3/07/2009

புதிய மொத்தையில் பழைய (கள்)ளினை அடைத்து வியாபாரம் செய்ய முனையும் பிரபுல் பித்வாய் என்பவர் யார்?


1 வரைபடம் ஒன்று இலங்கையின் (9) மாகாணங்களையும் வெளிக்காட்டுகின்றது

2 வரைபடம் இரண்டு கிழக்கு மாகாணம்

3 வரைபடம் மூன்று வடமாகாணம்

4 வரைபடம் நான்கு சமஸ்டி கட்டமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்ட பிரதேசம் அல்லது புலிகளின் தமிழீழம்
இலங்கையில் தீவிரமடைந்திருக்கும் மனிதாபிமான நெருக்கடியும் இந்தியாவின் அணுகுமுறைகளும் என்னும் தலைப்பில் (தேனி) இணையத்தளத்தில் பிரபுல் பித்வாய் என்பவரால் வெளியிடப்பட்ட கட்டுரைக்கான விமர்சனம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் எமது வினாக்களுக்கு விடையளிக்க முன்வருவாரா?
குமாரதுரை டென்மார்க்
சமஷ்டி கட்டமைப்புக்குள் வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்ட அதிகார பரவலாக்கலை அமுல்செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை இணங்க வைப்பதே இந்தியாவின் சாதனையாக இருக்க வேண்டும் இவ்வாறு தெரிவிக்கின்றார் பிரபுல் பித்வாய்.. தூற்றல் மழைக்கு துளிர்விட்ட காளான்களாய் விடுதலைப் புலிகள் என அழைக்கப்படும் சர்வதேசப் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியைத் தொடாந்து பல புதுப்புது அரசியல் ஆய்வாளர்கள் இன்று இலங்கைப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது வேடிக்கையான விடயமாகவே நாம் கருதுகின்றோம்.
மேற்படி அரசியல் வல்லுனர்களுக்கு இலங்கையில் (9) மாகாணங்கள் இருப்பதனை நாம் முதலில் ஞாபகமூட்ட விரும்புகின்றோம். அம்மாகாணங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காகவுமே 13வது அரசியலமைப்பு இலங்கை –இந்திய உடன்படிக்கைக்கமைய உருவாக்கப்பட்டது என்பதனையும் இச்சந்தாப்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றோம். தம்மை மாபெரும் அரசியல் ஆய்வலர்கள் என அடையாளங்காண்பிக்க முற்படுபவர்கள் பலரும் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்காகத்தான் இந்திய –இலங்கை உடன்படிக்கை உருவாக்கப்பட்டது என பிரச்சாரம் செய்வது அவர்களின் அரசியல் அறிவீனத்தின் வெளிப்பாடு என்பதே எமது கருத்தாகும்.
இலங்கையில் இரண்டு இனங்களான தமிழர்களும், சிங்களவர்களும் மட்டும் வாழவில்லை. அங்கு முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என மேலும் இரு இனத்தவர்களும் மிகச் சிறிய தொகையினராக பறங்கியர்களும் வாழ்கின்றனர். அண்மைக்கால சனத் தொகை புள்ளிவிபரங்களுக்கமைய முறையே சிங்களவர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் இலங்கைத் தமிழர் என மூன்றாவது இடத்திலேயே இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை (6 விகிதமாக) இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தான (இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 31 வீதமான நிலப்பிரதேசத்தினையும் 56 வீதமான கடல் பிராந்தியத்தினையும் இணைத்ததான இலங்கைத் தமிழர்களுக்கான சம\்டி நிர்வாகம் ஒன்றினை உருவாக்குமாறு கோரிக்கை விடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களிடம் ஜனநாயகத்தினையோ, அன்றி மனிதாபிமானத்தினையோ எதிர்பார்க்கமுடியாது என்பதே எமது கருத்தாகும்.
இவர்களை அரசியல் ஆய்வலர்கள் என்பதனைவிட பயங்கரவாதிகளின் பாதுகாவலர்கள் என்பதே பொருத்தமானதாகும். (6)வீதமான இலங்கைத் தமிழர்களுக்கு 31 வீதமான நிலப்பிரதேசத்தினையும் 56 வீதமான கடல் பிராந்தியத்தினையும் வழங்குமாறு ஆலோசனை கூறுபவர்கள் எஞ்சியுள்ள நிலப்பரப்பான 69 வீத நிலப்பரப்பில் 9 வீதமான மக்கள் தொகையினை உள்ளடக்கிய முஸ்லிம் மக்களுக்கும் (5.6 வீதமான) மக்கள் தொகையினை உள்ளடக்கிய மலையக மக்களுக்கும் (77) வீதமான மக்கள் தொகையினை உள்ளடக்கிய சிங்கள மக்களுக்கும் வழங்கப்படவிருக்கின்ற நிலப் பிரதேசத்தினையும், கடல் பிராந்தியத்தினையும் கணக்கிட்டு கூறமுடியுமா? மேலே விடுபட்டுள்ள (3) வீதமானவர்கள் பறங்கியர்களும், வேடுவர்களும் ஏனைய இனத்தினரான சிறு, சிறு குழுக்களுமே என்பதனையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.
வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு என்பதெல்லாம் ஏற்கனவே மூன்று தடவைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டவை என்பதனை மேற்படி வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பான கருத்துக்களை தொடர்ந்தும் முன்வைக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆய்வலர்கள் என தம்மை அடையாளப்படுத்துபவர்களும் அறியவேண்டியது அவசியமாகும்.
1977 ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழீழக் கோரிக்கையினை முன்வைக்கப்பட்டு (21.07.1977) ல் நடாத்தப்பட்ட 8 வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது அன்றைய வடகிழக்கிலிருந்த மொத்த தமிழ் வாக்காளர்களான 878.143 வாக்காளர்களில் (421.488) வாக்காளர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். இத்தொகை மொத்த தமிழ் வாக்காளர்களில் (48 வீதமானவர்கள்) மட்டுமே. இவ்வாக்குகளில் முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்னும் பெயரில் உதயசூரியன் சின்னத்தில் 4 தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற (26.496) வாக்குளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 45 வீதமான தமிழ்மக்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவளித்தார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. சுயநிர்ணய உரிமையும், தன்னாதிக்கமுமுள்ள ஒரு நாட்டினுள் மேலுமொரு நட்டினை உருவாக்குவதானால் மேற்படி பிரதேசத்தில் வாழும் வாக்காளர்களில் குறைந்தபட்சம் 67 வீதமானவர்கள் வாக்களிக்க வேண்டுமென்பதனையும் மேற்படி ஆய்வலர்கள் அறிந்துகொள்வது அவசியமாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்ட தமிழீழக் கோரிக்கை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டமையைத் தொடர்ந்து 1981 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியான திரு ஜே.ஆர் ஜயவர்தனா அவர்களால் முன்வைக்கப்பட்ட மாவட்டசபை அதிகாரப் பகிர்வினை ஏற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் சகல மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தியதற்கமைய யாழ்ப்பாணம், வவவுனியா, மன்னார், திருமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெற்றிபெற்று நிர்வாகத்தினைப் பொறுப்பேற்றனர்.
பின்னர் 1983 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட (1987.07.29) ந் திகதிய இலங்கை –இந்திய உடன்படிக்கைக்கமைய (19.11.1988) திகதி இடம்பெற்ற வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் வடமாகாணத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் எவரும் பங்குகொள்ளாது அதனை நிராகரித்தனர்.
1 1977 ம் ஆண்டு இடம்பெற்ற வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
2. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபைத் தேர்தல் வடமாகாண மக்களால் பகிஸ்கரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
3 இலங்கையின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கமைய வடகிழக்கு இணைப்பு செல்லபடியாகாது என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கமைய (10.05.2008) ந்திகதி கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டு நிர்வாகமும் தேர்வுசெய்யப்பட்டு அங்கு சிறப்பான நிர்வாகம் நடைபெறுகின்றது. இந்நிலையில் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதிகளின் அராஜக நிர்வாகமொன்றினை உருவாக்குவதற்கு இலங்கையிலுள்ள தமிழர்கள் உட்பட எந்தவொரு இனமும் எள்ளளவேனும் அனுமதிக்க மாட்டாாகள் என்பது எற்கனவே இடம்பெற்ற தேர்தல்களின்மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது சம\ட்டி அரசியலமைப்பு பற்றியோ பிரஸ்தாபிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்கலாம், அரசியல் ஆய்வாளர்களாக இருக்கலாம் இவர்கள் அனைவருமே தமிழினத்தினதும், எமத தாய் நாடான இலங்கையினதும் விரோதிகள் என்பதே யதார்த்தமாகும்.
மேற்படி கட்டுரை தொடர்பாக விமர்சனம் தெரிவிக்க விரும்புபவர்கள் யாராக இருப்பினும் அவர்களினால் அனுப்பப்படும் விமர்சனக் கட்டுரையினை பிரசுரிக்க நாம் தயாராக இருக்கின்றோம். கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி – Kumarathurai@kumarathurai.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

நன்றி- மகாவலி






0 commentaires :

Post a Comment