3/06/2009

புலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கும் தமிழக முஸ்லிம் அரசியல், சமூக தலைமைத்துவங்கள்.

- எஸ்.எம்.எம் பஷீர் -
பாகம் -1
“எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று
மாட்டிக் கொள்வார்”
-சுப்பிரமணிய பாரதியார்-
இன்று தமிழ்நாட்டில் இடம்பெற்றவரும் “ஈழத்தமிழர்களுக்கான” போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை ஏன்? தமிழக முஸ்லிம்கள் ஏன குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக ஸ்தாபர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான பி ஜெயுனாலாப்தீன் அவர்கள் அளித்த பதில.; தமிழ்நாட்டு முஸ்லிம்களின் ஈழம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் கருத்தியல் மாற்றத்தினையும், புலிகளின் பிரச்சினை வேறு தமிழ் மக்களின் பிரச்சினை வேறு என்ற அவர்களின் நிலைப்பாட்டினையும் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. பி.ஜே கடந்த காலங்களில் புலிகள் தொடர்பான தனது எதிர்க்கருத்தினை பல்வேறு சந்தர்ப்பங்களில் “உணர்வுகள”; பத்திரிகையின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கின்றார். சிலவருடங்களுக்கு முன்னர் இவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவரது பதிலினை முடிந்தளவு அவரது பேசுமொழியில் பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை நீள்வதும் தவிர்க்கமுடியாததே.
“இலங்கைப் பிரச்சினையை தமிழர் பிரச்சினையென்று சிலபேர் சொல்லிககொண்டிருக்கின்றார்கள் ஆனால் உண்மை அதுவல்ல இந்தியாவிலிருந்து அங்கு சென்று வாழும் மலையகத் தமிழர்கள் ஒருசாரார், அங்கு வாழும் ப+ர்வீகத் தமிழர்கள் மறசாரார். பூர்வீகத் தமிழர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் சிங்கள அரசினால் தமது உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்பதற்காக அதனை ஆயதந்தாங்கித்தான் போராடவேண்டமென்று கருதி பல குழக்கள் உருவாகின. இன்று நடைபெறும் யத்தம் மலைநாட்டு மக்களுக்கு எதிரான யுத்தமல்ல பொதுமக்களுக்கு எதிரான யுத்தமுமல்ல. யார் ஆயதம் தரித்திருக்கின்றார்களோ அவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதத்தினைக்கொண்டு அரசாங்கம் அதனை ஆயதத்தின்மூலம் அடக்கும்.
நம் நாட்டில் இருக்கும் ஒரு சாரார் இராணுவத்திற்கு எதிராக ஆயதம் தாங்கினால் இந்த மானில அரசாங்கம் என்ன செய்யும்? இந்த மானிலத்தின் முதல்வராக வை.கோ இருந்தாலும் சரி கருணாநிதி, ஜெயலலிதா ஏன் நெடுமாறன் இருந்தாலும் சரிதான். ஒரு சாரார் ஆயதம்தாங்கி வன்முறையில் ஈடுபட்டாhகளேயானால் அரசாங்கம் அதனை சரியென்று சொல்லுமா? இங்கே தண்ணீர்கேட்டு, மின்சாரம் கேட்டு சட்டப்படி கோரிக்கை வைப்பவனுக்கே ஆர்ப்பாட்டம் பண்ணினால் அடிக்கிறாங்கள். அரசாங்கம் என்றால் ஒரு கட்டுக்கோப்பு இருக்கவேண்டும். பொலிஸாரை, இராணுவத்தினரை எதிர்த்து மக்கள் வந்தால் எப்படி சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது. நம் நாட்டில், நம் மானிலத்தில் அப்படியொரு கூட்டம்வந்தால் நாம் எப்படி அணுகுவோம் அது யாராகவாகுதல் இருக்கட்டும். தமிழனாகத்தான் இருக்கட்டும், நக்ஸலைட் வந்தால் அது எந்த அரசாங்கமாகவாகுதல் இருக்கட்டும் எப்படி அடக்குகிறீர்கள், ஏன் அவனும் உரிமைக்காகத்தான் போராடுகின்றான் அவனை கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒடுக்கத்தான் செய்கின்றாhகள். இன்று விடுதலைப் புலிகளுக்கு குரல் கொடுப்போர் ஏன் தமிழ் நக்ஸலைட்டுகளுக்க குரல் கொடுக்கவில்லை. அவனும் தமிழர் படையென்றுதான் பெயர் வைத்திருக்கின்றான.; அவனை அரசாங்கம் அடக்கும்பொது ஏன் நீங்கள் இந்த மண்ணிலுள்ள அவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை? இந்த வழிமுறை தப்பாகத் தெரியவில்லையா? அந்த நாட்டுக்காரனுக்கு அது தப்பாகத்தானே தெரியணும். நீங்கள் எல்லாம் உணர்ச்சிவசப்பட்ட பேசிக்கொண்டுபோனால் நாடு என்ன கதிக்கள் உள்ளாகும். நாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதனை பார்ப்போமேயானால் ஆயதத்தினை தூக்கினால் அதனை எல்லா அரசும் தடுக்கும்.
ஏன் காஷ்மீரில் சுடுகிறீர்கள் இராணுவத்தினைக்கொண்டு இறக்குகிறீர்கள் அது எதற்கு அதற்க எதிராக போராடுவீர்களா? இங்கே தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லாம் ஒன்றாய்ச்சோந்து காஸ்மீரைவிட்டு வெளியே போ என்று நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்த நாங்கள் போராட்டம் பண்ணினால் நீங்கள் எங்களுக்கு என்ன முத்திரை குத்துவீர்கள.; நமக்கு எது சரியென்று படுகின்றதோ அடுத்தவனுக்கும் அது சரியென்று படணும். அன்னிய நாட்டுக்காரன் நம்மை ஆக்கிரமித்தால் மாத்திரம்தான் எதிர்துப் போராடுவதனை உலகம் எற்றுக்டிகொள்ளுமே தவிர உள்நாட்டில் இருக்கிறவன் இராணுவத்தை, பொலிஸை எதிர்த்துப் போராடினால் அதனை நீங்கள் நியாயப்படுத்தினால் உங்கள் நாட்டில், உங்கள் மானிலத்தில் அதற்கு என்ன விடை?. தமிழ் நாட்டில் ஒருவன் இந்தமாதிரி கிளம்பிவந்தா அவனை சுட்டுக்கொன்றீர்களேயானால் அவனும் தமிழனாகத்தானே இரப்பான். அப்ப தமிழனாக இருப்பதன் காரணத்தினால் அவன் ஆயதத்தினை தூக்கினாலும் குண்டுவாங்கி சாவு என்று சொல்லுவீங்களா? இவங்க (புலிகள்) இராணுவத்தினருடன் மட்டும் போராடுபவாகளா அப்பாவி மக்களை கொல்லுகிறான், கொல்லுகிறான் என்று சொல்லகிறீர்களே விடுதலைப் புலிகள் குண்டுவைத்து கொன்றவர்கள் எல்லாம் இராணுவத்தினரா? பஸ்ராண்டில், பள்ளிக்கூடத்தில் குண்டுவைக்கவில்லையா? நம்ம நாட்டில் பிரதமர் ராஜீவ் காந்தியை குண்டுவைத்:து கொல்லவில்லையா? சக போராளி இயக்கங்களை கொல்லவில்லையா இதனை மனிதன என்று பார்ப்பதா அல்லது தமிழன் என்று பார்ப்பதா? தமிழன்போய் எந்த அப்பாவிச் சிங்களவனைக் கொன்றாலும் எங்களுக்கு கவலை வராதா? சிங்களவன்போய் கொல்கிறான் என்றால் மட்டும்தான் கவலைவருமா? இது மனிதாபிமானமா? இவன் (புலி) என்னமோ சாத்வீகமான ஆள் மாதிரி நினைத்துக்கொண்டு நாம் இங்கு போர் நிறுத்தம் என்கின்றோமே அது எப்படி அவன் யுத்தம் நடத்தும்போது போர் நிறுத்தவான்.! அது அந்து நாட்டினுடைய பிரச்சினை. அதில்போய் தலையிடமுடியுமா யுத்தம் தொடங்கியிருக்கிறோம் குண்டுபோடப்போகிறோம் என்று பொதமக்களை எல்லாம் வெளியே வாங்க என்று அவங்க அறிவிப்பு செய்றாங்க கஸ்டத்தை சகித்துக்கொண்டு பொதுமக்கள் வெளியே வரத்தான் வேண்டும.; அவங்களுக்கான உதவிகளைப்பற்றி பேசினால் பரவாயில்லை அதற்கு ஏன் போர்நிறுத்தம்பற்றி பெசுறீங்க. நம்ம நாட்டிலேயே வன்மறையை அவிழ்த்துவிட்ட ஒரு கூட்டம் எந்தவொரு நீதி, நேர்மையுமில்லாமல் ஆயுதத்தை தூக்கிக்கொண்டு அப்பாவி மக்களை கொல்லுவதையோ, சுடுவதையோ கொள்கையாகக் கொண்டுள்ள ஒரு கூட்டம் இது பயங்கரவாதமாக தெரியவில்லையா? இந்தமாதிரி ஒரு கலாச்சாரத்தை நீங்கள் விதைப்பீர்களேயானால் இங்கே இருப்பவர்களுக்கும் அந்தமாதிரி சிந்தனை வருமே! நாங்கள் முஸ்லிம்கள் சிந்திக்கிறோம். நாங்கள் ஒரு நாட்டில் இருக்கிறோமா அந்த நாட்டிற்கு விசுவாசமாக இ;க்கவேண்டும். சட்டதிட்டத்திற்கு கட்டுப்படவேண்டும் ஜனநாயக வழியிலே போராடவேண்டும் அவர்கள் (புலிகள்) ஆயதம் தாக்கினார்கள் என்னும் பொழுது அரசாங்கம் திருப்பி ஆயதம் தங்;கினால் அதை எப்படி தப்பு என்று கூறமுடியும், ஆயதம் தாக்காதவனையே மண்டையை உடைக்கிறீங்க , பொய் வழக்குப்போட்டு உள்ளே தள்ளுறீங்க. அப்ப ஆயுதம் தூக்கியவனை அவன் தமிழன் விட்டிடுங்க என்றால் அதனை எப்படி எற்றுக்கொள்ளமுடியும்.. அப்ப இவங்களால (புலிகளால) கொல்லப்பட்ட தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா. புத்மநாபா, சிறீ சபாரட்ணம் எல்லாம் தமிழர்கள் இல்லையா? ரெலோ, டெஸ்ஸோ என்றெல்லாம் எத்தனையோ இருந்தன அவங்களையெல்லாம் அனுப்பிட்டாங்க. அந்த அமைப்புக்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? இப்போது நாங்கள் என்ன சொல்லுகிறோம், நியாயம், நேர்மையை மழுங்கவைத்துவிட்டு ஏதோ நம்மளை ஒரு மூடர்களாக எல்லோரும் சேர்ந்து வழிநடத்திச் செல்கிறார்களோ என்ற அளவுக்கு இந்த நடவடிக்கை இருக்கின்றது. இதை நாங்கள் ஆதரிக்க மடியாது. தமிழர்களுக்க உதவவேண்டுமென்கிறீர்களே நீங்கள் எப்படி உதவுவீர்கள் நம் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இலங்கைக்காரன்வந்து உதவவேண்டுமென்றால் நம் நாடு ஒத்துக்கொள்ளுமா? ஓவ்வொரு நாட்டிற்கும் ஒரு இறையாண்மை உண்டு என்னதான் நீங்கள் வசூல் பண்ணினாலும் நிதி திரட்டினாலும் அத்துமீறி கொடுக்க முடியுமா? எங்கமக்களுக்கு நாங்கள் கொடுப்போம் நீ போயா என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.

0 commentaires :

Post a Comment