3/17/2009

‘உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது’

<

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறும்போது அரசா ங்கம் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அடிபணியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எமது நாட்டை வேறு எந்த நாட்டு க்கோ நிறுவனத்துக்கோ கீழ்ப்படுத்த இடமளிக்க முடியாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், முழு உலகமும் பொருளாதார நெருக்கடிக்குள் அகப்ப ட்டுள்ள இத்தருணத்தில் நாட்டின் நலன், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திக் காது அரசியல் இலாபம் தேடுவதிலேயே சில சக்திகள் முனைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாடளாவிய ரீதியில் 92 பேருக்கு புதிதாக கணக்காளர்களாக நியமனம் வழங்கும் விசேட வைபவம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சர்கள் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய, பந்துல குணவர்தன உட்பட திறைசேரி மற்றும் நிதியமைச்சின் உயரதி காரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
முழு உலகுமே பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளது. இலங்கைக்கும் நிதி நெருக்கடி உள்ளது. இத்தகைய வேளையில் நாட்டின் எதிர் காலத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் கடன் பெற முற்படும்போது எதிர்க்கட்சியினர் பல் வேறு விமர்சனங்களை முன்வைக்கி ன்றனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகி ன்றனர். இவர்கள் குறுகிய அரசியல் இலாபத்திற்காகச் செயற்படுகின்றனர்.
அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் பயணம் தொடர வேண்டும். மக்கள் அரசாங்கத்திடம் வழங் கிய ஆணை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற குறிக்கோளிலேயே அரசாங்கம் செயற்படுகிறது.
இதனை விமர்சிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு எந்த ளவு நிதி செலவாகியது என்பதை சிந்தி க்கத் தவறிவிட்டனர். கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அபிவி ருத்தி நடவடிக்கைகளுக்காக 103 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது. அதைப்பற்றி எவரும் பேசுவதில்லை.
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பல முன்னணி நாடுகள் தமது குறிக்கோளையும் எதிர்கால இலக்கினையும் மாற்றிக்கொண்டுள்ளன.
அமெரிக்க உட்பட பல நாடுகள் அரச துறைகளில் வேலை நீக்கத்தை மேற்கொள் கிறது. சம்பளத்தை குறைப்பதுடன் வீடுகளி லிருந்து வெளியேற்றும் நடவடிக்கை களையும் முன்னெடுத்து வருகிறது. எத்தகைய நிலையிலும் எமது அரசாங்கம் இத்தகைய தீர்மானங்களை எடுக்க வில்லை. மாறாக அரச துறையை மேம் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடு த்து வருகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை இலங் கையின் அரசதுறை தனியாருக்குப் பலமாகியுள்ளது. உலக பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாம் ஏற்கனவே மேற்கொண்ட ஆயத்தங்கள் காரணமாக நெருக்கடிகளிலிருந்து மீள முடிந்துள்ளது.
நாட்டின் அபிவிருத்தி, பயங்கரவாத த்திற்கெதிரான யுத்தம், உலக பொருளா தார நெருக்கடி, எரிபொருள் விலை யேற்றம் என ஒரே வேளையில் நான்கு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து அதில் வெற்றி கண்டுள்ள அரசு எமது அரசே.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ள்ளது. எமது படையினர் அர்ப்பணிப்புடன் பல தியாகங்களைச் செய்து வடக்கு மக்க ளைப் புலிகளிடமிருந்து மீட்கும் மனிதா பிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 20 கிலோ மீற்றர் தூரமே கைப்பற்றப்பட வேண்டியுள்ளது.
இது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த மேயன்றி ஒரு இனத்திற்கு எதிரான யுத்த மல்ல. அப்பாவி மக்களை மீட்கும் மனி தாபிமான பணியே இடம்பெறுகிறது.
இத்தகைய தருணத்தில் ஏனைய பகுதிகளில் குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி நாட்டை திசை திருப்ப புலிகள் முயற்சிக்கின்றனர். இதன் விளைவே அக்குறஸ்ஸ தாக்குதல். புலிகளுக்கு இது புதிதல்ல. ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலும் மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாறு புலிகளுக்கு உண்டு என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.



0 commentaires :

Post a Comment