3/22/2009

சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஜயம்

சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் பைசார் முஸ்தபா நேற்றும் இன்றும் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அம்மாகாணத்தின் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளார்.

நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சகிதம் திருகோணமலை மாவட்டம் கன்னியா , மட்டக்களப்;பு மாவட்டம் வாகரை ,பணிச்சங்கேனி ,பாசிக்குடா மற்றும் கல்லடி ஆகிய இடங்களில் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்திக்கு என அடையாளம் காணப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

இன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள உல்லை மற்றும் அறுகம்பை ஆகிய கடலோர பிரதேசங்களுக்கும் பிரதி அமைச்சரும் மாகாண முதலமைச்சரும் விஜயம் செய்கின்றனர்.

"கிழக்கு மாகாண உல்லாச பயண அபிவிருத்தியில் வெளி நாட்டு மற்றும் வெளி மாவட்ட முதலீட்டாளர்களை ஈடுபடுத்தும் நோக்கம் இல்லை.அம் மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்" என்கின்றார் பிரதி அமைச்சர் பைசால் முஸ்தபா.

"தற்போது இம் மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காகவே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.அந்த அந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் " எனறும் குறிப்பிடுகின்றார்.

0 commentaires :

Post a Comment