
இன்று (10-03-09) இலங்கையின் தென்கரையோர நகரான மாத்தறையில் முஸ்லிம்களின் மீலாத்விழா நிகழ்வின் போது தற்கொலைப் படையை அனுப்பி பாரிய அனர்த்தம் ஒன்றை தமிழீழவிடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். 10 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதனால் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனவுணர்வுகள் துன்பத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளன. மீலாத்துவிழா எனப்படும் முகமது நபியின் பிறந்தநாளான இன்று புனித ஸ்தலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலானது தற்குறி பிரபாகரனின் தரங்கெட்ட கொடுஞ்செயல்களின் தன்மையை உலகுக்கு இன்னுமொருமுறை உணர்த்தியுள்ளது. தன்சொந்த மக்களை காப்பாற்ற முடியாது புறமுதுகு காட்டி ஓடுகின்ற புலிகள் எங்கேயே இருக்கின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பழி தீர்த்திருக்கின்ற இந்த நிகழ்வானது மிகவும் கீழ்த்தரமானது. அனாகரிக செயற்பாடுகளிலும் விட அகலபாதாளம் நோக்கி மானிடத்தை தள்ளிவிடுகின்ற இந்த செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கையில் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அப்பாவி மக்கள் மீது புலிகள் கட்டவிழ்த்து விட்டுவருகின்ற திட்டமிடப்பட்ட இத்தகைய தாக்குதல் இன சுத்திகரிப்பு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அறந்தளாவை, அனுராதபுரம், காத்தான்குடி, ஏறாவ+ர், கெப்பிட்டிப்புலாவ..... என்று அப்பாவி முஸ்லிம் சிங்கள மக்கள் மீது புலிகளால் நிகழ்த்தப்பட்டு வருகின்ற இத்தாக்குதல்கள் இனமேலாதிக்கத்தின் வெளிப்பாடுகள் ஆகும். இன்றைய மீலாத்விழா தாக்குதல் ஆனாது புலிகள் இனமேலாதிக்க பாசிஸ்டுகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இலங்கையில் இருந்து இந்த புலிப்பாசிசம் அழித்தொழிக்கப்படும் நாள் அன்றே அப்பாவி சிங்கள முஸ்லிம் மக்களின் வாழ்விலும் தமிழ் மக்களின் வாழ்விலும் கூட ஒளியேற்றும் திருநாளாக அமையும். இது போன்ற கொடும்செயல்களை நிறுத்துங்கள் என்று புலிகளிடம் நாங்கள் கேட்பதை இனியாவது நிறுத்திக் கொள்வோம். ஏனெனில் அவர்கள் திருந்தப்போவதல்ல, அழியப்போவதே நிட்சயம்.
ஆ-ர்
0 commentaires :
Post a Comment