சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐக்கியராஜ்யம்)கொட்டப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசல் அக்குறஸ்ஸ மீலாத்துந் நதி விழாவில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐக்கியராஜ்யம்) கொட்டப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசல் அக்குறஸ்ஸ மீலாத்துந் நதி விழாவில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐ.ராஜ்யம்) அக்குறஸ்ஸ கொடப்பிற்றிய பள்ளிவாசல் வளாகத்தில் 10மார்ச் 2009 காலை 10 மணியளவில் பெருமானார் பிறந்ததின விழா நிகழ்வில் கலந்துகொண்டோரை தாக்கிய புலித் தற்கொலை குண்டுதாரியின் மிலேச்சத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேர்ம்.. 1990 லிருந்து வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களில் முஸ்லிம்கள ;எல்.ரீ.ரீயினரின் பரந்துபட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். புலிகள் தொடர்ச்சியாகவே வணக்கம் புரிவோர்மீதான தாக்குதல்களை ஓட்டமாவடி பள்ளிவாசல் சம்மாந்துறை ஜயிரியா பள்ளிவாசல், காத்தான்குடி மீரானியா பள்ளிவாசல், உசைனியா தைக்கா பள்ளிவாசல்., அக்கரைப்பற்று பள்ளிவாசல் ஆகிய இடங்களில் மேற்கொண்டு நூற்றுக்கணக்கான வழிபாடுகளிலிருந்த முஸ்லிம்களையும் பிள்ளைகள் உட்பட கொன்றுள்ளார்கள். இந்த மத வைபவத்திற்கென கூடியிருந்த மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட ஈனத்தனமான பயங்கரவாதச் செயல் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான் மதத்துவேசத்தினை வெளிப்படுத்தும் புலிகளின் தொடர் பயங்கரவாத செயல நிகழ்வாகும். இந்த தற்கொலைத் தாக்குதலில் தங்களின் அன்பிற்குரியவர்களின் உயிர்களை இழந்து வருந்தும் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் வேளையில் இம்மிலேச்சத்தனமான தாக்குதலில் காயமுற்றோரும் ;மிகவிரைவில் குணமடைய பிராhத்திக்கின்றோம். நாங்கள் இலங்கையர்கள் அனைவரும் மத, சாதி, இன வேறுபாடின்றி புலிப்பயங்கரவாதத்தினை இலங்கையில் இல்லாதொழிக்க ஒன்றுபடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம. சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (ஐ.ராஜயம்)
slmic@hotmail.co.uk
0 commentaires :
Post a Comment