உலகிலேயே பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பொரு ளாதாரம் வளர்ச்சியடைந்து வருகின்றது. யுத்தத்தின் மத்தியிலும் இலங்கை பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த சிந்தனையின் ஊடாக கிராமிய மட்டத்தில் கிராமிய கைத்தொழில்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
அந்த வகையில் நெசவு கைத்தொழில்களை நவீன முறையில் இலத்திரனியல் தொழில்நுட்ப ரீதியில் கைத்தொழில்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா தெரிவித்தார்.
கிண்ணியா குறிஞ்சாக்கேணி நெசவு நிலையத்தில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணம் பயங்கரவாத பிடியில் இருந்து விடுபட்டதன் பின்னர் கிழக்கில் சுமுகமான நிலையை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்தி தங்களின் தொழில்துறையை மேன்மைப்படுத்தும் நோக்கில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
23 வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாணம் கிராமிய சிறு கைத்தொழில்களில் ஆர்வம் காட்டி வருவது பாராட்டத் தக்க விடயாகும். கிழக்கு மாகாண மக்கள் சிறு கைத்தொழில் தேர்ச்சிப் பெற்றவர்கள்.
கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்கப்படுவதையும், அந்த பொருட்களுக்கு அங்கு அதிகூடிய வரவேற்பு இருப்பதை அண்மைக்காலத்தில் நான் வெளிநாடு சென்றபோது அதனை அவதானிக்க முடிந்தது. ஆகவே எமது ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள மூலப்பொருட்களையும் உற்பத்தி செய்து அந்த மூலப்பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி கிராமியத் தொழிலை ஊக்குவித்து அந்த கிராமிய மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment