3/13/2009

இந்திய தேர்தல் பிரசார விளம்பரங்களில் இலங்கை பிரச்சினை பற்றி அச்சடிக்க தடை


தமிழகத்தில் வருகிற மே 13ம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் பணியை தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.
தேர்தலை சுமுகமாக நடத்தவும், வாக்காளர்கள் அச்ச மின்றி, குழப்பமின்றி வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடு களை செய்து வருகிறது. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் அச்சகங்களுக்கும் தேர்தல் தொடர்பாக வெளியிடும் விள ம்பரங்கள் சுவரொட்டிகள் தொடர்பாகவும் புதிய விதி முறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. வன்முறை, கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக விள ம்பரங்கள் அடித்துக்கொடுக்கக்கூடாது. ஜாதி, மத அமைப்புகள் கொடுக்கும் உணர்ச்சியை, கிள ர்ச்சியை தூண்டும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அச்சடிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடாது. மத உணர்வை தூண்டும் சட்ட பிரச்சினைகளை ஏற்படு த்தும் கேலி சித்திரங்களை அச்சடிப்பதை கைவிட வேண்டும். தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புக்கும், ஜனநாயகத்துக் கும் எதிரான சுவரொட்டிகள் அடிக்கவே கூடாது. இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து எவ்வித வாசக மும் இடம்பெறவே கூடாது. அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டளை தங்கள் எல்லைக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தணிக்கை செய்து கொள்ள வேண்டும்.



0 commentaires :

Post a Comment