3/27/2009

பிரான்ஸ் செனட் சபையின் உள்ளும் புலிகளின் அட்டகாசம்.


தமிழர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய நிகழ்வு.



பிரான்சின் செனட் சபை பலநூறு கால வரலாற்றுப்பெருமை கொண்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் பண்பாட்டின் பிறப்பிடமான பிரன்சு நாட்டின் மூத்த பிரஜைகளால் அலங்கரிக்கப்படுவது இந்த செனட் சபையாகும். புத்திஜீவிகள், அனுபவசாலிகள், சமூகத்தின் மதிப்புக்குரிய தலைவர்கள் என்ற வரிசையில் உள்ளவர்களை கொண்டமைந்தது இந்த சபை. இந்த செனட்டர்கள் தென்னாசியப் பிராந்தியத்தில் இன்று யுத்தகளங்களாகவும், யுத்தத்தை எதிர்கொள்ளும் தேசங்களாகவும் காணப்படுகின்ற நாடுகள் பற்றிய புரிதல்களை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்குடன் அண்மையில் சில முயற்சிகளில் இறங்கியிருந்தனர். அதன் அடிப்படையில் தென்னாசியாவில் இன, சமூக, பொருளாதார முரண்பாடுகளை களைந்து சமாதானத்தை உருவாக்க முயலும் வகையில் பிரச்சனைப்பாடுகளின் மூலங்களை அறிந்துகொள்ள பசுமைக் கட்சிசார்ந்த செனட்டர்கள் இணைந்து அண்மையில் ஒரு கருத்தரங்கினை ஒழுங்கு செய்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த 24 ம் திகதி செவ்வாய் அன்று தென்னாசியாவில் யுத்த அபாயங்களை கொண்ட நாடுகள் எனும் வகையில் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பற்றிய அமர்வுகளைக் கொண்ட ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்த முனைந்தனர். இந்த கருத்தரங்கு பாரிஸ் நகர மையத்தில் அமைந்துள்ள செனட்சபை வளாகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பரிஸ் செனட்டரான துநயn னுநளநளளயசனஇ பிரான்சின் ஓத் ரென் பிரதேச செனட்டரான துயஉஙரநள ஆரடடநச போன்றோர் தலைமையில் அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கைப் பிரச்சனை பற்றி உரையாற்ற மூவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இலங்கையில் இன சமூக முரண்பாடுகள் பற்றிய எழுத்து கள ஆய்வுப் பணிகளில் அடையாளப்படுத்தப்பட்ட இருவர் இதில் அடங்கியிருந்தனர். ஒருவர் பிரன்சு நாட்டின் பிரஜையான பேராசிரியர் எரிக் மேயர் என்பவராகும். மற்றயவர் தமிழ் சூழலில் ஜனநாயக மாற்றுக்கருத்தாளர்களில் அறியப்பட்ட எம்.ஆர்.ஸ்ராலினாகும். மூன்றாமவராக இலங்கையின் பிரன்சு நாட்டுக்கான தூதுவர் லியனல் பெர்னாண்டோ அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். இந்த அமர்வில் பார்வையாளர்கள் வரிசையில் பல செனட்டர்கள், மனிதஉரிமைவாதிகள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று தேர்ந்தெடுக்கப்;பட்ட சுமார் 75 பேர் வரையானோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வுகளில் காலை இடம் பெற்ற ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அமர்வுகள் மிக அமைதியாகவும் கண்ணியமாகவும் நடந்தேறின. கருத்தாளர்கள் உரையாற்றி முடிந்ததும் பார்வையாளர்களின் வரிசையில் இருந்தோர் கேள்விகள் கேட்பதற்கும் தமது எதிர்க்கருத்துகளை சொல்வதற்கும் போதிய நேரமும் வழங்கப்பட்டது. பிற்பகல் 1.30 மணிக்கு இலங்கை மற்றும் இந்தியா பற்றிய அமர்வுகள் ஆரம்பமாயின. உலகில் எந்த மூலையில் இலங்கை பிரச்சனை பற்றிய மாநாடுகள், கருத்தரங்குகள், ஆயுவுகள், விவாதங்கள் என்ற எது இடம் பெற்றாலும் அங்கு தமிழ் மக்களின் சார்பில் கருத்துத் தெரிவிப்பவர்களாக புலிகள் மட்டுமே இடம் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு செனட் சபையில் புலிகள் அல்லாத ஒருவர் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தமையை புலிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் என்றோ, மனித உரிமை அமைப்புகள், இளையோர் அமைப்புகள் என்றோ தமக்கென புலிகள் உருவாக்கி வைத்திருக்கும் பினாமி முகவரிகள் ஊடாக சுமார் 15 புலிகள் பர்வையாளர் வரிசைகளில் இடம் பிடித்துக்கொண்டனர். எம்.ஆர்.ஸ்ராலினுடைய உரை ஆரம்பமாகி சுமார் 3 நிமிடங்கள் கூட சென்றிராத நிலையில் அந்த அமைதியான மண்டபத்தில் குறுக்கீடுகளும் கூச்சல்களும் எழுப்பப்பட்டன. நன்கு திட்டமிடப்பட்ட வகையில் காட்டுக்கூச்சல் எழுப்பிய புலிகள் ஸ்ராலினின் உரையை தொடரவிடாது தடுக்கமுயன்றனர். இலங்கை அரசுக்கெதிராகவும், புலிகளுக்காதரவாகவும் இவர்களது கோசங்கள் ஒலித்தது. செனட் வளாக அமைதி புலிகளால் சீர் குலைக்கப்பட்டது. பார்வையாளர் வரிசையில் இருந்த பல பிரமுகர்கள் எழும்பி “வெட்கம், வெட்கம், இப்படியா இலங்கைத் தமிழர்கள் நடந்துகொள்வார்கள்” என்று வினா எழுப்பியும் புலிகள் தமது காட்டுத்தர்பாரை நிறுத்தவில்லை. இறுதியில் பல பார்வையாளர்கள் எழுந்து மண்டபத்தை விட்டு வெளியேற முனைந்தனர். அவை நடத்துனர்களின் அறிவுறுத்தல்களை கிஞ்சித்தேனும் மதியாத புலிப்பினாமிகளின் அநாகரிகமான செயற்பாடுகளினால் இலங்கை பிரச்சனை பற்றிய அமர்வுகள் நிறுத்தப்பட்டு நிகழ்சி நிரல் இந்திய பற்றிய தலைப்புக்கு மாற்றப்பட்டது. ஒரு மூத்த செனட் உறுப்பினர் “இலங்கைத் தமிழர் பிரச்சனையை உலகம் ஏன் இதுவரை புரிந்துகொள்ள வில்லை என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன்.” என கூறிக்கொண்டு சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.


0 commentaires :

Post a Comment