- கலைச்செல்வி -
உலகின் பல நாடுகளில் நடைபெறுகின்ற போர் சூழல்களின் விளைவாக கூடிய துன்பங்களை அனுபவித்து வருபவர்கள் பெண்களே. இதில் இலங்கை என்கின்ற எமது நாடு எம்கண்முன்னே உள்ள நல்ல உதாரணமாகும். போர்முனைகளிலும் எதிர்த்தாக்குதல்களிலும் சுற்றிவளைப்புகளிலும் கூட பாலியல் ரீதியான தண்டனைகளுக்கும், பழிவாங்கல்களுக்கும் முதலில் உட்படுத்தப்படுபவர்கள் பெண்களேயாகும். இலங்கையின் ஜே.வி.பி. போராட்ட காலகட்டத்தின்போது மன்னம்பெரி என்னும் சிங்களப் பெண் சிங்களப்படையினராலேயே பாலியல் ரீதியாக பலாத்காரப்படுத்தப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாள். அதேபோன்றே வெருகல் படுகொலையின் போதும் 2004 ஆம் ஆண்டில் வன்னிப்புலிகளால் கிழக்கு புலிகள் தரப்பில் இருந்த பெண் போராளிகள் பலாத்காரப்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டனர். இது தமிழர்களாலேயே தமிழ் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையாகும். இதேபோன்றே சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கையின் போது வடக்கு, கிழக்கு எங்கும் தமிழ்பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த சம்பவங்கள் அதிகம். அவை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கோணேஸ்வரி தொடங்கி நேற்றைய மகாதேவி வரை இது தொடர்கிறது. பாலியல் வன்முறைகளுக்க ஆணாதிக்க வக்கிரமே அடிப்படைக்காரணங்களாய் இருந்தபோதிலும் அத்தோடு இனவாதம், அல்லது பிரதேசவாதம் மற்றும் நிறவாதம்....... போன்றவையும் அதிகார துஸ்பிரயோகமும் இவ்வன்கொடுமைகளுக்கு அதிகவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கடந்த பல மாதங்களாக வன்னியில் இடம்பெற்றுவருகின்ற யுத்த சூழலிலும் யுத்தத்தில் ஈடுபட்டுவருகின்ற இருதரப்பினராலும் மேற்படி பெண்கள் மீதான கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டே வருகின்றது. 10, 12 வயது சிறுமிகளை தற்கொலை குண்டுதாரிகளாக புலிகள் பயன்படுத்துவதும், கற்பினிப் பெண்களைக் கூட மனிதகேடயங்களாகப் பயன்படுத்துவதும் புலிகள் தரப்பில் தாராளமாகவே நிகழ்த்தப்படுகின்றது. அதேபோன்று இராணுவத்தினராலும் தப்பிவரும் இளம்பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் நடாத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த 28 ஆம் திகதியும் மார்ச் 02 ஆம் திகதியும் மட்டக்களப்பில் இருபெண்கள் அதிரடிப்படையினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டிருக்கின்றார்கள். அதிலொருவர் கொலைசெய்யப்பட்டும் உள்ளார். கிழக்கில் இப்போது போர்ச்சூழல் இல்லை. சிவில் நிர்வாகமும் மீளக்கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்கூட அங்கு பெண்களுக்கான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த முடியாத நிலைமைகள் மக்கள் மத்தியில் பாரிய அச்சநிலமையை தோற்றுவித்துள்ளன. இதுபோன்ற மனிதநாகரீகத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அரசநிர்வாகத்திற்கு இதுபற்றிய பொறுப்புச் சொல்லும் கடமையில் இருந்து தவறக்கூடாது. அத்தோடு இனியொருபோதும் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது உயர்மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அப்பாவி மக்களினது கோரிக்கையாகும். இல்லாத பட்சத்தில் கிழக்கு மாகாண மக்களிடத்தில் துளிர்விட்டுவரும் “ஜனநாயகம் திரும்புகின்றது” என்கின்ற நம்பிக்கைகள் தகர்ந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உண்டு.

0 commentaires :
Post a Comment