3/12/2009

கிழக்கு முதல்வரின் பிரத்தியேகசெயலாளர் ஒருவரின் வீட்டின்மீது கைக்குண்டு வீச்சு.

ரி.எம்.வி.பியின் முக்கிய உறுப்பினரும் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர்களில் ஒருவருமான ஜெயந்தன் என்பவரின் வீட்டின்மீது இன்று(10.03.09) இரவு 11.00மணியளவில் வினாயகபுரம், வாழைச்சேனையில் அமைந்துள்ள அவரின் வீட்டின்மீது இனந்தெரியாதோரால் கைக்குண்டு வீசப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இக் கைக்குண்டு வீசப்படுகின்ற போது குறித்தநபர் வீட்டில் இல்லை அதே வேளை அவரின் தயார் உட்பட பல உறவினர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதே மேற்படி சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. வீட்டின் மீது வீழ்ந்து வெடித்ததனால் பலத் சேதம் வீட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதே நேரம்; வீட்டிலிருந்த எவருக்குமே எதுவித காயங்களுயும் ஏற்படவில்லை. இக் குறித்த தினத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் மட்பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக சாரதிகளில் ஒருவரான செ. பாலகிருஸ்ணன்( தம்பிராஜா) என்பவரின் அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலையில் அமைந்திருக்கின்ற வீட்டிற்குள் நுழைந்த ஆயுதக்கும்பல் குறித்த சாரதியின் மனைவி மற்றும் குழந்தைகளையும் மெரட்டி அங்கிருந்த சொத்துக்களையும் சூறையாடிச் சென்றதாகவும் தெரியவருகிறது. இச் சம்பவம் நடைபெறும்போது சாரதி தம்பிராஜா வீட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அவர் வேலையின் நிமிர்த்தம் முதலமைச்ருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி தாக்குதல்கள் தொடர்பாக ரி.எம்.வி.பி. வட்டாரங்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது இவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆயுததாரிகளின் வேலை என தெரிவித்தனர்.


0 commentaires :

Post a Comment