமும் பார்த்து அம்மாவுடன் இணைந்து கூட்டுப் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் இந்தக் கூட்டதுக்கு தலைவரால் எந்த சந்தோசமான செய்தியையும் கொடுக்க முடியாதுபோனதை மறைக்க இந்த யுத்த நிறுத்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
தற்போது வன்னியில் மீதமிருக்கும் அனைத்தும் படையினர் வசம் செல்லும்போதும் எஞ்சியுள்ள பு(கி)லித்தளபதிகள் சரணடையும் போதும் தலைவர் யுத்த நிறுத்தம் செய்திருந்தபோது சிங்கள இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் சிறை பிடித்திருக்கிறது என தங்களுக்கு தாங்கள் சாமாதானம் கூறிக்கொள்ள இந்தப் புலிக்குடத்திகளால் முடியும்.
அதனையே இனிவரும் நாட்களில் புலிகளின் போரியல் ஆய்வாளர்களும் அவர்களின் பணத்திலியங்கும் ஊடகங்களும் கருப்பொருளாக கூறி உலகில் பல போராட்ட இயக்கங்கள் இவ்வாறு சமாதானம் வேண்டி நின்றபோது அடக்கப்பட்டன என்பதை கட்டியம் கூறி தலைவர் தவறிழைக்காதவர் என காப்பாற்றப்போகின்றன. தலைவரை நம்பி உயிர் துறந்த ஏழைப் பிள்ளைகள் மட்டுந்தான் ஏமாந்தவர்கள்.
இவர்கள் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்தம் அறிவித்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏப்ரல் 25ம் திகதிதான் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து தற்போதைய இராணுவத் தளபதி மீது ஒரு கற்பிணிப் பெண்ணை அனுப்பி உலக மானிட நடைமுறைக்கு அப்பால் தற்கொலைத் தாக்குதலை புலிகள் நடாத்தினர். அன்று இராணுவத் தளபதி எப்படியோ உயிர் தப்பிவிட்டார். அக்காலகட்டத்தில் இராணுவத் தளபதிக்கு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அறிந்த புலம்பெயர் புலிக்குடத்திகள் பின்வருமாறு கூறி குடித்து கும்மாளமடித்தனர்.
“ஐயோ ஐயோஇ சரத் பொன்சேகா மாத்தையாவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் செயற்படவில்லையாம். விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு 2 கால் நடையில வந்து கொண்டாடிப்போட்டு போகக்கை சிங்கன் மாதிரி போனியளே மாத்தையாஇ எனி அந்த நடையை எப்ப எனி என் தோழர்களுடன் பார்க்கப்போறம்? டக்கிளஸ் நீதாண்டா எனது நாய்குட்டிஇ ஆனந்தசங்கரி நீதானய்யா என்னுடைய நாய் எண்டு அடிக்கடி சொல்லுவியளே மாத்தையாஇ இப்ப நீங்கள் முண்டமாகிட்டீங்களேஇ ஐய்யகொஇ சாகிறதிலும் கொடுமையான விடயமாச்சே மோட்டைய்யா சா மாத்தைய்யா சரத் பொன்சேகா இப்பதான் நீர் அவதானமாக இருக்கவேண்டும்இ கதிர்காமரை திட்டம்போட்டு கொன்று புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிராயண வரவேற்பு தடையை போட்டமாதிரிஇ உம்மை முடிச்சு புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில தடைசெய்ய முயற்சி செய்வார்கள் சிங்கள மரமண்டைகள். (நீர் எனி உதவமாட்டீர்தானே) பொன்சேகா என்ன ஒரு பெயர்இ புண்(காயம்)சேகா அட இது கூட நல்லா இருக்கேப்பா?.”
இவ்வாறு தங்களுக்கு தெரிந்த இணையத் தளங்களிலெல்லாம் தங்களின் வக்கிரங்களையும் அவர்களின் நிஜமான தமிழர் நாகரீகங்களையும் வெளிக்காட்டியிருந்தனர். இலங்கை போன்றதொரு நீண்ட கால யுத்தம் நடைபெறுகின்ற நாட்டில் சர்வதேசத்தின் கண்காணிப்பில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும் போது புத்தியில்லாமல் தலைவர் செய்கின்ற கொடுமைகளை ஆதரித்தனர் இந்த இரத்த வெறியர்கள்.
அக்காலகட்டத்தில் சர்வதேசமும் இவர்களுக்கு பல ஆலோசனைகளையும் வேண்டுதல்களையும் விடுத்து சமாதான ஒப்பந்தத்தை பாதுகாக்குமாறு கூறிக்கொண்டிருக்க புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவலை நினைத்து உரலை இடித்தனர்.
சர்வதேசம் இவர்களை அன்று கெஞ்சிக் கூத்தாடியதற்கு ஒரு பிரதான காரணமிருந்தது அது இலங்கையில் அப்போது ஆட்சிமீடமெறியிருந்த ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியாகியோர் கடும் போக்குடையவர்கள் மட்டும்ல்லாமல் அவர்களின் தகுதி திறமை என்பனவும் சர்வதேசத்தால் கணிக்கப்பட்டிருந்தது.
மட்டுமல்லாமல் புலிகளை ஓழித்துவிடவேண்டும் என்ற கொள்கை கொண்ட மத்திய அரசு இந்தியாவில் அமைந்திருந்ததாலும் புலிகளை அழிக்க அரசு முற்படும்போது அவர்களுடன் சேர்த்து மாட்டிக்கொள்ளும் அப்பாவி தமிழ் மக்களின் இழப்பையும் நினைத்தே சர்வதேசம் இறுதி சந்தர்ப்பமாக யுத்த நிறுத்தத்தை மீறவேண்டாம் என புலிகளை வேண்டிக்கொண்டது.
அவையணைத்தையும் கண்டுகொள்ளாத பிரபாகரன் தனது ஆதிக்கத்தை மாவிலாறு நீரணையில் காட்டி அதைப் பூட்டி இன்று மாட்டிக்கொண்டார்.
மாவிலாறு அணையை மட்டும் புலிகள் மூடவில்லை பக்கதிலிருந்த மூதூர் பிரதேசமும் புலிகளால் சுற்றிவலைக்கப்பட்டு அங்கு காலாகலமாக வாழ்ந்துவந்த முஸ்லீம் மக்கள் அவ்வூரை விட்டு துரத்தப்பட்டனர். பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டதுடன் அவர்களனைவரையும் சுட்டுக்கொள்வதற்கும் புலிகள் முற்பட்டனர். இச் சம்பவம் குறித்து புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு தப்பித்த ஒரு நண்பர்இ
“புலிகள் எங்களின் சுமார் நூற்றி ஐம்பது இளைஞர்கள் அளவில் பிடித்து ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை கொலை செய்வதற்காக வரிசையில் நிறுத்திவிட்டு உத்தரவுக்காக காத்திருந்தனர் அச் சமயம் இராணுவம் வந்து அடித்த செல் எங்களுக்கு அருகில் விழ எங்களை விட்டு விட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர் நாங்கள் வேறு திசையால் ஓடி உயிர் தப்பினோம்” என்றார்.
இவ்வாறு பிரபாகரன் ஒரு தவறைச் செய்ய புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னொன்றை நினைத்து குடித்துக் கும்மாளம் அடித்ததன் பிரதிபலன் இன்று தெரிகிறது இதைதான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ!
புலிகள் யுத்த நிறுத்தத்தை உண்மையில் மேற்குலக வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்வதாக இருந்தால் இன்று அவர்களின் கோவணமும் உறுவப்பட்ட நிலையில் அதைச் செய்திருக்க மாட்டார்கள் அன்றே சர்வதேசத்தின் அலோசனைப்படி நடந்திருப்பர்.
சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் காலத்திலேயே புலிகள் தங்களின் தன்னாதிக்க வெறியால் சர்வதேசம் முகம் சுழிக்கும்படியான பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களைச் செய்தனர்.
வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மீதான சினேப்பர் தாக்குதல்இ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சிஇ இராணுவத் தளபதி மீதான தாக்குதல்இ கிழக்கில் முஸ்லீம்கள் மீது ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் தாக்குதலும் சொத்துக்கள் அழிப்பும்இ வெருகல் தறையிரக்கமும் சொந்த தமிழ் உறவுகள் மீதான புலிகளின் வன்முறைஇ இலங்கை இராணுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதல்இ கிழக்கில் முஸ்லீம்கள் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற துண்டுப் பிரசுர மிரட்டல்கள்இ மாவிலாறு அணை மறிப்பு மற்றும் மூதூர் மீதான தாக்குதல் என புலிகள் பலமாக இருந்தபோது உலக சமாதான கண்காணிப்பாளர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் தங்கள் சர்வதிகார இரத்தவெறியைக் காட்டிவிட்டு இன்று முடியவில்லை எனும் போது அவர்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கும் போது அதை எப்படி உலகமும் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளும்.
தற்போதைய கால சூழலில் புலிகள் சொந்த வன்னித் தமிழ் மக்களுக்கும் தூரோகம் இழைத்துவிட்டதாகவே அந்த மக்கள் கருதுகின்றனர். தற்போது இராணுவத்தினரால் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் மக்கள் அதனையே சர்வதேசத்திடமும் அரசிடமும் தெரிவிக்கின்றனர்.
புலிகள் தமிழர் தாயக நிலப்பிரதேசமான வடக்கு கிழக்கு ஆகிய இருபிரதேசங்களில் வாழும் மக்களின் மனங்களில் இருந்தும் தூர தூக்கியெறியப்பட்டுள்ள நிலையில் புலிகளுக்கு தற்போது பூஜை செய்பவர்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ள கொஞ்ச ஆதரவாளர்கள் மட்டுந்தான். அவர்களின் சுயரூபமும் அந்தந்த நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் வெளிக்க ஆரம்பித்து விட்டது.
வணங்காமண் தொடங்கி பல இறுதிப்போராட்டம் என்ற பெயரில் சுலை சுலையாக சுருட்டியவர்கள் தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டில் தி.முக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிகள் எனக் காட்ட “இறுதியுத்தம்” இறுவெட்டு வெளியிட்டதானது தமிழ்நாட்டு மக்களுக்குள் புலிகளால் நடாத்தப்பட்ட ஆதரவுப் போராட்டங்களை முடக்கவே உதவப்போகிறது.
இவ்வாறு தங்கள் மூலைக்கும் செயற்பாடுகளுக்கும் சம்பந்தமில்லாமல் புலிகளின் பினாமிகள் நடத்திய நிழல் போராட்டங்கள் அனைத்தும் சகல தேசங்களிலும் முறைவுரைக்காவே காத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
பி.பி.சி தமிழோசையூடாக வன்னியிலிருந்து இராணுவத்தாரால் மீட்கப்பட்ட ஒரு அவலைப் பெண்ணின் குரல் இவ்வாறு ஒலித்தது.
“ஐயா இவர்கள் (புலிகள்) இப்படி துரோகம் செய்வார்கள் என்று நினைக்கவில்லை ஐயாஇ எங்கள் குழந்தைகளை மீட்டுக் கொடுங்கள் “



»»  (மேலும்)

மக்கள் நலன் காக்கவந்த படகு என்றும் மக்களுக்காகவே செயற்படும் - ரி.எம்.வி.பி பொதுச் செயலர்.


மக்கள் என்ற பெயரைக் கொண்டு மக்களுக்காக கிழக்கு வானில் எழுந்த படகுச் சின்னத்தை கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியானது எம்மக்களின் நலன்களில் அக்கறை கொண்டே செயற்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மண்ணிலே கடந்த 2008-தை மாதம் 21ம் தியதியன்று இலங்கைத்திருநாட்டின் அரசியில் தளத்திலே எம் கட்சியும் உத்தியோகபூர்வமாக பதிப்புரிமை பெற்றது. அவ்வாறு எம் கட்சியும் ஒரு அரசியல் அந்தஸ்து பெறுவதற்கு இன்று எம்கட்சியின் தலைவராகவுள்ள திரு.சி. சந்திரகாந்தன் அவர்களுடனும் ஏனைய கட்சியின் சிரே~;ட உறுப்பினர்களுடனும் முன்னின்றுழைத்து கட்சிக்கு சட்டரீதியிலான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர் எம் முன்னாள் மறைந்த தலைவர் அமரர் கு.நந்தகோபன்(ரகு) அவர்கள் என்றால் அதுமிகையாகாது. அவ்வாறு எம்கட்சிக்கும் எம்மக்களுக்கும் வெளிச்சமாய் இருந்த எம்தலைவனோ இன்று எம்மோடு இல்லையே என்பதுதான் எம்கட்சிக்கும் எம்மக்களுக்கும் இன்றுமுள்ள பெரும்கவலையுமாகும்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகுச் சின்னத்ததைக் கொண்ட கட்சிக்கான பெயர் பலகையினை காலதாமதமின்றி அனைத்து கட்சியின் காரியாலயங்கள் மற்றும் செயலகங்களில் திறக்க வேண்டும் அதன் மூலம் கிழக்கு மண்ணிலே ஸ்திரமான அரசியல் தலைமைத்துவத்ததை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்களும், தொண்டர்கள், மக்கள் என அனைவராலும் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளை நிறைவேற்றும் முகமாக பாசிக்குடா கருங்காலிச் சோலையில் திறக்கப்பட்டுள்ள கட்சியின் பிரதேசக் காரியாலயத்திற்கு கட்சியின் பெயர் பலகையினை 2009-04-25 ம் தியதியன்று கட்சி தலைமைச் செயலகத்தில் வைத்து வழங்கிவைத்த போதே கட்சியின் பொதுச் செயலர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
வாiழைச்சேனையின் கருங்காலிச்சோலையில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் பிரதேசக் காரியாலயத்திற்கான பெயர் பலகையினை கட்சியின் வாழைச்சேனை பிரதேச அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு. மு.ஜெயகீசன் (ஜெயந்தன்) அவர்களிடம் வழங்கி வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.



»»  (மேலும்)

வன்னி அகதிகளுக்கு உதவி வழங்குமாறு முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை


வன்னியில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வருகின்ற தமிழ் சகோதரர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்ய அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
ஒவ்வொரு கிராமங்கள், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களின் ஊடாக நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்புமாறு ஜம் இயத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் மௌலவி தாசிம் அறிவித்துள்ளார். தெமட்டகொட வை.எம்.எம்.ஏ. தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இடம்பெயரும் வன்னி மக்களுக்கு இன்று அவசியமாக சமைத்த உணவே வழங்கவேண்டியதாக சுட்டிக்காட்டி அதனை முதலில் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜமா அத்தே இஸ்லாமிய குழுவை வவுனியாவுக்கு அனுப்பி அங்கு உணவை சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழுகின்ற முஸ்லிம்கள் மதியஉணவு மற்றும் உணவுப்பொருட்களை உடன் சேகரித்து வவுனியா நலன்புரிநிலையங்களில் உள்ள அகதிகளுக்கு வழங்குமாறும் மௌலவி தாசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் போத்தல், குழந்தைகளுக்கான பால்மா வகைகள், பிஸ்கற் வகைகள், பெண்களுக்கான உடுபுடவைகள் , சுகாதாரத் துணிகள், பெட்சீற், சாரம் போன்றவற்றைச் சேகரித்து வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தெமட்டகொடவில் உள்ள வை.எம்.எம்.ஏ.தலைமையகத்தில் இப்பொருட்களை ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 0777797311 அல்லது 0772612288 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



»»  (மேலும்)

ஐ.ம.சு.மு மகத்தான வெற்றி



நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 65% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஐ.ம.சு.மு. 15 இலட்சத்து ஆறாயிரத்து 115 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி, தெரிவான 102 உறுப்பினர்களில் இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 68 ஆசனங்களை முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 6 இலட்சத்து 88 ஆயிரத்து 253 (29.58%) வாக்குகளைப் பெற்று 30 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேல் மாகாண சபைத் தேர்தலில் 8 இலட்சத்து 17 ஆயிரத்து 862 மேலதிக வாக்குகளைப் பெற்று மூன்றிலரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகளின்படி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதன் கோட்டையாக விளங்கிய பல தொகுதிகளில் வாக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. ஜே. வி. பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் படுதோல்விக்கு முகங்கொடுத்துள்ளன.
நேற்று முன்தினம் (25) காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை 2769 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்ற வாக்குப் பதிவின் பின்னர், 319 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
அதற்கமைய, நேற்று (26) அதிகாலை 1.45 இற்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவு வெளியானது. நேற்று நண்பகல் 12 மணிக்கு மூன்று மாவட்டங்களினதும் இறுதி முடிவுகள் வெளியாகின. எனினும், தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை.
மேல்மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கவென 38,20,214 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், 23,26,886 பேர் மாத்திரமே வாக்களித்திரு ப்பதாகத் தேர்தல் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதில் கடந்த தேர்தலைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது.
கொழும்பு நகரம் உள்ளிட்ட தேர்தல் வலயத்தில் முன்னணிக் 66% வாக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் வாய்ந்த தொகுதிகளாக விளங்கிய கொழும்பு வடக்கு, மத்தி, பொரளை, பியகம உள்ளிட்ட இடங்களில் அக்கட்சிக்கும் கணிசமான அளவு வாக்கு வீதம் குறைவடைந்துள்ளது.
இவ்விடயங்களில் ஐ. ம. சு. முன்னணிக்கு வாக்கு வீதம் அதிகரித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 இலட்சத்து 30 ஆயிரத்து 370 வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், ஐ. தே. க. 3 இலட்சத்து 27 ஆயிரத்து 571 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு 3,51,215 வாக்குகள் கிடைத்துள்ளதோடு 14 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐ. தே. க. 1,24,426 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கூட்டமைப்பு 6,24,530 வாக்குகளைப் பெற்று 27 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஐ. தே. க. 2,36,256 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப்பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.)க்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களிலும் ஓர் ஆசனம் வீதம் 3 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், மாகாணத்திலேயே மொத்தமாக 56,384 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களை இழந்துள்ளது. கடந்த தேர்தலில் 70,731 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 49,388 வாக்குகளைப் பெற்று கொழும்பிலும், கம்பாஹாவிலும் தலா ஓர் ஆசனம் வீதம் இரண்டினை மாத்திரமே பெற்றுள்ளது. மு.கா. வுக்கு களுத்துறையில் ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை. ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) மூன்று மாவட்டங்களிலுமாக 11,970 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது. இந்தக் கட்சிக்கு கொழும்பு மாவட்டத்தில் ஓர் உறுப்பினர் தெரிவாகியுள்ளார்.
இதேவேளை, சுயேச்சைக் குழுக்கள் அனைத்தும் கட்டுப்பணம் இழந்துள்ளன.
அதேநேரம், இடதுசாரிக் கட்சிகளும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகளும் படுதோல்வி யடைந்துள்ளன.



»»  (மேலும்)

4/25/2009

யுத்த அகதிகளுக்கான நிவாரணப் பணியில் காத்தான்குடி தொண்டர் குழு


வன்னியில் யுத்த அகதிகளாக இடம் பெயர்ந்து வவுனியா பிரதேசத்திலுள்ள நிவாரண கிராமங்களிலும் இடைத் தரிப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகளில் இணைந்து கொள்வதற்காக இன்று காத்தான்குடியிலிருந்து சுமார் 50 பேர் கொண்ட குழுவொன்று பயணமானது.அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி விடுத்த வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி நகர சபை மற்றும் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சமையல்காரர்களும் அவர்களது உதவியாளர்களும் என 50 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். நிவாரணக் கிராமங்களிலும் இடைத்தரிப்பு முகாம்களிலும் தங்கியிருந்து சமையல் வேலைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள். இவர்களை வழி அனுப்பும் நிகழ்வில் உரையாற்றிய காத்தான்குடி நகர சபைத் தலைவர் யு.எல்.எம். முபீன், "நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்கான உணவைச் சமைத்து பொதியிட்டு வழங்கும் நிவாரணப் பணிகளில் தொண்டர் அடிப்படையில் இவர்கள் ஈடுபடுவார்கள். குறைந்தது 5 நாட்கள் இக்குழுவினர் தங்கியிருந்து தமது நிவாரணப் பணிகளைப் பூர்த்தி செய்வர். அதன் பின் அடுத்த குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர்" என்று குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம். சுபைர், முஸ்லிம் வர்த்தகச் சங்கத் தலைவர் ஏ.எல்.எம். கலீல் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.


»»  (மேலும்)

இராணுவ மனிதாபிமான நடவடிக்கை நான்கு நாட்களில் முடிவுறும் - கோத்தபாய ராஜபக்ஷ


முல்லைத்தீவில் இடம்பெற்றுவரும் இராணுவ மனிதாபிமான நடவடிக்கைகள் இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளாதாவது: முல்லைத்தீவு புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியுள்ள பொது மக்களை மீட்பதற்காக படையினர் நிதானத்துடன் முன்னேறி வருகின்றனர். தற்போது பாதுகாப்பு வலயத்தின் தென் பகுதியிலுள்ள படையினர் மிகவும் அவதானத் துடன் மக்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் எந்தவொரு பெரிய ஆயுதங்களையும் பாவிக்காமல், தம்மிடமுள்ள சிறிய ஆயுதங்களை மட்டுமே கொண்டுச் செல் கின்றனர். பாதுகாப்பு வலயத்தினுள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என புலி கள் முன்னெடுத்துவரும் பிரசாரம் பொய்யானது


»»  (மேலும்)

மலையக மக்களின் உணர்வுப் பிரவாகமான மலையக நாட்டார் பாடல்கள் ஒலிப்பேழைகளாக வேண்டும்


இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும்.
மலையக மக்கள் என்ற பெயரால் இன்று அழைக்கப்படும் இந்தியத் தமிழர் குடியேற்றங்கள் 1828ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டன. மலையக பகுதிகளை சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல்-தென் மாகாணங்கள், வடகிழக்கு பகுதியான விவசாய பிரதேசங்கள் கொழும்பில் வாழ்பவர்களையும் கூட மலையகத் தமிழர் என்ற தொடர்கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது.
கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள்.
பிரித்தானிய பேரரசால் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் கடந்து இலங்கை வந்து மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் யாவரும் தென்னிந்திய விவசாயிகளாவர். இவர்கள் தமது இன, மத, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தை பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே.
இவர்கள் ஏழைகளாகவும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை. அந்த வகையில் மலையக தமிழரிடையேயும் நாட்டுப் பாடல்கள் அதிகமாகவே வாய்மொழி வழக்கில் காணப்பட்டு வந்தன.
கல்வியறிவில்லாத எளிய பாமர மக்களாக காணப்பட்ட இவர்கள் தங்களுடைய இனிமையான பேச்சுவகையிலும் எல்லோரும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் தங்களது இன்பதுன்பங்களை பாடல் வடிவில் ஆக்குகின்றனர். இவற்றையே நாட்டுப்புறப் பாடல் என்கிறோம்.
இப் பாடல்கள் மேடையேறி பாடுவதற்கோ, ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ பாடப் பெற்றவை அல்ல. அந்நேரத்தில் பாடுவோரின் உணர்ச்சிகள் அடங்கிய இன்பதுன்பங்களை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் சொத்தாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வரும் இந்நாட்டார் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறை கேள்வி மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் அறிந்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளன.
தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடிவந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலே வாய்மொழிப் பாடல்கள் வீறார்ந்த நிலையில் காணப்படும் என்பார் க. கைலாசபதி.
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இப்பாடல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத துன்பம், துயரம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், ஆடி மகிழும் ஆனந்தப் பூரிப்பு, மனக்குமைச்சல் அடங்கிய இதய ஒலிகளாக மனித மனத்தின் நித்திய உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முறையில் அமைந்துள்ளன.
இப்பாடல்களில்,
‘ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நான் மறந்தேன்’
போன்ற நெஞ்சை நெகிழும் வரிகள் பல காணப்படுகின்றன. இப்பாடல்கள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.
எனினும் எத்தனை பேருக்கு இந்நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பெருந்தோட்ட மக்களிடையே எத்தனை பேருக்கு வாசிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் இப்பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளிவர வேண்டும் என்பதே எமது அவாவாகும். ஏனெனில் வாசிக்க முடியாதவர்களும் இப்பாடலை கேட்பதன் மூலம் விளங்கி இப்பாடல்கள் மீண்டும் மக்கள் வாய்களில் முணுமுணுக்க வேண்டும்.
மலையகத்தில் இருந்து உதயமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் இலங்கையில் உள்ளனர். இவர்கள் இம்முயற்சியில் இறங்கி வெற்றிபெற வேண்டும். மலையக இலக்கியங்களின் பாதுகாப்பும் அதன் அவசியமும் உணர்ந்தவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
லங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகத் தமிழர் எனும் சொற்றொடர் இலங்கையின் மலைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரை குறிப்பதாகும்.
மலையக மக்கள் என்ற பெயரால் இன்று அழைக்கப்படும் இந்தியத் தமிழர் குடியேற்றங்கள் 1828ம் ஆண்டின் பின்னர் ஏற்பட்டன. மலையக பகுதிகளை சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் அதாவது மேல்-தென் மாகாணங்கள், வடகிழக்கு பகுதியான விவசாய பிரதேசங்கள் கொழும்பில் வாழ்பவர்களையும் கூட மலையகத் தமிழர் என்ற தொடர்கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது.
கோப்பித் தோட்டங்களிலும் பின்னர் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும் குடியமர்த்தப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே இன்று இவ்விதம் அழைக்கப்படுகின்றார்கள்.
பிரித்தானிய பேரரசால் ஆயிரக்கணக்கான மக்கள் கடல் கடந்து இலங்கை வந்து மலைப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் யாவரும் தென்னிந்திய விவசாயிகளாவர். இவர்கள் தமது இன, மத, மொழி, பண்பாட்டுக் கலாசாரத்தை பேணத் தலைப்பட்டனர். அவ்விதம் அவர்கள் பேணியது தென்னிந்தியக் கலாசாரமே.
இவர்கள் ஏழைகளாகவும் கல்வியறிவு குறைந்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தறிவில்லாத மக்களிடையே வாய்மொழி இலக்கியமும், கலைகளும் செழிப்புறும் என்பது வரலாறு கண்ட உண்மை. அந்த வகையில் மலையக தமிழரிடையேயும் நாட்டுப் பாடல்கள் அதிகமாகவே வாய்மொழி வழக்கில் காணப்பட்டு வந்தன.
கல்வியறிவில்லாத எளிய பாமர மக்களாக காணப்பட்ட இவர்கள் தங்களுடைய இனிமையான பேச்சுவகையிலும் எல்லோரும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் தங்களது இன்பதுன்பங்களை பாடல் வடிவில் ஆக்குகின்றனர். இவற்றையே நாட்டுப்புறப் பாடல் என்கிறோம்.
இப் பாடல்கள் மேடையேறி பாடுவதற்கோ, ஒரு கூட்டத்தை மகிழ்விப்பதற்காகவோ பாடப் பெற்றவை அல்ல. அந்நேரத்தில் பாடுவோரின் உணர்ச்சிகள் அடங்கிய இன்பதுன்பங்களை வெளிப்படுத்துபவையாகவே உள்ளன.
எழுத வாசிக்கத் தெரியாதவர்களின் சொத்தாகவே இதுவரை உயிர் வாழ்ந்து வரும் இந்நாட்டார் பாடல்கள் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறை கேள்வி மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் அறிந்துகொள்ளும் முறையில் அமைந்துள்ளன.
தென்னிந்தியாவிலிருந்து கண்டிச் சீமைக்கு வாழ்வு தேடிவந்த இந்த மக்கள் தமது வாழ்வில் கண்டதென்ன? விவசாயம் தழைத்தோங்கும் பிரதேசங்களில் வாழும் உழைக்கும் மக்கள் மத்தியிலே வாய்மொழிப் பாடல்கள் வீறார்ந்த நிலையில் காணப்படும் என்பார் க. கைலாசபதி.
ஆயிரக்கணக்கில் காணக்கிடைக்கும் இப்பாடல்களில் அவர்களின் கட்டுக்கடங்காத துன்பம், துயரம், ஏக்கம், ஏமாற்றம், ஆத்திரம், ஆடி மகிழும் ஆனந்தப் பூரிப்பு, மனக்குமைச்சல் அடங்கிய இதய ஒலிகளாக மனித மனத்தின் நித்திய உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் முறையில் அமைந்துள்ளன.
இப்பாடல்களில்,
‘ஊரான ஊரிழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாய நான் மறந்தேன்’
போன்ற நெஞ்சை நெகிழும் வரிகள் பல காணப்படுகின்றன. இப்பாடல்கள் பல தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளமை பாராட்டுக்குரியது.
எனினும் எத்தனை பேருக்கு இந்நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மேலும் பெருந்தோட்ட மக்களிடையே எத்தனை பேருக்கு வாசிக்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதனால் இப்பாடல்கள் ஒலிப்பேழைகளாக வெளிவர வேண்டும் என்பதே எமது அவாவாகும். ஏனெனில் வாசிக்க முடியாதவர்களும் இப்பாடலை கேட்பதன் மூலம் விளங்கி இப்பாடல்கள் மீண்டும் மக்கள் வாய்களில் முணுமுணுக்க வேண்டும்.
மலையகத்தில் இருந்து உதயமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் இலங்கையில் உள்ளனர். இவர்கள் இம்முயற்சியில் இறங்கி வெற்றிபெற வேண்டும். மலையக இலக்கியங்களின் பாதுகாப்பும் அதன் அவசியமும் உணர்ந்தவர்கள் இந்நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
வே. முரளிதரன்
நன்றி -தினகரன்


»»  (மேலும்)

மக்களை மரணத்துள் தள்ள எவருக்கும் உரிமை இல்லை


புதுமாத்தளன் யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து பெரும ளவு மக்கள் வெளியேறிவிட் டார்கள். ஆரம்பத்திலிந்து இது வரை அங்கிருந்து வெளியேறி வந்தவர்க ளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து எழு பத்தையாயிரத்தைத் தாண்டிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
இம்மக்களின் அத் தியாவசியத் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசாங் கம் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. முன் னுரிமை அடிப்படையில் இவ்விடயம் கவனிக்கப்படுகின்றது.
யுத்த சூன்யப் பிரதேசத்திலிருந்து இன் னும் வெளியேறாமல் பத்தாயிரம் பேர் வரையில் இருப்பதாக அங்கிருந்து கிடை க்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதனால் தீவிரமான தாக்குதல் எதை யும் நடத்தாமலிருப்பதாக இராணுவத் தர ப்புக் கூறுகின்றது.
புலிகள் தங்கள் பாதுகாப்புக்காகவே இம்மக்களை அங்கு தடுத்து வைத்திருக் கின்றார்கள். இவர்கள் தங்கள் சுயவிருப் பத்தின் பேரிலேயே அங்கு தங்கியிருப்ப தாகப் புலிகளும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் ஒருவேளை கூறலாம். முன்னரும் இப்படித்தான் கூறினார்கள். யுத்த சூன்யப் பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் சுயவிருப்பத்தின் பேரி லேயே அங்கே தங்கியிருப்பதாகச் சொன் னார்கள்.
ஆனால் அரச படையினர் மண் அணையை உடைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் சாரி சாரியாக மக்கள் வெளியேறியதிலிருந்து சுயவிருப்பக் கதை பொய்யானதென்பது முழு உலகுக்கும் நிரூபணமாகியது. இப்போது தங்கியிருப் பவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே இருக்கின்றார்கள் என்பதும் பழைய கதையைப் போன்றதாக இருக்கலாம்.
எவ்வாறாயினும், இப்போது யுத்த சூன் யப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் மக்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே இருக்கின் றார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத் துக் கொண்டாலும் கூட அம்மக்களை அங் கிருந்து வெளியேற்ற வேண்டிய தார்மீகக் கடப்பாடு புலிகளுக்கு உண்டு.
எக்காரணத்தைக் கொண்டும் அரசாங் கம் யுத்தநிறுத்தம் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. புலிகள் இய க்கத்தை முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற இலக்குடனேயே இரா ணுவ நடவடிக்கையை அரசாங்கம் ஆரம் பித்தது.
அந்த இலக்கை அடையும் வரை நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என்பது இதுவரையில் புலிகளுக்கு நன்கு விளங்கியிருக்க வேண்டும். இந்த நிலை யில் இப்போது புலிகள் நடத்தும் யுத்தம் ‘மரணத்துக்கான போராட்டம்’ என்பதில் சந்தேகம் இல்லை.
சரணடைய வேண் டும் என்ற கோரிக்கையைப் புலிகள் நிரா கரித்து விட்டார்கள். படையினர் சுற்றி வளைத்திருப்பதால் தப்பிச் செல்வதற்கும் வழி இல்லை. எவ்வளவு தான் போரி ட்டாலும் இறுதியில் மரணம் என்பது புலிகளுக்கு விளங்காமலிருக்க முடியாது. தாங்கள் மரணத்தைத் தழுவுவதெனத் தீர் மானிக்கும் உரிமை புலிகளுக்கு உண்டு.
ஆனால் மக்களை மரணத்துக்குள் தள்ளி விடும் உரிமை இல்லை. மக்களுக்கா கவே ஆயுதம் தூக்கியதாகக் காலங்கால மாகக் கூறிவரும் புலிகள் மக்களை மர ணத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பைத் தட்டிக்கழிப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
அரசாங்கம் இராணுவ நடவடிக்கையை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்பதால் யுத்த சூன்யப் பிரதேசத்திலிரு ந்து மக்கள் முழுமையாக வெளியேறு வதை உறுதிப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலிகளுக்கும் உண்டு. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் தமிழ் மக் கள் மீது கரிசனை உள்ளவர்களாகவும் உரிமை கோருபவர்கள் புலிகளிடம் இக் கோரிக்கையை முன்வைப்பார்களென நம்புகின்றோம்.


»»  (மேலும்)

தரங்கெட்ட தருணம் -குவர்னிகா -



புலிகளின் கடைசிக் கண்டாயமான முள்ளிவாய்க்கால் இன்றோ நாளையோ என்றிருக்கும் நிலையில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தயா மாஸ்டரும் புலிகளின் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜும் இராணுவத்திடம் சரணடைந்து விட்டார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. இராணுவத்திடம் வந்ததும் எல்லோருமே புலிகளின் வன்முறை பற்றிய விடயங்களைச் சொல்ல வேண்டும் என்பது ஒருபுறமிருக்க இவ்வளவுகாலமும் புலிகளுடன் சேர்ந்திருந்த தயாமாஸ்டரும் ஜோர்ஜும் சாதாரணமக்களைப்போல் எடுத்தவுடன் பிரபாகரனையும் அவரது கொள்கைகளையும் குறைசொல்ல முடியாது. புலிகளை இராணுவம் நெருங்க இன்னும் 6கிலோமீட்டர் மட்டுமேயுள்ள நிலையில் இவர்கள் இருவரும் சரணடைந்துள்ளார்கள் என்பதும் புலிகள் மக்களுக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்று தற்போது இவர்கள் சொல்வது வெறும் பகிடித்தனம். தமிழ்ச்செல்வன் இறந்தபின் தமக்கு அங்கு தகுந்த இடம் இல்லை என்று சொல்வது பொய். புதுமாத்தளனில் புலிகள் மக்களுக்குக் கொடுத்த துயரங்களை தாமும் அனுபவித்ததாகச் சொல்வது ஒரு ஏமாற்று. புலிகளுடன் இயங்கிக் கொண்டிருந்தவர்களை அவர்களை விட்டு விலத்தி தனியாக இருக்க புலிகள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. 70,80 வயது என்றும் பாராமல் வன்னியிலிருந்த அத்தனை வயதானவர்களுக்கும் குண்டைக் கட்டிய புலிகள் இவர்களை மட்டும் விலத்தியிருக்க விட்டதாம். அதனை எங்களை நம்பட்டாம். தயாமாஸ்டர் என்ற ஆங்கிலப்புலமை கொண்ட ஒருபுத்திசாலியை புலிகள் ஒருகாலத்தில் இலங்கை அரசின் அனுமதியுடன் கொழும்பில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்கள். அப்போதும் இவர் சிகிச்சைக்காக வரவில்லை. இலங்கை அரசுடன் பேரம் பேச வந்திருக்கிறார் என்று பலரால் சந்தேகம் கொள்ளப்பட்டவர். அப்போது கூட அவர் கொழும்பிலோ வெளிநாட்டுக்கோ தப்பியோட எண்ணவில்லை. அடுத்து ஜோர்ஜ் அவர்கள் பலநாடுகளுக்கு சமாதானம் என்ற பெயரில் போய் வந்தவர். அவருக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர் நன்றாகவே ஏதேனும் ஒரு இடத்தில் தங்கியிருக்க முடியும். இவர்கள் இருவரும் நேற்றுவரை அதனைச் செய்யவில்லை. ஆக இந்த முறை இவர்கள் புலிகளிடமிருந்து தப்பி வந்தது என்பது வெறும் பொய் என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது. புலிகளின் இறுதி ஆயுதமாக அரசுடன் பேரம் பேச அனுப்பிவைக்கப்பட்டவர்கள் இவர்கள் என்ற சந்தேகம் எங்களிடம் வலுவாக இருக்கிறது. புலிகள் தமக்கு நெருங்கிவந்த இறுதிக் கட்டங்களை இவ்வாறான முறையில்தான் அணுகியிருக்கிறார்கள். புலிகள் தமக்கு நெருக்குவாரம் வரும்போதெல்லாம் எவரின் காலிலும் விழக்கூடியவர்கள். எதுவும் செய்யத்துணிபவர்கள் என்பது யாவருக்கும் தெரியும். அந்தவகையில் கடைசி ஆயுதமாக தயாமாஸ்டர் பயன்படுத்தப்படுகிறாரா என்பது குறித்து ஐயம் கொள்ளவேண்டும். அடுத்து புளொட் தலைவர் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து பேசவேண்டியிருக்கிறது. வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மதகுருமார்களுக்கு தனியாக வாழ ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்குரிய அனுஸ்டானங்கள் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். மதகுருமார்கள் மற்றவர்களுடன் சேர்ந்து உணவு உண்ணமாட்டார்கள் இதனால் அவர்களைத் தனியாக வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பாரடா கதையை. பொதுவுடமை பேசிய கழகம். நாத்திகம் பேசிய கழகம.; அந்த மக்கள் விடுதலைக்கழகம் தறிகெட்டு நிக்குது பாரடா. 6மாதமாய் அலைந்து உழன்று ஒரு இடத்தில் அநாதையாய் இருக்கும் மக்கள் தமது குழந்தைகளை தமது பெற்றோரை இறப்பிலும் பிடித்து இழுத்து வந்திருக்கிறார்கள். அவர்களிலிருந்து மதகுருமார் எந்த வகையில் வேறுபடுகிறார்கள் ? பெண்களும் குழந்தைகளும் படும் துன்பம் கொஞ்சமல்ல. ஆனால் சித்தார்த்தன் மதகுருமாருக்காக கவலைப்படுகிறார். அடுத்து வவுனியாவிலுள்ள மக்களுக்கு உணவும் ஊட்டச்சத்தும் கொடுத்ததாக புளொட் அமைப்பினர் சொல்கிறார்கள். நல்லவிடையம். உங்களுக்குத்தான் மிகப்பெரிய கடமை இருக்கிறது. ஆரம்பகாலங்களில் இந்த வன்னி மக்கள்தான்; உங்களுக்கு சோறும் வாழ்விடமும் அழித்தவர்கள். அவர்களுக்கு நீங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அந்த மக்கள் வயல்களிலும் காடுகளிலும் வேலை செய்து உங்களுக்கு சோறு ஊட்டியவர்கள். இன்று நீங்கள் கொடுக்கும் தம்மாத்துண்டு உணவும் மருந்தும் அதற்கு ஒருபோதும் ஈடாகாது. முடிந்தவரை கொடுங்கள். கொடுத்து விட்டு தம்பட்டம் அடிக்கத்தேவையில்லை. அவர்கள் எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.


»»  (மேலும்)

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் தலைமையில் இடம் பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான முன்னேற்ற திட்டமும் ஆய்வும்.




இன்று(23.04.09) பிற்பகல் 2.00மணியளவில் ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றிய கிழக்கு முதல்வர் சநந்திரகாந்தன்,
கிழக்கு மாகாணம் தற்போது பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருக்கின்ற இச் சந்தர்ப்பத்திலே, எமது கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பிரதேசங்கள் ;கடந்த காலத்தில் நடந்த கொடூரயுத்தத்தினாலும் வன்செயல்களினாலும் கணிசமான அளவு பேரழிவினைக் கண்டிருக்கின்றது. இதனால் அப்பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமது கிழக்கு மாகாண கபைக்கு இருக்கிறது.
கிழக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலானவை யுத்தத்தினால் இடம் பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பானதாகும். அதாவது கடந்த கால யத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களை தங்களின் சொந்த இடங்களிலே குடியமர்த்துவதற்கான பணிகள் தற்போது முடிவுறும் நிலையிலிருக்கிறது. இம் மீள்குடியேற்றமானது எனது அமைச்சின் கீழ் வருவதனால் இதற்காக ஒரு அதிகாரியை நியமித்து அதனை முறையாக நெறிப்படுத்;தி வருகின்றேன்.
நான் நினைக்கின்றேன் தற்போது கிழக்கு மாகாணத்திலே இடம் பெயர்ந்த மக்களில் 90வீதமான மக்கள் தங்கயுளுக்குரிய சொந்த இடங்கள் மற்றும் இதர இடங்களில் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஜீவனோபாய தொழில் வாய்ப்புக்கள் என்பனவும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதில் குறிப்பாக வீடுகளை இழந்திருக்கின்ற பெரும்பாலான மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதேபோல் அம்மக்களின் பிரதான தொழிலான விவசாயம், மீன்பிடி போன்றவற்றை மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, பாதைகள், கல்வி, பாதுகாப்பு போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொறுப்பான அதிகாரிகளைப் பணித்துள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
மேற்படி நடைபெற்ற முன்னேற்ற மீளாய்விலே கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி, உள்@ராட்சி, கூட்டுறவு, கால்நடை,கட்டிடம், கிராமிய அபிவிருத்தி போன்றன தொடர்பான அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் இப்பிரதேசத்தில் அதாவது ஈச்சிலம்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பது தொடர்பான ஓர் கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.
இதில் முதலமைச்சரின் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான இணைப்பதிகாரி கலாநிதி செல்வேந்திரன், முதலமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் கலாநிதி.விக்கினேஸ்வரன், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர், மாகாணப் பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள் ,அரசசார்பற்ற நிறுவனங்களின்பிரதிநிதிகள், கிராமியத் தலைவர்கள், பாதுகாப்பிற்குப் பொறுப்பான பொறுப்பதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.


»»  (மேலும்)

மஹியங்கனையில் சிங்கள ஆசிரியையினால் எழுதப்பட்ட தமிழ்நூல் வெளியீடு

மஹியங்கனை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியை விமலா கொடிஆரச்சி எழுதிய இரண்டு தமிழ்ப் புத்தகங்களின் (கைநூல்) வெளியீட்டு விழா அண்மையில் மஹியங்கனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வெளியீட்டு விழா நிகழ்வில் நூலாசிரியர் விமலா கொடிஆரச்சி பேசுகையில்: ‘நான் சிங்கள மொழிமூலம் கற்றேனாயினும் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றுதல் மற்றும் ஆற்றல் காரணமாக இக்கைநூலை எழுதக் கிடைத்தது.
இந்நூல் சிங்கள மொழி மூலக் கல்வி பயிலும் மாணவர்களின் தேவையில் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.’
‘6ம், 7ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கைநூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நன்கு பிரயோசனப்படக் கூடியவையாகும்.
மஹியங்கனை k.ஜீ.எம். நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் இப்புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.


»»  (மேலும்)

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.
இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.
இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


»»  (மேலும்)

4/24/2009

பழி தலை மாறுகிறது. -குவர்னிகா-




பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப்புதைப்போம். என்றும் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று காசுக்குக் கவிதை எழுதிய வைரமுத்துவின் பாடல்களோடு தமிழ் வீரம் பேசி உலாவந்து கொண்டிருக்கும் உலகத் தமிழினம் அத்தனை நகரங்களிலும் உண்ணாவிரதமும் ஊர்வலமும் செய்து கொண்டிருக்கிறது ஒருபுறம். மறுபுறம் வன்னி யுத்தம் என்று அழைக்கப்ட்டுக் கொண்டிருக்கும் பேரழிவு தனது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக எல்லோராலும் உரைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் புலிகளின் அடைப்பை உடைத்துக் கொண்டு பெரவாரியான மக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுக்கள் நுழைந்துள்ளார்கள். புலிகிளின் உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்து கொண்டிருக்கிறார்கள். 30வருட ஈழயுத்தக்கதை தலைகீழாகிக் கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் உரையாற்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் இத்தனை மனித அழிவுகளைப் பார்த்தும் வாய் திறக்கவில்லை. நவம்பர் மாதத்திற்கு முன்னமேயே தப்பியோடிவிட்டார் என்றும் இல்லை அவர் அங்கு பாதாள உலகத்தில் இருக்கிறார் என்றும் பலவித ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்களோ புது மாத்தளன் தெருவெங்கும் பிணங்களாய் சிதறுகிறார்கள்.இலங்கை அரசு இன்னும் சில மணித்தியாலங்களே இருக்கிறது என்கிறது. யுத்தம் யாரும் எண்ணிப்பார்திருக்கமுடியாத அளவு கோரமாய்த்தான் இருக்கிறது.
இன்று புலிகளால் தக்கவைக்க முடியாத ஆடுகளத்தை புலம்பெயர் மக்கள் தமது தலையில் தூக்கிவைத்து ஆடுகிறார்கள். இந்த யுத்தத்தில் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று நூறுவீதம் தெரிந்த பிறகும் புலம்பெயர்ந்த மக்களும் புலிகளின் மீடியாக்களும் சொல்லுகின்ற நம்புகின்ற பொய்கள் எல்லை மீறிப்போய்க்கொண்டு இருக்கிறது. 30வருடமாகப் புலிகள் செய்த அத்தனை கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணம் சொல்லி நியாயப்படுத்தி வந்தவர்கள் நமது மக்கள். புதுமாத்தளனில் இருந்து தப்பி வருகிற மக்களை இராணுவம் எப்படிக் கையேற்கிறது என்று வீடியோ பார்த்தாலும் அதை விளங்கிக் கொள்ள மறுக்கிறது வீரத்தமிழ் மனம். மக்களை நிர்வாணமாக்குகிறார்கள். நிலக்கண்ணிவெடிகளை அகற்ற பயன்படுத்தப்படுகிறார்கள். சிசுக் கொலை நடக்கிறது என்று கற்பனை பண்ணிப் பார்கமுடியாத அளவு பொய் உரையாடலை நடாத்துகிறது. இறுதியில் தப்பிவந்த 35000 மக்களில் பாதிப் பேரைக் கொண்றுவிட்டது 8000பேர்தான் உள்ளார்கள் என்று மக்களிடத்தில் பாரிய அவநம்பிக்கையை வளர்த்து வரும் இந்த புலம்பெயர் சமூகம் புலிப்பாசிசத்தை விட படுமோசமான தளத்தில் இயங்கி வருகிறது. இலங்கை அரசும் இராணுவமும் நம்பிக்கை அற்றவர்கள் என்று தெரிந்த பிறகும் தப்பிவருகிறார்கள் என்பதன் தேவையை கொஞ்சமும் உணரமறுக்கும் இந்தப ;புலிப்பினாமிகள் புலிகளின் வரலாற்றுப் பழியை தமது தலைக்கு மாற்றுகிறார்கள். புலிகளின் கோரப்பிடியில் சிக்கியிருந்த மக்கள் எதிர்காலத்தில் சொல்லப்போகின்ற கதைகள் நமக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரப்போகின்றது என்பது மட்டும் உண்மை. அத்தனைக்கும் இந்தப் புலிக்கொடி மாந்தர் தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று நடக்கின்ற பேரழிவின் தாக்கம் இன்னும் ஒரு நூறு வருடத்திற்கு அழியா வடுவாக நமது சமூகத்தில் இருக்கும். தமிழீழம் என்ற யுத்த ப+மியின் வடு அது. வெறும் கோடைகாலத்தில் வெயில்படாது தமது பிள்ளைகளை போர்த்து மூடிக்கட்டும் புலம்பெயர் மக்கள் வன்னி மக்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் வைரமுத்துவின் பாடல்களைப் பாடிக்காட்டுவதும், வன்னியை விட்டு அந்த மக்களை இடம் பெயரக் கூடாது என்று கோசம் போடுவதும் வேடிக்கையான வளையாட்டு. புலியைத் தடை செய்யாதே. எமது தலைவர் பிரபாகரன். வீ வோன்ற் தமிழீழம் என்று நீ எங்கே வேணுமென்றாலும் கோசம் போடு. உண்ணாவிரதம் இரு. அது உனது உரிமை. நல்லதோ கெட்டதோ அது உனக்குத்தான். ஆனால் வன்னி மக்களை வெளியேற அனுமதியாதே என்று சொல்ல எந்த நாயிற்கும் உரிமையில்லை. அதை நீ சொல்லவும் முடியாது. ஒரு குழந்தையின் பெறுமதியும். தேவையும் தெரியாத உணராத மனநிலை பிறழ்ந்த ஒருவனாலேதான் ஒரு குழந்தையின் மரணத்தில் சந்தோசம் அடையமுடியும். பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கவும் முடியும். இதுதான் இன்றைய புலம்பெயர் கூட்டத்தின் நிலை. இந்தக் கூட்டம் தனக்குத் தெரிந்து வரலாற்றுப்பழியை தன்தலைக்குமாற்றுகிறது.


»»  (மேலும்)

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? -கிழக்கான் ஆதம்-


செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து

அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று

வெறும் பானை பொங்குமோ மேல்!
(நல்வழிஇ ஓளவையார்)

இலங்கையின் தமிழர்கள் வரலாற்றையும் புலிகளின் போராட்ட யுக்தியையும் நாம் நோக்குவோமானால் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றிருக்க அதுவே தமிழரின் தாகமா என்றால் “இல்லை” என்றுதான் சொல்ல முடியும்.
தமிழரின் தாகம் என்னவாக இருந்தது என்று நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நீங்கள் தமிழ்பேசும் அனைத்து சமூகங்களும் ஒன்றினைந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் அவர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வைத்தே அதனை அறிய முடியுமே தவிர தனியே புலிகள் எனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சுயநலக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் அதற்குள் அடக்கிவிட முடியாது.
இதுரை காலமும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அவர்கள் சொன்னார்களே தவிர அவர்கள் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொல்லவில்லை இது சாதாரணமாக பார்ப்பதற்கு பெரிதாக தெரியாவிட்டாலும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்று சகோதர படுகொலை முதல் இன்று வன்னிமக்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது வரை அனைத்தும் இக்கோஷத்துக்குள் அடக்கப்பட்டிருப்பதை காண முடியும்.
புலிகளின் கொடி ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சமூக கலாச்சார விழுமியங்கள் எதனையும் பிரதிபலிக்காது தனியே புலிகள் எனும் அமைப்பையும் அவர்களின் சர்வாதிகார போக்கையும் பிரதிபலிப்பது போலவே புலிகளின் கோஷமும் அந்த அமைப்பின் சுயேற்சை அதிகாரத் தன்மையை மட்டுமே வெளிக்காட்டுகிறது.காரணம் அவர்களின் கொடியாயினும் சரி மற்றும் அவர்களின் கோஷமாயினும் சரி எதுவும் ஈழப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதிபலிப்பாக எப்போதும் இருக்கவில்லை.
உலகில் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனமாக கருப்பு இன மக்கள் இருக்கின்றனர் சில தசாப்தங்களுக்கு முதல் நாங்கள் நோக்குவோமானால் உலகில் எல்லாத் திசைகளிலும் இம்மக்கள் தங்கள் தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மிகவும் கீழ்தரமாக நடத்தப்பட்டனர்.
அப்படிப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் “வண.மாட்டின் லூதர் கிங்கும்” தற்போதைய நமது காலத்தில் “நெல்சன் மன்டேலாவும்” உள்ளனர். வண.மாட்டின் லூதர் கிங் மறைந்துவிட்டாலும் அவரின் கனவு அமெரிக்காவில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
அதேபோல் இருபத்தேழு வருடங்கள் கறுப்பர்களின் உரிமைகளுக்காக ரோபன் தீவிலுள்ள (சுழடிடிநn ஐளடயனெ) சிறையில் தனது வாழ்கையின் இளமைக்காலத்தை கழித்த மதிப்பிற்குரிய நெல்சன் மன்டேலாவும் கறுப்பர்களை வட அபிரிக்காவில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.
நெல்சன் மன்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்ட காலத்திலும் சரி அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் சரி தங்களின் கொடியில் போராட்டத்தின் தன்மையினையும் தங்களின் தனிப்பட்ட ஆளுமையும் பிரதிபலிக்காத வண்ணம் மிகவும் நேர்த்தியாகவே அமைத்திருந்தனர். ஜொன் டூபி(துழாn னுரடிந) உற்பட முன்னால் தலைவர்களின் வழிகாட்டல்களில் அமைந்திருந்த சில அமைப்புக்கள் 1923ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்று ஒரு விடுதலை இரானுவ அமைப்பாகவே (Umkhonto we Sizwe) “தேசத்தின் ஈட்டி” என்ற பெயரில் 1961ம் மாற்றம் பெற்றிருந்தது.
இவ்வாறான காலப் பகுதியிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் பழைய தலைவர்களால் கண்டறியப்பட்ட மூன்று நிறங்களைக் கொண்ட கறுப்பு(மக்களின் நிறம்) பச்சை(வளமிக்க மண்) மஞ்சல் (நாட்டின் செல்வம்) என அப்படியே பேணப்பட்டு வந்தது.
ஆனால் தமிழீழத் தேசிய கொடியை நோக்கினால் அதிலுள்ள மஞ்சல்- நிறம் தமிழீழ தேசிய இனம் தன்னாட்சி அமைத்துக் கொள்ள விழைவதும் நடத்தும் போராட்டம் அறத்தின்பாற்பட்டது நியாயமானது என்பதை குறிப்பதாகவும்
சிகப்பு- தேசியம் அமைத்தால் மட்டும் போதாது தங்களுக்கு எதிரான அனைவரையும் பழிவாங்குவதுடன் சாதிய வகுப்புவாத முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பதையும்
கறுப்பு- விடுதலைப்பாதை கரடு முரடானது அதில் தலைவரும் அந்த அமைப்பும் செய்யும் தீங்குகளையும் மக்கள் மீது செய்யத் தூண்டிவிடும் தீங்குகளையும் மக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும்
வெள்ளை- விடுதலை அமைப்பும் தலைவர்களும் மக்களும் உண்மையையும் நேர்மையையும் கடைப்படிக்க வேண்டும் என்பதையும் குறிக்கின்றது.
அதனால்தானோ என்னவோ! மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் பல சிக்கலான நடைமுறைகளுடன் அடிமைகளைப்போல நடத்தப்பட்டனர். மட்டுமல்லாது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் தாயக்திற்கு தமது உறவுகளுடன் சில நாட்களை கழிக்க வந்தபோதுகூட பல சாட்டுப் போக்குகள் சொல்லி சிறையிடப்பட்டு பின்னர் சுளையாக பணம் பறிமாறப்பட்டபோது விடுதலை செய்யப்பட்டனர்.
போதாக்குறைக்கு தமிழீழ தேசிய கொடியில் பிரதிபலிக்கும் வெள்ளை நிறத்தின் கொள்கைக்கு சாட்சியாக வன்னியில் தங்களை மட்டும் நம்பி வாழ்ந்த மக்கள் சிறைப்படிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
ஒரு தேசியக் கொடி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தாய்நிலத்தில் வாழும் சமூகங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் புலிகளின் தமிழீழ தேசியக் கொடியோ நிறத்திலும் அதில் வரையப்பட்டுள்ள இலட்சனையிலும் தனியே புலிகளின் நலனைத்தான் கூறி நிற்கின்றது.
உலகில் எந்த சமூக வரலாற்றிலும் இவ்வகையான போர்குணத்தையும் அடக்கு முறையையும் பிரதிபலிக்கின்ற தேசிய கொடியை காண முடியாது என்பதுடன் அது பிரதிபலிக்கும் தன்மையையும் நிஜத்தில் சொந்த மக்கள் மீது பிரயோகித்துக் காட்டிய பெருமையும் புலிகளையும் அவர்களின் தேசிய கொடியையும் சாரும்.
அதற்கமையவே பிரபாகரன் தன்னை சர்வதிகாரியாக அமைத்துக் கொண்டதற்கான அடயாளமாக அவர்களின் கோஷத்திலும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என வைத்து பேனிக்காக்க முற்பட்டுவந்தார். அதற்காகவே புலிகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் செயற்படுகின்றனர்.
தொன்மைமிகு இலங்கைத் தமிழர் வரலாற்றை நோக்குவேமேயானால் இலங்கை சுதந்திரத்திற்கு முன்னால் பல சுதேச தமிழ் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அக்காலங்களில் அத்தகைய சுதேச தமிழ் சிங்கள மன்னர்கள் சகல நாடுகளுக்கும் பொதுவான தங்கள் ஆட்சி அதிகாரத்திற்கான சண்டைகள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இத்தகைய ஒற்றுமையை வலியுத்துகின்ற பல வரலாற்றுப் பதிவுகள் இன்று புலிகளின் கையாடல்களால் மறைக்கப்பட்டு அவர்களின் சர்வதிகாரத்திற்கு வாய்ப்பாக திரித்திக் கூறப்படுகின்றது.
இவ்வாறானா இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் காரணமாகவே இலங்கையை காலாதிக்கம் செய்த பிரித்தானியா சுதந்திரம் வழங்கும்போதும் பிரித்தானிய முடியரசோ அல்லது இலங்கையின் சுதந்திரப் போராளிகளோ தமிழர்கள் தனியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவுமில்லை அவ்வாறான தேவையும் அவர்களால் உணரப்படவும் இல்லை.
தற்போது புலிகளால் நடத்தப்படுகின்ற மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற பிரச்சாரங்களை கேட்டு புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு சின்னப் பிள்ளைத்தனமான கருத்துக்களை புலிகளின் ஆதரவாளர்கள் கூறும்போது தமிழர் அறிவின்(அறிவிலி) உச்சநிலை உலகின் கண்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.
இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இங்கு வாழ்ந்துவருகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என அனைவரும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளையாகவே காணப்படுகின்றனர். சில சிங்கள அரசியல் வாதிகளின் இனத்துவேசப்போக்குடன் சில தமிழ் ஏகாதிபத்திய வாதிகளின் சீரற்ற சிந்தனைகளால் தமிழினம் மிகப் பெரும் சீரழிவுக்கு முகம்கொடுத்ததோடு தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.
இன்று உலகிலுள்ள அனைத்து ஊடகத் தரப்பாரும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் துரோகிகளாகிவிட்டனர். அந்த வரையறைக்குள் லன்டன் பி.பி.சியின் தமிழோசையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேற்று புலிகளின் பிரச்சார ஊடக இணையத்தளமொன்றில் “தமிழினத்துரோகி பிபிசி தமிழோசைக்கு ஒரு பகிரங்க கடிதம்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது இதன் மூலம் இன்று உலகிலுள்ள சகல நடுநிலையான ஊடகங்களும் புலிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு துரோகிப்பட்டம் இந்த உலகலாவிய மிகப்பெரிய ஊடகத்துறைக்கு சாட்டுவதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீமையுமில்லை அவர்கள் தங்களின் பணியை செவ்வனவே செய்வர் ஆனால் தீமை யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பொறுத்தவரை அவர்களின் ஊதுகுழலாக செயற்படுபவை மட்டுமே நடுநிலையான ஊடகம் என அவர்கள் நினைக்கிறார்கள். காரணம் தாங்கள் செய்த ஊழ்வினையால் விளைந்தவற்றை வைத்து மற்றவரைக் குற்றங்காண்பதன் மூலமாகவோ அல்லது கடவுளைக் குற்றம் சொல்வதன் மூலமாகவோ எதுவும் நடக்கப்போவதில்லை. இவைகளை தவிர்த்து அவர்கள் அவர்களாக மாறிக் கொண்டால் அல்லது தங்களின் ஏகாதிபத்தியவாதத்தில் இருந்து இறங்கி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை மட்டும் உணர மறுக்கின்றனர்.
புலிகளின் தாகமும் தமிழர்களின் தாகமும் எப்போதும் வேறான இரு திசைகளிலேயே காணப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்பாணத்தில்இ கிழக்கிலென்று பல அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்து வெற்றிவாகை சூடிவந்திருக்கின்றன.
கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.
அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
புலிகளின் தாகமே மக்களின் தாகமாகவும் இருந்திருப்பின் இலங்கை இராணுவம் புலிகளை நோக்கி முன்னேரும் போது மக்கள் இராணுவத்தை எதிர்த்து அணிதிரண்டு அரணாக நின்றிருப்பரே தவிர இராணுவத்திடமும் சர்வதேசத்திடமும் தங்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றும்படி கோரியிருக்க மாட்டார்கள்.
இலன்டனில்இ பிரான்ஸில்இநோர்வேயில்இ கனடாவில் என புலம்பெயர் தேசங்களில் வீதிமரியல்கள் செய்வதைவிட புலிகளுடன் மக்களிருந்திருந்தாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக இலங்கையிலும் வன்னிலும் வீதிமறியல் மக்கள் செய்திருப்பர் அவ்வாறு செய்திருப்பின் நிச்சயம் இலங்கை அரசு அடிபணியவேண்டிவந்திருக்கும்.
புலிகளின் வால்களுக்கு தெரியாத ஒன்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியும் அதுதான் தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பது. அதனால்தான் பெயரளவாயினும் ஒரு சமாதான சூழலை கிழக்கில் அரசால் உருவாக்க முடிந்துள்ளது. இல்லையேல் இவ்வளவு உயிரிழப்புக்களுடன் சொந்த பந்தங்களைப் பிரிந்து வடக்கிலும் கிழக்கிலும் அகதியாக மக்கள் வாழாமல் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ நடவடிக்கு எதிராகவும் அரண் அமைத்திருப்பின் இலங்கை இராணுவம் ஒரு அங்குலம் கூட நகர்திருக்க முடியாது என்பதே உண்மை.
புலிகள் தங்கள் மக்கள்மீதும் தமிழ் பேசும் சமூகத்தார்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள் கூட வாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்றுஇ தூக்கத்திலிருந்த சிங்களஇ முஸ்லீம் மக்களை கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பத பதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும். இதில் விதியையும் கடவுளையும் நொந்துகொள்வதில் எவ்வித பயனுமில்லை
தமிழ்பேசும தரப்பாரது தேவையென்பது எப்போதும் புலிகளின் பாசிச தேவையிலிருந்து வேறுபட்டிருந்திருக்கிறது. 2004ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன புலிகள் மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிந்தே அன்றிரவு வீதிகளின் துப்பாக்கிகளால் சத்தவேட்டுகளை தீர்த்து மக்களை பயமுறுத்தினர். மட்டுமல்லாது அதையும் மீறி வாக்களித்த ஒரு வாக்காளரின் கையையும் வெட்டி தங்களின் இறுதி தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டனர்.
தற்போது புலிகள் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் இறுதி முயற்சியாக வன்னியில் அவர்களால் கட்டாயமாக ஆட்சேர்ப்புக்கு உள்ளாகப்பட்டு பலிகொடுக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரையும் மற்றும் புலிகளின் தலைமைபீடத்துக்கு விசுவாசமான குடும்பங்களையும் இணைத்து நாங்கள் அனைவரும் மாவீர்ர் குடும்பத்தினர் எங்களுக்கு அரச கட்டுப்பாட்டில் பாதுகாப்பில்லை ஆகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் வழித்துணையுடன் தாங்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புக வழிவிடப்படவேண்டும் என்று மக்களின் பெயரால் கோரிக்கை விடுத்து புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தப்பிக்க முயற்சிப்பார்கள் போலத் தெரிகிறது.
காரணம் அத்தகைய சூழலில் புலிகளுக்கு பாமரமக்களின் உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாததினால் யாரை பலிகொடுத்தேனும் தாங்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு நிச்சயம் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை தவிர எவரும் இணங்கப்போவதில்லை.
சர்வதிகாரி கிட்லர் தன்னைத்தான் சுட்டு மாய்த்துக் கொண்டபோதுகூட அவருடன் கூடயிருந்த சில சகாக்கள் குடும்பங்களுடன் தங்களை மாய்த்துக் கொண்டனர் அதற்க்கு அவர்கள் கிட்லர் இல்லாத உலகில் தாங்கள் வாழ விரும்பவில்லை என்று இறுதியாக கூறியிருந்தனர். இந்த சம்பவமும் மீண்டும் ஒரு முறை உலக வரலாற்றில் வன்னியில் நிகழும்போல் தெரிகிறது. இதையும் புலம்பெயர் புலிகள் இலங்கை அரசின் கொடுமையென கணக்குக் காட்டலாம்.
இவ்வாறு புலிகளின் சுகபோகத்தை அனுபவித்த விசுவாசிகளைத் தவிர எந்த மக்களும் இன்று புலிகளுடனில்லை அவர்கள் அனைவரும் எஞ்சியிருக்கும் தங்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறைப்படுவதை காணமுடிகிறது.
இந்த சம்பங்களை உன்னிப்பாக அவதானித்து சிந்திப்பீர்களானால் புலிகள் என்றும் மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கவில்லை என்பதும் அவர்கள் செய்த ஊழ்வினை அவர்களை சூழ்ந்துள்ளதையும் காண்பீர்கள்.
மக்களின் ஜனநாயகரீதியான சுதந்திரப் போக்கை நேசிக்க புலிகளோ சர்வதிகார சுயாட்சிப்போக்கை கடைபிடித்தே வந்துள்ளனர். எனவே எப்போதும் புலிகளின் விருப்பு மக்களின் விருப்பாக ஈழத்தின் வரலாற்றில் இருந்ததில்லை.
“சமூக அநீதிகளை விதைத்த காலம் கடந்த காலத்துக்கு உரியது! சமூக நீதியைக் கட்டியெழுப்புகின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!” -மேதகு ஜனாதிபதி. மகிந்த ராஜபக்ச சுதந்திர தின உரை 2009-



»»  (மேலும்)

தென்னாபிரிக்க பொதுத் தேர்தலில் ஆளும் ஆபிரிக்க காங்கிரஸ் முன்னிலை




19 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் 20 மில்லியன் பேர் வாக்களிப்பு


தென்னாபிரிக்காவில் சென்ற புதன் கிழமை நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் ஆபிரிக்க காங்கிரஸ் முன்னிலையிலுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அறுபது வீதம் ஆபிரிக்க காங்கிரஸ¤க்கு கிடைத்துள்ளது. இதன் பிரகாரம் ஜெகோ சூமா ஜனாதிபதியாகவுள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தலில் பெண்ணொருவர் வாக்களிப்பதைப் படத்தில் காணலாம். (ஏ.எப்.பி.)
ஆபிரிக்க காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று மக்கள் காங்கிரஸை ஆரம்பித்த கேர்லாட் யோனா வின் கட்சியை முன்னாள் ஜனாதிபதி தபோ எம்பாகி ஆதரித்தார். இதனால் கடுமை யான சவால்களுக்கு மத்தியில் ஆபிரிக்க காங்கிரஸ் முன்னணியிலுள்ளது.
தேர்தல் நட ந்த தினத்தன்று மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் கேர்லாட் யோனா சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது சொந்த மாகா ணமான ஈஸ்டேன் கேம்பில் மக்கள் காங் கிரஸ¤க்கு அதிகமாக வாக்குகள் கிடைத்து ள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால் தேர்தல் அமைதியாக நடந்துள்ள தாக தேர்தல் அலுவலகம் அறிவித்தது. தென் னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் இதில் வாக்களித் துள்ளார்.
இதை தென்னாபிரிக்க ஊடகங் கள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. சுமார் இருபது மில்லியன் மக்கள் வாக்க ளிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 19 ஆயிரம் வாக்குச் சவாடிகள் அமைக்கப்பட்டன. பொலி ஸார், இராணுவத்தினர் பாதுகாப்புக் கட மையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சில வாக் களிப்பு நிலையங்களில் சனங்கள் முண்டி யடித்துக் கொண்டு வாக்களித்தனர். நீண்ட கியூ வரிசையில் நிற்க முடியாத சிலர் கதிரைகள் உயர்ந்த பாங்குகள் வாளிகளைக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். போர்வைக ளால் உடலை மூடியும் காத்து நின்றனர். சன நெரிசலில் கதிரைகள் விழுந்து சிலர் காயமடைந்தனர். சில வாக்களிப்பு நிலை யங்களின் வாக்குப் பெட்டிகள் நிரம்பி வழிந்தன.
வாக்குச் சீட்டுகளும் பற்றாக் குறையாக இருந்தன. சரியான முறையில் கணக்கிடப்படாமல் வாக்குச் சீட்டுகள் வழங்கப்படாமையே இதற்கான காரண மாகும். ஆபிரிக்க காங்கிரஸ் வேட்பாள ரான ஜெகோ சூமா தனது சொந்த கிரா மத்தில் வாக்களித்தார். என்னை இந்தளவு க்கு உயர்த்தும் இவ்வாறான நாள்வரும் எனத் தான் நினைக்கவில்லை என அவர் கூறினார்.
தேர்தலின் முழுமையான முடிவு கள் வெளிவர இன்னும் ஓர் வாரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹெகோ சுமாவுக்கெதிராக குற்றச்சாட்டுகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட போதும் கட்சியின் செல்வா க்கால் அது கைவிடப்பட்டது. ஆபிரிக்கா காங்கிரஸின் தலைமையை சென்ற 2007 ஆம் அணிக்கு தானே எம்பாகியிடமிருந்து ஜெகோசூமா கைப்பற்றினார்.




தென்னாபிரிக்க எதிர்க்கட்சி தலைவர் சுட்டுக்கெலை


தென்னாபிரிக்காவின் எதிர்க் கட்சித் தலைவர் சென்ற புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். பொதுத் தேர்தல் நடந்த தினத்தில் இந்த கொலை நடந்தது. தென்னா பிரிக்காவின் பிரதான அரசியல் கட்சியான ஆபிரிக்க காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற கேர்லாட்யோன் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து செயற்பட்டு வந்தார்.
சென்ற புதன்கிழமை இவரும் இவரது மனைவி, மக்கள் ஆயுதந் தாங்கிய மூன்று நபர்களினால் கடுமை யாகத் தாக்கப்பட்டனர். வீட்டில் இருக்கும்போதே இவர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் கேர்லாட் யோன் உயிரிழந்தார். தென் ஆபிரிக்காவில் பொதுத் தேர்தல் நடந்த தினத்தில் இந்த கொலை இடம்பெற்றது.



»»  (மேலும்)

4/23/2009

ஐ.சி.ஆர்.சி. ஊடாக பிரபாகரனை பாதுகாப்பாக நாடு கடத்த சர்வதேச சதி - வீரவன்ச குற்றச்சாட்டு


புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட மனோ கணேசன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளுக்கு ஆதரவாக தென் பகுதிகளில் இருந்து கொண்டு செயல்பட்டவர்களையும் அமைப்புக்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிடின் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை பெற்ற வெற்றி அர்த்தம் இல்லாது போய்விடும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக (ஐ.சி.ஆர்.சி.) புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனையும் அவரது சிரேஷ்ட உறுப்பினர்களையும் பாதுகாப்பாக நாடு கடத்த சர்வதேசத்தில் சதி இடம்பெற்று வருகின்றது. எனவே இது தொடர்பில் இராணுவ வீரர்களும் அரசாங்கமும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர்மாநாடு இன்று புதன்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றபோதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.


»»  (மேலும்)