3/03/2009

மட்டக்களப்பில் அதிர்ச்சியூட்டும் செய்தி.

மட்டக்களப்பு வெல்லாவெளியில்
கடந்த 28.02.09 அன்று பச்சிளம் சிறுமி(14) ஒருவர் பாலியல் வல்லுறவுக்குAdd Imageஉட்படுத்தப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சிறுமி தெய்வநாயகம் இராசமணி தம்பதியினரின் புதல்வியாவார். இவர்கள் வீட்டிலிருந்த போதே அச் சிறுமி பலாத்காரமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் செயலினைப் புரிந்தவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பெற்றோரிடம் விசாரணை செய்தபோது தகவல்களை வெளியிட மறுப்பதோடு மிகவும் பயப்படுவதாகவும் தெரியவருகிறது.
இதேபோல் நேற்று (02.03.09) மீண்டுமொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அம்மன் குளம், வெல்லாவெளி என்னும் முகவரியையுடைய மூன்று பிள்ளைகளின் தாயும் மகளீர் சங்க பொருளாளருமான திருமதி சிவகுமார் மகாதேவி(31) தனது கணவனின் முன்னே கதறக் கதற பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்து விட்டு அவரின் உடலை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றதாக அவரது கணவர் தெரிவிக்கின்றார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, நேற்றிரவு 12.30 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாதோரால் அவர்களிடத்தில் இருந்த அனைத்து தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றை சூறையாடிவிட்டு அவ்வீட்டின் உரிமையாளரான சிவகுமார் என்பவரைக் கட்டி வைத்து விட்டு அவரின் மனைவியை தன் கண்முன்னே கதறக் கதற பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்தார். பின்னர் தனது மனைவியை இழுத்துச் சென்றதாகவும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அங்குள்ள மக்கள் இரவு நேரங்களில் உறவினர்களோடு சேர்ந்து உறங்குவதாக அங்குள்ளமக்கள் தெரிவிக்கின்றார்கள். இந்நிலை தொடர்பாக மக்கள் பெரும் பீதி கொண்டுள்தாகவும் தெரிவிக்கின்ற மக்கள் இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதனைப் பொலிஸார் விசாரணை செய்து தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றார்கள். இப்பிரதேசம் முற்றுமுழுதாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.



0 commentaires :

Post a Comment