கிழக்கு மாகாணத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் பல காலமாக மக்கள் ஏதிர் கொண்டுவந்த குடிநீர் பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்பட்டது. அதாவாது போரதீவுப் பற்று பிரதேசசபையின் பிரிவுக்குட்பட்ட சுரவனையடியூற்று என்கின்ற கிராமத்தின் சீடா நிறுவனத்தினது நிதி உதவியுடனும் உலகதர்சன நிறுவனத்தின் அனுசரணையுடனும் 6000 லீற்றர் கொள்ளலவுடைய நீர்த்தாங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக நீர் வினியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். அதேபோல் வவுனதீவு பிரதேச சபைக்குட்பட்ட கரையாக்கான் தீவு கிராமத்திற்க்கான குடிநீர் வழங்கும் திட்டமும் அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்டது. இதனையும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனே அங்குராப்பனம் செய்து வைத்தார். இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர், சீடா நிறுவனத்தினதும் கனேடியம ?க்களினதும் நிதிஉதவியுடனும் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையுடனும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற இக் குடிநீர் திட்டமானது உண்மையிலேயே பாராட்டக்கூடியது. காரணம் மட்டகளப்பு மாவட்டத்திலே அதிகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக படுவான்கரை பிரதேசமே காணப்படுகிறது. அத்தோடு குடிநீர் பற்றாக்குறையினையும் இப்பிரதேச மக்களே அதிகம் எதிர் கொள்கின்றார்கள். இன்று இம் மக்களின் முக்கிய தேவையான குடிநீர் பிரைச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதனையிட்டு நான் சீடா மற்றும் உலக தரிசன நிறுவனங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அத்தோடு இதேபோல் இருக்கின்ற ஏனைய வரட்சியான கிராமங்களுக்கும் எதிர்வரும் காலங்ககளின் குடிநீரை பெற்றுக்கொடுக்க என்னால் ஆன உதவிகளை வழங்குவேன் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய முதல்வர், கிழக்கு மாகான மக்களின் அரசியல் ஏதிர்காலம் மற்றும் அபிவிருத்தி என்றால் இன்று உருவாக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபையேயாகும். இருபது வருடகாலமும் பிரதேசசபை என்றால் என்ன? மாகாணசபை என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் என்ன? எனறெல்லாம் தெரியாது இருந்த எமத கிழக்கு மாகாண மக்கள் இன்று மாகாணசபையின் உருவாக்கத்தின் பின் ஓரளவு விழிப்படைந்திருக் கின்றார்கள். அத்தோடு மாகாணசபையினால் எவ்வாறான அதிகாரங்களைப் பெறமுடியும், எவ்வாறான அபிவிருத்தித் தி;ட்டங்களை ஏற்படுத்தமுடியும் என மக்கள் தெளிவடைந்திருக் கின்றார்கள.; எனவே அரசியல் வாதிகளாக இருக்கின்ற நாம் மக்களை ஏமாற்ற முடியாது. கிடைத்திருக்கின்ற இந்த மாகாணசபையினைக் கொண்டே எமது மாகாணத்திற்கான அனைத்தினையுமே நாம் பெறவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். மேலும் குறிப்பிடுகையிள், கிழக்கு மாகாணம் உண்மையிலேயே ஏனைய மாகானங்களைவிட பின்தங்கியே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தமிழ் பிரதேசம் மிக மிக பாதிக்கப்பட்டே காணப்படுகிறது. இதற்க்கு கடந்தகால கொடிய யுத்தமே காரணகர்த்தாவாக அமைகின்றது. ஆனால் தற்போது பயங்கரவாதம் கிழக்கில் ஒழிக்கப்பட்டுவிட்டது. எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்க்கான ஓர் அரசியல் பின்புலம் இருக்கின்றது. அது எமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். எமது கட்சியின் ஊடாக நாம் அரசியல் அடித்தளத்தினை இட்டு இருக்கின்றோம். இதனுடாக எமது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தோற்றப்பாடுகளை வெல்வதற்க்கான களம் அமைக்க எமது கட்சி உருதுனையாக இருக்கின்றது. அத்தோடு இன்று மக்கள் அனைவருமே அதிகளவு சிற்றுளையுடையவர்களாக இருக்கின்றார்கள். யாருமே அவர்களை ஏமாற்றமுடியாது. தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது இரானுவ அமைப்பிடம் இருந்த ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்திருக்கின்றது. இதனூடாக நூறுவீத ஜனநாயகத்திற்குள் நுழைந்திருக்கின்ற எமது ஜனநாயகக் கட்சியானது மக்களுக்கான அனைத்ததுத் தேவைகளையும் நிறைவேற்றி விடுகின்றது உங்களுக்கு தெரிந்ததே. யாரும் குழப்பமடையத் தேவையில்லை எவர் எங்கு சென்றாலும் எமது மக்கள் இருக்கும் வரை நாம் சேவை செய்து கொண்டே இருப்போம் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து குறிப்பிடுகையில் எமது மக்களின் எண்ணங்கள், துயரங்கள், எதிர்பாப்புக்கள் என்பவற்றை நேரிலே அனுபவித்தவர்கள் எனக்கு நன்றாகவே தெரியும் எமது மக்களுக்கு என்ன என்ன தேவைகள் இருக்கின்றன என அவற்றை இனம் கண்டு அவர்களது கோரிக்கைகளை எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களிடம் எடுத்துக் கூறி அதற்கான அனைத்துத் தீர்வினையுமே பெற்றுக் கொடுக்க நான் தயாராக உள்ளேன். ஏனக்கும் எமது மாகாண மக்களுக்கும் தேவையாக இருக்கின்ற அனைத்தினையுமே எமது நாட்டு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்கள் பெற்றுத்தருவார் என்பதனை உங்கள் அனைவருக்கும் நான் பெரும் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கின்றேன் எனக்குறிப்பிட்டார். இந்நிகழ்வின் உலக தரிசன நிறுவனத்தின் தேசியப் பனிப்பாளர் சுரேஷ் பாத்லட், உள்ள+ராட்சி உதவி ஆணையாளர் து.சத்தியானந்தி, எஸ்.சீ.சுதர்சன் பிராந்திய பணிப்பாளரும், அமுலாக்கல் முகாமையாளரும் (உலகதவிசன நிறுவனம்), மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கா.சுப்பிரமணியம், போரதீவுப் பற்று பிரதேசசபைத் தவிசாளர் வீ.ஆர்.மகேந்திரன் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
0 commentaires :
Post a Comment