காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற பொது வைபவமொன்றில் பொலிஸாரொருவரின் துப்பாக்கியிலிருந்து தவறுதலாக வேட்டு தீர்த்ததால் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம். எல். ஏ. எம். ஹிஸ் புல்லாஹ், துரையப்பா நவரத்தினராஜா ஆகிய இருவரும் எவ்வித ஆபத்துமின்றி மயிரிழையில் உயிர்தப்பினர்.
காத்தான்குடியில் கால்நடை வைத்திய அலுவலகத்திற்கான அடிக்கலை மாகாண அமைச்சர்கள் இருவரும் நாட்டிக் கொண்டிருந்த போது மாகாண அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜாவுக்கு பாதுகாப்பு வழங்கும் பொரிஸார் ஒருவரின் கையிலிருந்த துப்பாக்கியிலிருந்து தவறுதலாக வேட்டு தீர்க்கப்பட்டுள்ளது.
மாகாண அமைச்சர்கள் இருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியிலிருந்து வேட்டு தீர்க்கப்பட்டதற்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளியே காணப்பட்டது. இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
0 commentaires :
Post a Comment