சுயதொழில் முயற்சியாக குடியிருக்கும் வளவுகளிலே தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையை அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சியும், கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தின் கரையோரப் பகுதியிலுள்ள 12 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்களுக்கு இருநாள் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
பயிற்சியை முடித்துக்கொண்டவர்கள் குடியிருக்கும் வளவுகளிலே தேனீக்களை கூடுகளிலே வளர்க்க ஆரம்பித்துள்ளனர். மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 55 பெண்களுக்கு இலகுகடன் உதவிகளும், தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளும் வழங்கப்பட்டன.
இது பெண்களுக்கான ஒரு சுயதொழில் முயற்சியாக அமைந்துள்ளது. தற்போது பெருமளவு காடுகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டுவருவதால் தேனீ இனம் அருகி வருவதைப் பாதுகாக்கும் முகமாகவே வளவுகளில் தேனீ வளர்க்கும் திட்டத்தை விவசாய திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது என்று விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

0 commentaires :
Post a Comment