கருணா அம்மான் என்றழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளீதரன் என்பவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவமும், அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து பொதுஜன அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ள முன்வருபவர்கள் வரவேற்கப்படவேண்டும். அவர்கள் சார்ந்து போராடிய மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடிய அதிகாரமிக்க பதவிகளும் வழங்கப்படவேண்டும். இதன் காரணமாகத்தான் முரளீதரன் எம்.பி அவர்கள் தேசியப் பட்டியலில் பதவி வழங்கப்பட்டு இன்று அவருக்கு அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.. பயங்கரவாதத்திலிருந்து அம்மானது வெளியேற்றம் மட்டும் அவரை தேசிய நல்லிணக்கத்தின் நாயகனாக்கிவிடாது. மண்ணெண்ணை மகேஸ்வரனுக்கு இந்து கலாச்சார அமைச்சுப் பதவி கொடுக்கலாம். நிதி அமைச்சுப் பதவி வழங்கலாமோ? கௌரவத்திற்காகவும் அரசியல் கணக்குவழக்குகளை முன்வைத்தும் ஒரு சில அமைச்சுக்கள் வழங்கப்படலாம்.
ஆனால் ஒரு நிதி அமைச்சேர்?, நீதி அமைச்சோ? அந்தந்த துறைசார்ந்த வல்லுனர்களுக்கு மட்டுமே வழங்கமுடியும். அதேபோல்தான் முரளீதரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க அமைச்சு எனப்படுவது ஓர் துறைசார் தகுதி மிக்கவர்களுக்கு வழங்கப்படவேண்டியதொன்று. அந்த வகையில் கருணா அம்மானுக்கு இந்த அமைச்சு வழங்கப்பட்டமையானது ஒரு மோசமான முன்னுதாரணமாகும். ஏனெனில் முரளீதரன் அவர்கள் புலிகளிலிருந்த காலங்களில் அவர் எவ்வாறான மனநிலையினை கொண்டிருந்தாரோ அதிலிருந்து அவர் முற்றிலும் மாறிவிட்டதற்கான அறிகுறிகள் எதுவும் இன்றும்கூட அவரில் தென்படவில்லை.ஆனபோதும் அவர் புலிகளை விட்டுவெளியேறி வந்துவிட்டார் என்பதனால்தான் முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களை பெரிதுபடுத்தாது மௌனமாயிருக்கின்றனர்..
அதேவேளை கருணா அம்மானின் அண்மைக்கால நடவடிக்கைகளும்கூட தமிழ், முஸ்லிம் விரிசல்களை ஊக்கப்படுத்துவதாகவே அமைந்திருப்பது வேதனைக்குரிய தொன்றாகும். இதுவரை கருணா அம்மான் நடாத்திய மக்கள் சந்திப்புகள் ஒன்றிலும்கூட முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளாமையும் ஒரு முஸ்லிம் கிராமத்திற்கேனும் அவரால் தைரியமாக சென்று அம்மக்களின் முகத்தில் விழிக்க அவரால் முடியாமலே இருக்கின்றது. அதுமட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவர் தெரிவித்து வருகின்ற கருத்துக்கள் மிகவும் பொறுப்பற்றனவாகவே இருக்கின்றன. முரளீதரன் நாட்டுக்குத் திரும்பியவுடன் அவர் ஆரம்பித்த முதலாவது அரசியல் வேலைத்திட்டமே முதலமைச்சரா, முதலி அமைச்சரா என்ற சின்னத்தனமாக துண்டுப் பிரசுரத்துடனேயே ஆரம்பமானது.
அதாவது முதலமைச்சர் சந்திரகாந்தன் முஸ்லிம் மக்களையும் அரவணைத்து பக்கசார்பற்ற முறையில் மேற்கொண்டுவரும் பணிகளுக்கு முரளீதரன் தந்த விளக்கம் இந்தப் பிரசுரமாகும். இவ்வாறு இனவாதத்தினைக் கிளறி வாக்குவங்கிகளைநோக்கியே குறியாக செயற்படுவது அனாகரீகமான அரசியலாகும். ஆனால் முரளீதரனது தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டங்கள் அவரை இன்னுமொரு இன வெறியனாகவே காட்டி நிற்கின்றது. ரீ.எம்.வி.பி யின் உள் முரண்பாடுகள் தொடர்பாக அசாத் மௌலானாவுடன் அவருக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவரை “யார் இந்த மௌலானா” “மாற்றான் இனம்”, “அவருடைய இனத்தோடு சேரட்டும்”, “இவர்தான் காட்டிக்கொடுத்த இனத்தைச் சேர்ந்தவன்” என்றெல்லாம் முரளீதரன் சார்பு இணையத் தளங்கள் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டிவந்ததனை எல்லோரும் அறிவர். அதுமட்டமல்ல முரளீதரன் சென்றுவரும் தமிழ் கிராமங்கள்தோறும் அவர் நடாத்தும் உரையாடல்கள் மிகக் கீழ்தரமாக உள்ளதாக மக்கள் தொடர்ந்து தெரிவித்த வண்ணமே உள்ளனர்.
இதுபோன்ற வார்த்தைகள் இப்போது கல்வி அறிவற்ற சாமானியர்களின் வாயிலிருந்துகூட வருவதில்லை. கிழக்கு மாகாணம் பலர் மூக்கில் விரலை வைக்குமளவிற்கு மிக அமைதியாக ஆனால் உறுதியாக இன உறவுகளை சீர்செய்து வருகின்றது. இந்த நிலையில் வெண்கலக் கடைக்குள் யானை நுழைந்தது போல் கருணா அம்மானின் அரசியல் பேச்சுக்கள் நிலைமைகளை குழப்பிவிட முயல்கின்றன. கொஞ்சநஞ்சம்கூட பொறுப்பற்ற நிலையில் முரளீதரன் அவர்களின் பேச்சக்கள் அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது. அவருக்கு அரசியல் கொள்கைகளோ, கோட்பாடுகளே இல்லாதிருக்கலாம் அதற்காக முஸ்லிம்களா கேடு? இந்த நிலையில் முரளீதரன் அவர்களுக்கு தேசிய நல்லிணக்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை அந்தப் பொறுப்பான பதவியையே கேலி செய்வதாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல கிழக்குமாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் “சமாதானத்தின் தூது” என்கின்ற வேலைத்திட்டத்தினையும் குழப்பி அடிக்கும் கைங்கரியத்தில் முரளிதரன் இறங்கியிருக்கின்றார். அபிவிருத்தியூடாக சமாதானம் என்கின்ற மாகாணசபையின் மிக முக்கியமான வேலைத்திட்டமாகிய சமாதானத்தின் தூது நிகழ்வானது தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை ஒவ்வொரு அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான வேலைத்திட்டங்களில் பங்கெடுக்க வைப்பதனூடாக நடாத்தப்பட்டு வருகின்றது. இந்த சமாதானத்தின் தூது நிகழ்வின் அங்குரார்ப்பன வைபவம் சென்ற மாதம் மூவினங்களும் கலந்து வாழும் திருகோணமலையின் மூதூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது. அந்த நிகழ்விற்கு தமிழ் மக்களை செல்லவிடாது துப்பாக்கி மிரட்டல்கள் விடப்பட்டு உள்ளது. முரளிதரனின் ஆயுதப்பிரிவினரே இச்செயற்பாடுகளில் இறங்கியதாக அப்பிரதேசவாசிகள் வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதேபோன்று கடந்த சனியன்ற அக்கரைப்பற்றில் நடந்த இந்தச் சமாதானத்தின் தூது நிகழ்விலும் இதே போன்று தமிழ் மக்கள் நிகழ்வுகளுக்கு செல்லக்கூடாது என மிரட்டப்பட்டுள்ளனர். ஆனால் இவைகளை யாரும் வெளியே செய்திகளாக்கவில்லை. சிலவேளை அது சந்திரகாந்தன் அவர்களின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் இவைபற்றியெல்லாம் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் முரளிதரன் எம்.பி. மீது கடுமையான அதிருப்தியுடனே காணப்படுகின்றனர். இந்த நிலையில் முரளிதரனுக்கு தேசிய நல்லிணக்க அமைச்சு வழங்கப்பட்டிருப்பது மிகவும் கேலிக்கூத்தானதொரு விடயமாகும்.
தேசிய நல்லிணக்கம் என்பது பொறுப்பு வாய்ந்த ஒரு செயற்பாடு. அதுமட்டுமல்ல இனம், மதம், மொழி, பற்றிய ஆழ்ந்த அறிவும் கற்றலும் புத்திஜீவித்தனமும் உடையோர்களால் மட்டுமே தேசிய நல்லிணக்கம் பற்றி சிந்திக்க முடியும். அத்தோடு சகிப்புத் தன்மையும் நெகிழ்ச்சியான மனோபாவமும் உளசுத்தியும் கொண்டவர்கள் அலங்கரிக்க வேண்டிய இந்தப் பொறுப்புக்கு முரளிதரன் எம்.பி. எவ்வகையில் பொருத்தமானவர்?. அதற்காக அவர் தகுதியற்றவர் என்றோ திறமையற்றவர் என்றோ வாதிடுவது இங்கு நோக்கமல்ல. அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அமைச்சானது அவருக்கரியதல்ல என்பதே உண்மை. அவர் இந்தப் பதவியால் பெருமை பெறலாம். ஆனால் அதுவல்ல மக்களின் தேவை. அந்தப் பதவி அவரால் பெருமை பெறவேண்டும். அதை முரளிதரன் சாதிப்பாரா என்பதுதான் இங்கு கேள்வி. சுமார் 25 வருடகாலம் கிழக்கு மாகாணத்தை மட்டுமல்ல நாட்டின் மற்றய பிரதேசங்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்று கூறுபோட்டு இனவெறிகொண்டு கொக்கரித்த பிரபாகரனின் அடுத்தகட்ட கொமாண்டராக பணியாற்றிய இவர் முரளிதரன் எம்.பி. ஆக மாறியதன் பின்பேனும் தமிழர்கள், முஸ்லிம்கள். சிங்களவர்கள் என்னும் இன எண்ணக்கருவுடன் இலங்கை மக்களை நோக்காது அனைவரும் இலங்கையர்கள் என ஏற்றுக்கொள்ளாதவரை தேசிய நல்லிணக்க அமைச்சு எப்படி அவருக்கு பொருத்தமானதாகும் என்பதே இங்கு கேள்வியாகும்.

0 commentaires :
Post a Comment