3/12/2009

அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்.

அப்பாவி மக்களிடம் கப்பம், வரி, கொள்ளை என்று கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை நேற்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை முதல் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்று வந்தது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கள முனையில் உள்ள படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது.பிந்திய தகவலின்படி, புலிகளின் முக்கியஸ்தர்களான, மாறன், தமிழ்மாறன், கதிர்நிலவன், மலர்ச்செம்மல், ஈழவிழியன், காலைக்கதிரவன், கலை இனியவன் ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது


0 commentaires :

Post a Comment