3/27/2009

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவை நான்கு கட்டமாக நடத்தத் திட்டம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2009 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளை நான்கு கட்டங்களாக நடத்துவதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 07 ஆம் திகதிவரை அம்பாறை, கல்முனை, மட்டக்களப்பு, மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
கபடி, கரப்பந்து, மற்றும் எல்லே ஆகிய போட்டிகள் அம்பாறையிலும், பூப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், சதுரங்கம் ஆகிய போட்டிகள் கல்முனையிலும் நடத்தப்படவுள்ளன.
கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் மட்டக்களப்பிலும், உதைபந்து, உடற்பயிற்சி மற்றும் மைதான சுவட்டு திகழ்ச்சிகள் திருகோணமலையிலும் நடைபெறவுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


0 commentaires :

Post a Comment