-எஸ்.எம்.எம் பஷீர் -
“ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா்
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா்
தேற்றம் இலாதான் துணிவு இன்னா்
ஆங்கு இன்னாமாற்றம் அறியான் உரை”
கபில தேவர் (இன்னா நாற்பது)
மதரீதியான தாக்குதல்களில் பௌத்த மதபீடங்கள், மத குருமார்கள்மீதான தாக்குதல்களில் அநுராதபுர, அரந்தலாவ என்பன புலிகளின் பௌத்த மதத்திற்கு எதிரான வெளிப்பாடு மட்டுமல்ல எதிர்விளைவினை எதிர்பார்த்துச் செய்யப்பட்ட குரூரத் தாக்குதல்களாகும். மறுபுறம் இராணுவ வியூகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டன. உதாரணமாக கண்டி தலதாமாளிகையின் தாக்குதல் இடம்பெற்றபோது புலம்பெயர்வாழ் தமிழ் ஜனநாயகவாதிகள், ஊடகவியலாளர்கள், தமிழ் மனித உரிமைவாதிகள் மௌனம் காத்தனர். ஐக்கிய ராஜ்யத்திலுள்ள தமிழர் மனித உரிமை மற்று சமூகநலன் ஸ்தாபனமொன்றுடன் தொடர்புடகொண்டு ஏன் இதனைக் கண்டிக்கவில்லை எனக் கேட்டபொழுது என்ன ஆதாரம், எப்படிச்சொல்வது புலிகள் செய்ததென்று எங்களுக்கு யாரென்று தெரியாமல் கண்டிக்கமுடியாது. என்று வழக்கமான பல்லவிதான் என்றாலும் இறுதியில் ஒரு கண்டனம் வெளியிடப்பட்டது. அதிலும் வழக்கம்போலவே இனந்தெரியாதோர் செய்த செயலாகவும் இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள்தான் இவ்வாறான தாக்குதல்களுக்கு காரணமெனவும் ஒருவாறு நியாயப்படுத்துகின்ற கண்டனமாக வெளியிடப்பட்டது. முஸ்லிம்கள்மீதான தாக்குதல்கள், வெளியேற்றங்கள் 1990 லிருந்து 2006 வரை இந்த புலம்பெயர் தமிழர் ஜனநாயக ஊடக கனவான்களின் கண்களிற்குப்படவோ மனசைதொடவோ இல்லை புலப்படவோ தொடவோ இல்லை. இது எதுவரையென்றால் முஸ்லிம்கள்மீதான அண்மைய அக்குறஸ்ஸ தாக்குதல்வரை எந்தவொரு புலம்பெயர் புலி ஆதரவு தமிழர் ஸ்தாபனங்களும் கண்டுகொள்ளவில்லை. உலகமெல்லாம் வலம்வரும் வீரமும், விவேகமும் கொண்ட தமிழர்களாக தங்களைக் கருதுபவர்கள் புலிகளின் மதரீதியான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து தங்கள் நிலைப்பாட்டினை எவ்வாறு வெளிக்காட்டி வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு பதிவுசெய்துகொண்டே வருகின்றது உள்ளுரப் பெருமிதம்கொண்டு அத்தகையத் தாக்குதல்களை தமிழர்கிளி;;ன் வீரமாய் ஆராதிப்பதும் மறுபுறம் நாக்கூசாது ”உது சிங்களக் காடையன்கள் கiதிகளைக் கொண்டு செய்விச்சதல்லோ” என்றோ அல்லது இனம்புரியாத நபர்களன்றோ நேர்மைத் திறனின்றி வஞ்சனையுடன் கூறுமிவர்கள்தான் இன்று புலம்பெயர் உலகின் பெரும்பான்மை மக்கள். இந்தத் தமிழர்களை நிட்சயமாக நாமக்கல் ராமலிங்கம் “தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்று சொல்லியிருக்கமாட்டார். உலகில் வாழ்ந்த சமூகங்களில் இவர்களின் இடம் என்ன என்பதனை வரலாறு தீர்மானிக்கும். புலிகள் மதரீதியான தாக்குதல்களில் சிங்களக் கிறிஸ்தவர்கள் அவர்;களின் மத தேவாலயங்கள்மீதும் தாக்குதல் நடத்துவதனை சர்வதேச நலன்களுக்காகவும், தங்களை ஆதரிக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்களினை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் தவிர்த்தே வந்திருக்கின்றனா. தமிழரின வீரத்திற்கு தமிழ் இலக்கியங்களிலே முல்லைக்குத் தேரீந்த பாரி மன்னன். புறாவுக்கு சதையீந்த சிபிச்சக்கரவர்த்தி (தமிழ் மன்னனென்று நினைக்கின்றோம) பசுவிற்காக தன்மகனை தேர்காலிலிட்ட மனுநீதிகண்ட சோழன், இமயமலையிலும், யாவா, சமுத்திராவிலும் புலிக்கொடி ஏற்றிப் புகழ்பூத்த தமிழன் இன்று தென் இந்தியாவிலும் சரி இலங்கையிலம் சரி இல்லை புலிவால் பிடித்த தமழர்கள்தான் இன்று அதிகம் இருக்கின்றார்கள். ஒரு உதாரணமாக கொழும்பிலே புலிகள் இலங்கையின் மத்திய வங்கியில் குண்டுவைத்த பொழுது 53 பேர் கொல்லப்பட்டும் 1.500 பேர்வரை காயமடைந்தபோது எந்தவொரு தமிழ் புலிச்சார்பு மனித உரிமைவாதியும் உடல் சிலிர்த்துக்கொள்ளவில்லை. எனெனில் புலி ஆதரவு புலம்பெயர் லண்டன் பத்திரிகை ஒன்று இந்தப் பயங்கரவாதச் செயலை அப்பாவி மக்களின் படுகொலையை இவ்வாறு தனது முதல்பக்கச் செய்தியாய் எழுதியது. ஆந்தச் செய்தியில் கொல்லப்பட்டவர் தொகை 200 என மிகைப்படுத்திக் கூறியிருந்தது.
“குலுங்கியது கொழும்பு,
கலங்கியது சிங்கள அரசு,
துலங்கியது தமிழர் வீரம்
மலங்க விழிக்கும் மல்வத்தை தேரர்.”
இந்தப் பயங்கரவாதச் செயலை தமிழர்வீரமாக போற்றிய அதேவேளை சிங்கள பௌத்த மதகுருவை அச்சமூட்டியதாக புளகாங்கிதமடைகின்ற புலியின் மதத்துவேச அரசியலும் இங்கு புலப்படாமலும் இல்லை. அரந்தலாவையில் 02.06.1987 ல் புத்த பிக்குகளையும் மெதாகிரியையில் பௌத்த விகாரையைச் சுற்றி வளைத்து (8) சிவிலியன்ளளைச் சுட்டதும் (18.05.2000) ம் ஆண்டில் மட்டக்களப்பு மங்களராம விகாரையில் விசாக் பண்டிகையில் குண்டுவைத்துக் கொன்றதும் (இதில் அதிகம் கொல்லப்பட்டவர்கள் தமிழ் மக்களே) 25 மே மாதம் 1995 ல் பொல்லனறுவையிலுள்ள கல்லொறுவை கிராமத்தில் திம்புளாகல பௌத்த குருவையும 42 சிவிலியன்களையும் கொன்ற பொழுது சர்வதேச மன்னிப்புச் சபை புலிகளைக் கண்டித்தும் புலிகளின் பேச்சாளர் திலகர் அவர்களின் சட்ட நிபுணர்கள் சர்வதேசச் சட்டங்களை எல்லாம் கிண்டிக்கிளறி; பிக்கு ஒரு யுத்த முனைப்பாளர் திட்டமிட்ட அரச குடியேற்றத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர் எனவே அவர் பொதுசனமல்ல போன்ற மகாராணி சட்டத்தரணி வழிவந்த புத்திரர்கள் நியாயவாதம் புரிந்தனர். இந்தக் கொலையில் 12 பெண்களும் 12 சிறுவர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள்தான் பிரபாகரனைகடவுளின் அவதாரம், நவீன தமிழர் புறநானூற்றின் மறவர் திலகம், என்று பரணி பாடுபவர்கள். இவர்களில் பலர் உலக மனித உரிமை நிறுவனங்களுடனும், சுய நிர்ணய உரிமைதேடும் புலம்பெயர் மாற்று சமூகங்களுடனும். உறவினைப்பேணி முஸ்லிம், பௌத்த மதங்களுக்கெதிரான தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள். சிலவேளை நியாயப்படுத்தியவர்கள். கிறிஸ்தவ ஆதரவு புலிகளுக்கு சர்வதேசரீதியில் இருந்ததை சில சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக அவுஸ்திரேலிய தேவாலங்களை ஒன்றிணைக்கும் உலக மிஷன் ஆலோசகரான வணக்கத்திற்குரிய வில்லியம்ஸ் வடகிழக்கிற்கு சென்று மூன்று வாரங்களைக் களித்திருந்தாh அங்கு கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர்களையும், சாமானிய மக்களையும் சந்தித்திருந்தார். தான் இரண்டு இளைஞர்களை சந்தித்தாகவும் அதில் 21 வயதான புலிகளின் பிரதேசக் கமாண்டரும், அவரது மெய்ப்பாதுகாவலரான 14 வயதுச் சிறுவனும். இவர் அவுஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவைக்கு நிகழ்ச்சி வழங்கியிருந்தார் இவர் சிறுவர் போராளிபற்றியும் அவர்கள் சயனைட் வில்லைகள் அணிந்திருந்ததுபற்றியும் குறைகாணவில்லை. அவ்வாறே. முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா அவர்களை தற்கொலைக்குண்டுவைத்து வரதன் என்பவரால் படுகொலைசெய்த நிகழ்வுகுறித்து லண்டனிலுள்ள புலிசார் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று புனிதமான வணக்கஸ்தலமான மடுவில் இராணுவத் தாக்குதல்களை நடாத்துமாறு அவர் பிரகடனப்படுத்தி இரண்டு நாட்களின் பின்னரே இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக ஒரு பூடகமான நியாயப்படுத்தலை வெளிப்படுத்தியிருந்தனர். 1998 யூனில் இலங்கை விமானப் படையினர் கிபீர் விமானக் கண்டுவீச்சில் 2 கிறிஸ்தவப் பாதிரிகளையும் 25 சிவிலியன்களையும் கொன்றமைக்காக றிபோன் பிஷப் (Bishop Ripon ) அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவிற்கு கண்டனக் கடிதம் எழுதினார். எந்த வெளிநாட்டு விஷப்புகளும் புலிகளின் மதக்கொலைகளை கண்டிக்க முன்வரவில்லை கண்டி தலதாமாளிகைமீதான தாக்குதல்; லண்டனிலுள்ள புலிகளின் ஆங்கிலப் பத்திரிகையான தமிழ் கார்டியனில் அப்போதைய ஆசிரியர் தனது கட்டுரையில் ”பெப்ருவரி 4 ந் திகதிக்கு முன்பாக பரந்தன், கிளிநொச்சி முகாம்களை வெற்றிகரமாக அழித்தொழித்து தங்களது தலைவர் தலைமை தாங்கிய நிகழ்வில் புலிக்கொடி எற்றுவார்கள் என்ற புலிகளின் சொந்த சுதந்திரத் திட்டங்களைப்பற்றி ஜெனரல் ரத்வத்தை அறிந்திருக்கமாட்டார். இத்தாக்குதல் கொழும்பு அரசினை கலக்கி தெற்கிலே ஆயிரக்கணக்கான படையினரை குவிப்பதன்மூலம் கிடைக்கும் இடைவெளியில் கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு போன்ற முக்கிய முகாம்களில் பாரிய தாக்குதல்களை மேற்கொள்ள மேற்கொண்ட திட்டமாகும். இது மதரீதியான தாக்குதல் அல்ல இராணுவரீதியான தாக்குதல் என்பதாக நியாயப்படுத்த முற்பட்டிருந்தார்.” 1985 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அநுராதபுர சிறீ மஹா போதி விகாரையில் கொல்லப்பட்ட பிக்குகள், பிக்குணிகள் மீது தொடுக்கப்பட்ட புலிகளின் பௌத்த மதத்திற்கெதிரான படுகொலைத் தாக்குதலானத பின்னர் முஸ்லிம் மதத்தின்மீதான தாக்குதல்களாகவும் வெளிப்பட்டது. 1983 யூலை தமிழர்களுக்கெதிரான வன்முறையையொத்த மீண்டும் ஒரு வன்முறையினைத் தூண்டுவதற்கு புலிகள் பல தடவை பொள்தமதத்தின்மீதான தாக்குதல்களை மேற்கொண்டபோதும் அவை எதுவுமே புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை.1983 தமிழர்களுக்கெதிரான வன்முறை குறித்து பிரபாரனை புகழ்ந்து போற்றும் அனிதா பிரதாப் தனது இரத்தத்தீவு (Island of blood) என்னும் பத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கொழும்ப வீதிகளில் கொள்ளைகள் தீவைப்புக்கள், கொலைகள் செய்திருப்போர் மனிதர்களல்ல நரகலோகத்திலிருந்து தப்பிவந்திருக்கும் அரக்கர் கூட்டமே இதனைச் செய்திருக்கவேண்டும். இவர்களில் அநேகர் மது அருந்தியிருந்தனர். முனிதப் பிறப்புக்கள் இத்தகைய இழி செயலை செய்வதற்கு சாத்தியமல்ல என்று குறிப்பிட்டிருந்தார். 1983 யூலைக் கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நரகலோகத்திலிருந்து தப்பிவந்த அரக்கர் கூட்டமென்றால் மேற்கொண்ட (புலிகளின்)வன்முறைகளைச் செய்தவர்கள் மது அருந்தாது புலி வெறிகொண்ட அரக்கர் கூட்டமா என்பதனை வரலாறு நிர்ணயிக்கும
0 commentaires :
Post a Comment