3/16/2009

திருகோணமலை சிறுமி படுகொலை: பிரதான சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

ஒரு கோடி ரூபா கப்பம் கோரி சிறுமி ஒருவரை கடத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்றுக்காலை (15) பொலி ஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 6 வயது மாணவியான ஜுட் ரெஜி வர்சா கடந்த 11ம் திகதி இனந்தெரியாத கும்பலால் கடத்தப் பட்டார். இவரை விடுவிக்க ஒரு கோடி ரூபா கப்பம் கோரப்பட்டது. ஆனால் கடத்தல்காரர்கள் சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்து உரப்பையொன்றில் இட்டு வடிகானொன்றுக்கு அருகில் வீசியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேக நபர் ஒருவர் உட்பட அறுவர் திருமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களை பொலிஸார் பலத்த விசாரணை க்குட்படுத்தினர். வானொலி நிலையமொன்றை ஆரம்பிக்கவே சிறுமியை கடத்தி பணம் பெற முயன்றுள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இதேவேளை திருகோணமலை பொலிஸார் நேற்று பிரதான சந்தேக நபரை சம்பவம் நடைபெற்ற இடத் துக்கு பொலிஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் இடை வழியில் வைத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கழுத்தை கடித்துத் தப்ப முயன்றதாகவும் இதன்போது பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைதான சந்தேக நபர்களில் ஒருவர் தொடர்பாடல் துறை பட்டதாரி எனவும் அறிய வருகிறது. திருகோண மலை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வரு கின்றனர்.


0 commentaires :

Post a Comment