இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் கிழக்கிலங்கையின் பிரதிநிதியும்இ கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் ஸ்தாபகருமான கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர் நினைவாக முத்திரை வெளியிடும் வைபவம் நேற்று கல்முனை ஸாஹிராக் கல்லூரி எம். எஸ். காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலாவது காகித உறையினை ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரத்திற்கான ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் மற்றும் எம். எஸ். காரியப்பரின் பேத்தி மரினா நளிமுதீன் ஆகியோர் கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபர் எம். ரத்னசிங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீதும் காணப்படுகின்றார்.
0 commentaires :
Post a Comment