3/19/2009

எம்.எச்.எம். ஷம்ஸின் வாழ்வும் இலக்கியப் பங்களிப்பும்


எழுத்தாளர் மர்ஹ¥ம் எம்.எச்.எம். ஷம்ஸின்69 ஆவது பிறந்தநாள் நேற்றாகும். அதனையொட்டி இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது


வெலிகம யூ.ஜே.எம். அப்ராஸ்




உதிர்ந்து போன ஓர் மலர் தந்த வாசத்தை அது தென்றலிலே கலந்து தென்னிலங்கை மட்டுல்ல. மீன்பாடும் தேன் நாடென்ன.. தென்னிந்தியா என்ன... தமிழ்பேசும் நல்லுலகமே.. அதை நுகர்ந்திருக்கிறது. நுகர்ந்து கொண்டுதான் இருக்கிறது.அரை நூற்றாண்டுக்கு முன்னர் திக்குவெல்லை மண்ணிலே விதைக்கப்பட்ட ஷம்ஸ் என்ற விதைஇ வேர்பிடித்து.. மண்ணிலே நிலையாக நின்று மரமாகி கிளை பரப்பி நாடெங்கும் அம்மரம் தூவிய விதைகள் ஆயிரமாயிரம்.தென்னிலங்கையின் கரையோரக் கிராமம் 1940ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி முஹம்மது ஹாமீம்இ ரமனா உம்மா ஷகருக்கு கனிஷ்ட புதல்வராக பிறந்த போது அக் குழந்தைக்கு பெயரிடப்பட்ட கணம்இ அவர்களுக்கே தெரியாது. ஏன் நாம் ஷம்ஸ் என்று பெயர் வைக்கின்றோம் என்று. உண்மையிலே ஷம்ஸ் ஆக (சூரியனாக) இவன் தமிழ் இலக்கிய உலகிற்கு ஒளிகொடுக்கப் போகிறான் என்ற உண்மையை அப்போது யாரும் அறிந்திருக்க எவ்வித நியாயமுமில்லை.திக்வெல்லை முஸ்லிம் வித்தியாலயத்திலும் விஜித்த சிங்கள மத்திய கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவரது ஆரம்ப இலக்கியக் களமாக அமைந்ததோ 1950 ஆம் ஆண்டுகளில் திக்வெல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராக இருந்த ஏ.எச்.எஸ். முஹம்மதால் உருவாக்கப் பட்ட ‘தென்மதி’ என்ற இதழாகும்.பல்துறைக் கலைஞரான எம்.எச்.எம். ஷம்ஸ் அவரது இளைமைக்கால சுவடுகளைப் பற்றி கூறும்போது சின்ன வயதில் எனக்குள் எழுத்தார்வம் என்ற ஒன்று இருந்ததா? என்பது பற்றி இன்று நினைத்துப் பார்த்தால் அந்தப் பதிவுகள் மிக மங்கலாய்த்தான் தெரிகின்றது. இசையிலும்இ நாடகத்திலும் நிறைய ஆர்வம் இருந்தது என்றும் தனது கலை வாழ்வின் திறவுகோலாக கைநீட்டிக் காட்டுவது ஈழத்துப் பூராடனார் கலாநிதி க.தா. செல்வராஜ கோபால் சேர் என்றும் ஞானம் சஞ்சிகைக்கு ஒருமுறை எழுதும்போது குறிப்பிட்டிருந்தார்.1950ம் ஆண்டு காலப் பகுதிகளிலே தான் ஷம்ஸின் இலக்கிய ஆர்வ தாகம் மிக வீச்சாக செயற்பட்டது. அக்காலப் பகுதியிலே பிரபலமாக இருந்த எம்.ஏ. அப்பாஸ்இ திருச்சி ரசூல் போன்றவர்களின் படைப்புகளில் ஈர்க்கப்பட்ட ஷம்ஸ்இ அவர்களின் அடிச்சுவடுகளை தன் இலக்கிய வாழ்வுக்கு வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். சமூக விமர்சனம்இ இன ஒற்றுமை என்பன குறிப்பாக அப்பாஸின் நாவல்களின் கருப்பொருளாக இருந்ததையும் அது ஷம்ஸின் சிந்தனையில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததையும் பொதுவாக நாங்கள் பார்க்கலாம்.1957ம் ஆண்டு ஆசிரியராக பொறுப்பேற்ற ஷம்ஸ் மாணவர்களுக்கு இஸ்லாமிய கீதம்இ மணமங்கள கீதம்இ நாடகம் போன்றவற்றை இயற்றிக் கொடுத்துள்ளார். அக்காலப் பகுதிகளிலே பத்திரிகைகளில் படைப்பொன்றை வெளிக்கொண்டுவரச் செய்வது இலகுவான காலமல்ல. அந்நிலையில் 1959.08.17ம் திகதி தினகரன் பத்திரிகையிலே கவிஞர் ஷம்ஸ் இன் முதற்கவியான ‘இனிமைசேர் தமிழ்’ என்ற கவிதை பிரசுரமானது. இந்தக் காலப் பகுதியிலேதான் ஷம்ஸ் அவர்கள் அட்டாளைச்சேனை பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்.1958ம் ஆண்டு காலப் பகுதிகளிலே கற்பித்தலுக்காக பற்பல பாலர் கவிதைகளை எழுதினார் ஷம்ஸ் மாஸ்டர். இந்தக் காலப் பகுதியிலே குழந்தைக் கவிதையோடு ஷம்ஸின் இலக்கியப் பிரவேசம் ஆரம்பமானது. கடைசியாக அவரது இலக்கியப் பணியும் வண்ணாத்திப்பூச்சி என்ற குழந்தை இலக்கியத்தோடு தான் முற்றுப்பெற்றது. இவரது சிறுவர் பாடல்களுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்ததற்கும் சான்றாக 5ம் ஆண்டுப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட ‘கைகொடுப்போம்’ என்ற பாடலை குறித்துக் காட்டலாம். இக்காலப் பகுதியிலேதான் ஷம்ஸ் அதிகமாக வெண்பாவிலே கேலிக் கவிதைகள் எழுதினார். வெண்பா போட்டியிலும் பங்குபற்றினார். ஷம்ஸின் கவிதைகள்இ காதல்இ சமயம்இ தத்துவம்இ சமூகப் பார்வை என்ற கருப்பொருளைக் கொண்டு கடுமையான சொற்பிரயோகம் இன்றி செந்தமிழ் இனிமையோடு எளிமை கொஞ்சி விளையாட எழுதினார்.1960 களின் நடுப்பகுதியிலே காலஞ்சென்ற ஏ.ஏ. லத்தீபை ஆசிரியராகக் கொண்டு வாரமொரு முறை வந்த இலங்கை கம்யூனிஸ் கட்சியின் ‘இன்ஸான்’ என்ற பத்திரிகை ஷம்ஸின் எழுத்துலக வாழ்விற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்தது.நிலப்பிரபுத்துவம் தலைவிரித்தாடிய சூழ்நிலைகளிலே அவற்றுக்கெதிரான குரலாக சமூகத்தின் குரலாக மாறி குரல்கொடுக்க இன்ஸானிலே இடம்பிடித்துக் கொண்டார். எனினும் அதன் அரசியல் நிலைப்பாடு காரணமாக சில்லையூர் செல்வராச னைப் பின்பற்றி ‘வல்லையூர்ச் செல்வன்’ என்ற புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு எழுத்துத் துறையிலே எட்டாக் கனியென நினைத்திருந்தவற்றையெல்லாம் எட்டிப்பிடிக்க வழி தேடிக்கொண்டார். இன்ஸானிலே அவர் மனைவி பாஹிராவின் பெயரிலே சிறுகதைகளும் எழுதி வந்தார்.1963-1964 காலப் பகுதிகளிலேயே புதுமைக்குரலில் சில சிறுகதைகளை எழுதிய ஷம்ஸ் அதே காலப்பகுதியி லேயே வீரகேசரியிலே நிறைய கவிதைகள் எழுதினார். ஞாயிறு வீரகேசரியிலே ஷம்ஸிற்கு கவிதை எழுதத் தூண்டியவர் அதன் ஆசிரியர் காலஞ்சென்ற பொன்ராஜகோபால் அவர்கள். ‘நீள்கரை வெய்யோன்’ என்ற புனைப் பெயருக்குள் ஷம்ஸ் ஒழிந்துகொண்ட சம்பவம் சுவையானது. அதாவது மனைவி தேவை என்ற கவிதையை எழுதிய ஷம்ஸிற்கோஇ தன் பெயரைப் போடக் கூச்சமாக இருந்தது. எனவே அவர் அந்தக் கவிதையை வீரகேசரியில் பிரசுரிக்க அனுப்பியபோது நீள்கரை வெய்யோன் ஆக மாறிவிட்டார். அதன்பின் பற்பல அவரது கவிதைகள்இ சிறுகதைகள் எல்லாம் தொடர்ந்து வீரகேசரியிலே பிரசுரமானது. அனைத்தும் அவர் மனைவி பாஹிராவின் பெயர் கொண்டு எழுதப்பட்டவையே.கதாபாத்திரங்களுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டுவதனால் மட்டும் ஒரு சிறுகதை இஸ்லாமிய படைப்பாகிவிட முடியாது. ஊழலோஇ காதலோஇ விபசாரமோஇ கொலைஇ கொள்ளையோஇ சமூக அடாவடித் தனங்களோஇ அத்துமீறல்களோ அவை எச்சந்தர்ப்பத்திலே இடம்பெற்றிருந்தாலும் அவற்றைத் தோலுரித்துக் காட்டுவதும் யதார்த்தத்தை உணர வைப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை. தவிர உண்மை கசக்குமென்ற போக்கிலே முகமூடி இலக்கியம் செய்வது அசட்டுத்தனம் என்று வாதாடியவர். அக்கருத்துக்களை தன் படைப்புகளிலே வெளிக்காட்டியவர் ஷம்ஸ் மாஸ்டர் அவர்கள்.1960 களில் இருந்தே ‘மல்லிகை’ வாசிக்க ஆரம்பித்த ஷம்ஸ் மாஸ்டர்இ மல்லிகையின் பக்கங்களையும் தன் கதைஇ கவிதைஇ விமர்சனம்இ மொழிபெயர்ப்பு போன்றெல்லாம் எழுதி அலங்கரித்து வந்தார். இதற்குப் பக்கபலமாக திக்வெல்லை எழுத்தாளர் சங்கமும் துணை நின்றது. ஷம்ஸின் பால்ய காலம் முதலே எழுத்துலக சகாவாகவும்இ பிற்பாடு சம்பந்தியாகவும் மாறிய யோனகபுர ஹம்ஸாவும்இ ஷம்ஸ¤ம் சேர்ந்து அந்த அமைப்பை உருவாக்கினார்கள் என்பது கோடிட்டுக் காட்டத்தக்கது. இச்சங்கத்தின் வெளியீடே ‘பூ’ என்ற சஞ்சிகை. பூ வின் எழுத்தாளர் குழுவிலே ஷம்ஸ¤ம் ஓர் இதழாக இருந்து பூ வின் கவர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்காளியானார். அத்துடன் அதே சங்கத்தின் மூலம் ‘எலிக்கூடு’இ ‘விடிவு’ போன்ற பிரசுரங்கள் வெளிவரவும் காரணகர்த்தாவாக இருந்தார்.ஷம்ஸின் எழுத்துக்களை சமூகம் சிவப்புக் கண்ணாடி கொண்டு பார்க்க ஆரம்பித்ததினால் ஷம்ஸ் இஸ்திராச்சிஇ ஷானாஸ்இ அபூபாஹிம்இ இப்னுஹாமீம் என்றெல்லாம் புனைப்பெயர்களில் மறைந்து தன் இலக்கியப் பங்களிப்பையும்இ சமூகப் பங்களிப்பையும் சிறப்பாக நல்கினார்.1974ல் ஷம்ஸ் வெலிகமைக்கு இடம்பெயர்ந்த பின்பு சில கவிதைகளால் சலசலப்பு ஏற்பட்டது. இக்கால கட்டத்திலே குறிப்பிட்டுக் கூறத்தக்க பாரிய எதிர்ப்பலைகள் ஷம்ஸை ஒழித்துக்கட்டும் அளவுக்கு கொந்தளித்தமையானது எம்.எச்.எம். ஷம்ஸின் மனதிலே ஆழமான விழுப்புண்ணாக இருந்தது. அப்போது அவர் கொழும்பிலே பட்டதாரி மாணவனாக இருந்தார்.கலை இலக்கியத்திலும் பல்வேறு துறைகளிலும் பயிற்சியும் அறிவும் பெற்ற ஷம்ஸின் சீர்திருத்த நோக்குகளும்இ விமர்சன அணுகுமுறைகளும் இலங்கை முஸ்லிம் சமூக சிந்தனைக் கட்டமைப்புக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை அளவிட்டுக் கூறமுடியாது. நவீனகாலச் சிந்தனைகளாலும் முற்போக்குக் கருத்துக்களாலும் விஞ்ஞான உண்மைகளாலும் ஈர்க்கப்பட்ட ஷம்ஸ்; அவற்றைப் படித்து விளங்கி அவற்றுக்கு தனது படைப்புகளில் உருவம் கொடுத்தார். அதனைப் பறைசாற்றுவதாக அவருடைய கிராமத்துக் கனவுகள் என்ற நாவல் அமைகிறது. அந்நாவலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும் கிடைத்தது.வானொலிஇ தொலைக்காட்சிஇ பத்திரிகை என அனைத்திலும் காத்திரமான பங்களிப்பைச் செய்த ஷம்ஸ் மாஸ்டர் அவர்கள்இ குறிப்பாக தமிழ் இலக்கியத்துறையில் மட்டுமல்லாதுஇ இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மற்றும் சிங்கள இலக்கியத்துறை சம்பந்தமாகவும் பல ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதிலே 1970 களிலே சிங்கள இலக்கியத்திலும் முஸ்லிம்களின் பங்கு என்ற நூல் பலரது பாராட்டுதல்களையும்இ கைத்தட்டல்களையும் ஷம்ஸ் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது எனலாம். குறிப்பாக தென்னிலங்கை முஸ்லிம் இலக்கிய வளர்ச்சி என்ற நூலை 1987ம் ஆண்டுகளிலே திக்வெல்லை ஸப்வானை ஆசிரியராகக் கொண்டு இயங்கிய ‘இனிமை’ என்ற சஞ்சிகை தனது விஷேட வெளியீடாக வெளியிட்டது. 5ம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக்காக ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றையும் எழுதியிருந்தார்.கவிதைத் தொகுதியிலேயே மரபுக் கவிதைஇ படிமக் கவிதைஇ புதுக்கவிதைஇ ஹைக்கூ கவிதை போன்றவற்றில் ஈடுபாடு காட்டினார். இலங்கையில் இருந்த சிறந்த கவிஞரான மகா கவிக்குப் பின்வு குறும்பா என்ற கவிதை அமைப்புக்கு கவிஞர் ஷம்ஸ் கணிசமான பங்காற்றினார்.1984ல் தினகரனில் செவிநுகர் கனிகள் என்ற கவிதை விமர்சனத் தொடரை அவர் எழுதினார். கலை கலைக்காகவே என்ற கொள்கையை ஷம்ஸ் வெறுத்தார். இலக்கியத்தை சமூகத்தின் கண்ணாடியாக நோக்கினார். கண்ணாடியாக மாற்றினார்.மதங்கள் மரியாதைக்குரியவைஇ கண்ணியப்படுத்தப்பட வேண்டியவை. அதற்காக குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும் தனிநபர் வரம்புமீறி தவறு செய்யும் நிகழ்வைப் படிப்பினைக்காகப் படம் பிடித்துக் காட்டுவதும் படைப்பாளியின் கடமையே. அப்படியிருக்க.. பேனாவுக்கு வேஷம் போடச் சொல்லிக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று உள்ளம் திறந்து பேசியவர்இ எழுதியவர் ஷம்ஸ்.இவரது கிராமத்துக் கனவுகள் என்ற நாவல் குறித்து சர்ச்சைகள் கிளம்பியதற்கும் மேற்குறித்த யதார்த்தப் போக்கே காரணம். எனவே தான் அந்த நாவலை இந்த சமூகம் ஓரக்கண்ணாலே பார்த்தது. அந்நாவலிலே அக்கால சமூக நிலை பற்றிய ஒரு பதிவேடாக முஸ்லிம் சமூகம் எந்த வகையில் செயற்பட்டதென்று கோடிட்டுக் காட்டக்கூடியதாக காணப்படுகிறது. அந்நாவலுக்கு எதிர்ப்பலைகள் கிளம்பிய போது ஷம்ஸ் என்ற வைரம் இன்னுமின்னும் பட்டைதீட்டப்பட்டது.ஷம்ஸ் ஒரு சிறந்த பத்திரிகையாசிரியராக விளங்கி தன் இலக்கியப் பங்களிப்பை வழங்கினார். 1988 இலே நேர்வழி பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலே பணியாற்றினார். 1982-1987 வரை அஷ்ஷ¤ரா (கருத்துமேடை) என்ற பத்திரிகையையும் நடத்தினார். இலங்கை ஆசிரியர் சஞ்சிகையின் ஆசிரியராகவும்இ பாமிஸ் பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பங்காற்றினார். 1987-93 இல் அஷ்ஷ¤ரா என்ற பத்திரிகையே செய்திமடல் என்ற ரோனியோ சஞ்சிகையாக மாறியது. அதிலும் அவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்துடன் சமூக விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு ‘முஷாவரா’ (கலந்துரையாடல்) என்ற பிரசுரத்தையும் இடைக்கிடையே வெளியிட்டு வந்தார். இதற்கு எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக நின்று தோள் கொடுத்தவர்களில் வெலிகம மர்ஹ¥ம் ஏ.ஆர்.எம். முஸ்தகீம் முக்கியமானவர்.1994 இற்குப் பின்னர் தினகரன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிய ஆரம்பித்து புதுப்புனல் என்ற பகுதியை நடத்தினார். இது சனிக்கிழமைகளில் வெளிவந்தது. இளம் எழுத்தாளர்களின் களமாக கவிதைஇ கதை என்று இலக்கியத்துறைக்கு ஊன்றுகோல் அமைத்துக் கொடுத்தார். புதுப்புனல் தந்த விதைகள் இன்று நாடெங்கும் முளைவிட்டுஇ கிளைபரப்பிஇ இலைவிட்டுஇ கனிதந்து கொண்டிருக்கின்றன. புதுப்புனலை புதுமைப்புனலாக நடத்தினார் ஷம்ஸ்.வீரகேசரியிலே சிங்கள இலக்கியம் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதியுள்ள அவர் தினகரன் வாரமஞ்சரியிலே சாளரம் என்ற பகுதியை அமைத்து அதன் மூலம் சிங்கள இலக்கியத்தை மரபுக் கதைகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சிலுமின பத்திரிகையிலே பாலம் என்ற பகுதியிலும் எழுதி வந்தார். கலாநிதி எம்.எம். நுஹ்மான்இ ரத்னகிரி விஜேசிங்க ஆகிய இரு கவிஞர்களினதும் தமிழ்ச் சிங்கள கவிதைகளை பரஸ்பரம் இரு மொழிகளிலும் மொழிபெயர்த்தான் இந்தப் பல்துறைக் கலைஞன்.போரினால் நலிந்துபோயிருக்கும் மக்களின் துயரைக்கண்ட கவிஞன்; வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே இன்னும் உந்தன் வரவைக் காணவில்லையோ என்று காலத்தின் தேவை கண்டு எழுதப்பட்ட பாடல் காலத்தை வென்றது. நிரோசா விராஜினியினால் பாடப்பட்ட இப்பாடல் சமாதானத்தை வேண்டி மூலைமுடுக்கெங்கும் ஒலித்ததுஇ ஒளிபரப்பப்பட்டது.ஒரு எழுத்தாளனுக்குரிய ஒரு இலக்கியவாதிக்குரிய பண்புகளனைத்தும் ஷம்ஸ் மாஸ்டரிடம் தாராளமாகவே காணப்பட்டது. விமர்சனங்களை தாராளமாக ஏற்றுக்கொண்டார். கருத்து முரண்பாடுகள்இ வித்தியாசங்கள் வரும்போது எந்தவிதமான கோப உணர்வுமின்றி சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.ஷம்ஸ¤டைய உயர்ந்த பண்புஇ பரந்த மனப்பான்மை வளர்ந்துவருகின்ற ஒரு சமூகத்தை தட்டிக்கொடுக்கின்ற ஒரு சிறந்த பண்பு அவரிடத்திலே காணப்பட்டது. அதற்காக அவர் பற்பல கருத்தரங்குகளைக்கூட ஏற்பாடு செய்து அவற்றின் மூலம் இளம் எழுத்தாளர்களை கவிஞர்களை தட்டிக் கொடுத்தார். இதன் மூலம் நாடெங்கும் பல புது எழுத்தாளர்கள்இ 8விஞர்கள் தோன்றியிருக்கின்றார்கள்.1992ம் ஆண்டு ‘ வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற விழாவில் ஷம்ஸ் நஜ்முல் உலூம் (அறிவுத்தாரகை) என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டார். மக்கள் சமாதான இலக்கிய அமைப்பு 1996 இல் ஒரு சமாதான விருதையும்இ வானொலி தமிழ்ச் சேவையில் நடத்திய கலைச்சாளரம் நிகழ்ச்சிக்காக ‘உண்டா’ விருதையும் தமிழ்-சிங்கள இரு மொழிகளிலும் இன நல்லிணக்கத்துக்கு இலக்கியப் பணி செய்தமைக்காக 1999 இல் நூலக அபிவிருத்தி சபையும் கொழும்பு பல்கலைக்கழகமும் இணைந்து இரு விருதுகளை வழங்கியிருந்தன. அதே ஆண்டுதான் கிராமத்துக் கனவுகளுக்கும் சாகித்திய மண்டல விருது கிடைத்தது.ஷம்ஸ் ஒரு முற்போக்குவாதிஇ நவீன சிந்தனைவாதிஇ துணிச்சலுடன் எழுதும் எழுத்தாளன்இ மத அனாச்சாரங்களின் எதிரி.. மெளட்டீகத்தின் விரோதிஇ ஒரு கவிஞன் சிறுகதையாளன்இ இனிய பாடகன்இ இசையமைப்பாளன் இலக்கியவாதி பழகுவதற்கு இனியவர்இ கோபம் கொள்ளாதவர் என அவர் பற்றி விபரித்துக் கொண்டே செல்லலாம்.தமிழ் இலக்கியத் துறைக்கு மேலும் பல சேவையாற்ற வேண்டுமென்ற அன்னாரின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முன்னரே காலன் அவரது காலத்திற்கு அவரது சுவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது ஏனோ.. என்றாலும் அவரது கடைசி வார்த்தைகளாக.. ஆசைகளாகஇ நிறைவேற்றப்படாத ஆசையாக.. இருக்கின்றதில் அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியீடும் ஒன்றாகும். அவர் தன் இறுதி ஆசையை ஞானம் சஞ்சிகையில் எனது எழுத்துலகம் என்று எழுதியதின் கடைசி வரிகளிவை.முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முன்வைக்கப்படுகின்ற யதார்த்தத்தை கற்பனாவாதப் பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்ட சனாதன வாதங்களும்இ தீவிர வாதங்களும் மக்களைப் படுபாதாளத்திலே தள்ளிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவற்றுக்கெதிராகப் போராடுவது தலையாய கடமை.எனது சிறுகதைகள்இ கவிதைகள்இ சிறுவர் பாடல்கள்இ ஆய்வுக் கட்டுரைகள் என்பவற்றை நூலுருவாக்க வேண்டிய பொறுப்பு உண்டு. (ஞானம்: ஜூலை 2002)அஸ்தமித்த அந்த சூரியனின் ஆசைகள் நிறைவேற வழிவகுப்போம்.. அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனப் பூஞ்சோலை கிடைக்க ஐவேளை தொழுது ஐயிரண்டு விரலேந்திப் பிரார்த்திப்போம். ஆமீன்.



0 commentaires :

Post a Comment