ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் (TMVP) ஆயுதப்பிரிவு உத்தியோகபூர்வமாக கலைக்கப்படுவதுடன் எஞ்சியிருக்கும் ஆயுதங்கள் எதிர்வரும் சனிக்கிழமையன்று (07.03.2009) மட்டக்களப்பில் வைத்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என TMVP கட்சியின் பேச்சாளர் ஆஷாத் மௌலானா தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கௌரவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம் பெற்ற கட்சியின் உயர்பீட செயற்குழுக் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டதாகவும் இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சரின் தலைமையிலான மாகாணசபைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் TMVP யின் ஆயுதப்பிரிவு உறுப்பினர்களாக இருந்தவர்களின் எதிர்காலம் தொடர்பில் IOM நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சுடனும் முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தி அதன் மூலம் உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு நிதி உதவிகள் மூலம் சிறந்த எதிர்காலம் உத்தரவாதப்பட்டிருக்கப்படுகிறது. அத்துடன் அரச பாதுகாப்புப் படையினருடன் இணைய விரும்புவர்களும் இதில் இணைந்து கொள்ள முடியும்.
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் கழையும் என தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஏனைய சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அரசாங்கம் விரைவில் கழையும் என தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment