எம்.ஏ.அமீர்அலி - அக்கரைப்பற்று
கிழக்கின் இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் அக்கரைப்பற்றில் ஒரே மேடையில் தோன்றிய நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாணம் தற்போது இன நல்லுறவிலும், அபிவிருத்தியிலும் பாரியமுன்னேற்றம் கண்டு வருகின்றது. கிழக்கு மாகாணசபையின் உருவாக்கத்தின் பின் முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருமே ஒன்றிணைந்து கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தியடையச் செய்து அதனுடாக சமாதானத்தினை கொண்டுவருவதற்காக அனைவருமே அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் கிழக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இவ்வாண்டில் முதல்மாதத்திலேயே மூதுர் பிரதேசத்தில் முதலாவது சமாதானக் கூட்டம் அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது. அதாவது தமிழ், முஸ்லீம், சிங்களமக்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் சமாதானத்தினை முதலில் ஏற்படுத்தி அதனுடாக அபிவிருத்தி செய்கின்ற நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான அதாவுல்ல அவர்கள் இன உணர்வுகளை கிளறி அரசியல் நடத்துவதை இனிமேலாவது நாம் கைவிட வேண்டும். ஆயுதங்களுடனும், வன்முறைகளுடனும் நாம் கடந்து வந்த காலங்களும் செய்து வந்த அரசியலும் இன்றோடு செத்துமடியவேண்டும். தமிழ் முஸ்லிம் மக்கள் ஒருமித்து முன்னேறும் புதிய கலாச்சாரம் நோக்கிய அரசியலை கட்டியமைக்க எமது இளம் சமூகம் முன்வரவேண்டும் என அறைகூவல் விடுத்தார். நினைவு கூறவேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இனிவருகின்ற எமது இளம் சமூதாயத்தினருக்கு கடந்தகால வடுக்களை நினைவுபடுத்தி விபரிக்கும் தேவையில்லை எனக்கூறிப்பிட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில் எம்சமூகங்களுக்கு மத்தியில் சமாதானமும் நல்லெண்ன சிந்தனைகளும் ஏற்படுத்தப்படுகின்ற போதுதான் அபிவிருத்தி இயல்பாகவே பாரபட்சமின்றி ஏற்படுத்தப்படும் எனவே நாம் அனைவரும் தமிழ், முஸ்லீம், சிங்களவர்கள் என்ற பேதங்களை மறந்து ஒருநாட்டில் வாழ்கின்ற ஓரே உறவுகள் என்கின்ற சிந்தனைகளோடும் சமாதானத்தினுடாகவும் அபிவிருத்தியினை வேண்டிநிற்போம்.
0 commentaires :
Post a Comment