3/30/2009

ஜூன் மாதம் முதல் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை




திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையிலான நேரடி ரயில் பஸ் சேவை எதிர் வரும் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபையின் கடந்த கால வேலைத் திட்டங்கள் ,எதிர் கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"கிழக்கு மாகாண சபை செயல்படத் தொடங்கி 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் குறிப்பாக இந்தியா குறிப்பிடத் தக்க சில உதவிகைள வழங்கியுள்ளது.இந்தியாவினால் வழங்கப்பட்ட18 பஸ் வண்டிகளில் 10 பஸ் வண்டிகள் அரசாங்கத் திணைக்களங்கள் ,பாடசாலைகள் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.மிகுதி 8 பஸ் வண்டிகள் தற்போது தலா 100 பேர் பயணம் செய்யக் கூடிய வகையில் 4 ரயில் பஸ்களாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த 4 ரயில் பஸ்களும் மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் பகல் நேரம் சேவையில் ஈடுபடும் " என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment