3/28/2009

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (30) காலை 9 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி தலைமையில் நடைபெற உள்ள இக் கூட்டத்தில் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு துறை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட உள்ளது.
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டர் அமைப்புக்கள், மற்றும் கருத்திட்ட அமைப்புக்கள் என்பவற்றின் மூலமாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றியும், புதிய திட்டங்களை ஆரம்பித்து அமுல்படுத்துவது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



0 commentaires :

Post a Comment