3/09/2009

புலி ஆதரவு தமிழக அரசியலில் புதிய திசையில் பயணிக்கும் தமிழக முஸ்லிம் அரசியல் சமூக தலைமைத்துவங்கள்.

எஸ்.எம்.எம் பஷீர்
பாகம் (2)
இன்று தமிழ்நாட்டில் இடம்பெற்றவரும் “ஈழத்தமிழர்களுக்கான” போராட்டங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லை ஏன்? தமிழக முஸ்லிம்கள் ஏன குரல் கொடுக்கவில்லை? என்ற கேள்விக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக ஸ்தாபர்களில் ஒருவரும், இஸ்லாமிய அறிஞருமான பி ஜெயுனாலாப்தீன் அவர்கள் அளித்த பதில தொடர்ச்சி.............;
அப்படியென்றால் ஐ.நா தலையிடாதா ஆனால் வங்களாதேசத்தில் இந்தியா தலையிட்ட மாதிரி தலையிடுங்க எங்கிறாங்க. அதுக்கு அந்தநாட்டு மக்களே திரண்டு நின்று தலையிட இந்தியாவை தட்டிக்கேட்க முடியாத சூழ்நிலை அனறு இருந்தது. இரண்டு வல்லரசுகள் இருந்தன. இந்தியாவைக் கேட்க முடியவில்லை இன்றைக்கு அமெரிக்கா தவிர எந்தநாடாவது நுழைய முடியுமா? ஈராக் குவைத்திலே தலையிட்டானே என்ன நடந்தது. இதெல்லாம் உதாரணமாகக் காட்டமுடியாது. இலங்கையிலேபோய் இறங்கினால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாங்க அன்றிருந்த சூழ்நிலைவேறு இன்றைக்க உலகம் வேற மாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இதெல்லாம் உதாரணமாக காட்டுவதைவிட இது சரியா, பிழையா என்று பாhக்கவேண்டும். அதையும்விட இன்னுமொன்றையும் நாங்கள் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். முஸ்லிம்களைப் பொறுத்தவரைக்கும் பிரத்தியேகமாக நாங்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது ஏன் முடியாது? வடக்குப் பகுதியிலே யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் இந்துக்களாக மட்டும் இருக்கவில்லை ப+ர்வீகமான தமிழர்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருந்தார்கள். அந்த மூவரும் சேர்ந்தே பூர்வீகக்குடிகள். இவர்கள் யாவரும் அந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் விடுதலைப் புலிகள் என்ன பண்ணினாங்க 24 மணித்தியால அவகாசம் கொடுத்து வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுவிட்டு கோடி, கோடியாய் அவர்கள் சம்பாதித்த நகமும் சதையுமாக அந்த மண்ணை வழர்த்த எல்லாவற்றையும் போட்டிட்டு வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேறினார்கள். அணிந்திருந்த ஆடையோடு அந்த மக்கள் வெளியேறி இன்றைக்கு புத்தளம் என்ற இடத்திலே அகதிகளாயிருக்கிறாங்கள். அவர்களை ஏன் வெளியேற்றினீங்க, அவர்கள் தமிழர்கள் இல்லையா? அங்கு இநதுத் தமிழர்கள் இருக்கிறாங்கள், கிறிஸ்தவ தமிழர்கள் இருக்கிறார்கள் மதத் துவேசத்தோடு முஸ்லிம்களை வெளியேற்றினார்கள் முஸ்லிம்கள் தமிழன்கிடையாதா. முஸ்லிம்களை விரட்டியவாகள் யார்? விடுதலைப் புலிகள், எங்களால் உளப்பூர்வமாக அந்த அநியாயக்காரர்களை ஆதரிக்கமுடியாது. கிழக்கு மாகாணத்திலே சிங்களவனுக்கு பயங்காட்டுகிறோம் என்ற பெயரிலே பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள். நாங்கள் காத்தான்குடிக்குப் போனபோது இங்கே அந்த பள்ளிவாசலைப் பார்த்தோம் குண்டு தளைத்த இடங்களைப் பார்த்தோம். சஹீதானவர்களின் மக்பறாவை பார்த்தோம் அதிலே தப்பின ஒரு பெரியவரை பேட்டிகண்டு வந்திருக்கிறோம். பொல்லநறுவையிலே இன்னும் பல இடங்களிலே புலிகள் அப்படிச் செய்தாங்க பள்ளிவாசலிலே தொழுதவர்களை கொன்றார்களேயானால் கிறிஸ்தவ தமிழர்கள், இந்த தமிழர்களிடம் கேள்வி கேக்கணும் தமிழன் என்கிற போர்வையை போhத்திக்கொண்டார்களேயானால் அவாகள் யாரை அழித்தாலும் பரவாயில்லையா? எத்தனை அப்பாவிகளைக் கொன்றாலும் பரவாயில்லையா? சிறுபான்மை மக்களை அடிச்சி நாசமாக்கினாலும் பரவாயில்லையா? நீங்கள் குரல் கொடுக்கின்றது தப்பு என்று சொல்கிறோம். இங்க ஒரு நாடகம் நடக்கிறது போர் நிறுதம் செய்யச் சொன்னாங்க போர் நிறுத்திட்டானா? போர் நிறுத்தாட்டி ராஜினாமாச் செய்வோமெண்டு சொன்னாங்க இராஜினாமாப் பண்ணிட்டானா? போர் நிறுத்தப்பட முடியாதது. ஆயதம் தாங்கியவர்களை எந்த நாடாக இருந்தாலும் அவர்களை ஒடுக்கிவிட்டுத்தான் பேச்சவார்த்தை நடத்தும.; எந்த நாடாக இருந்தாலும் ஆயதத்தை கீழேபோட்டிட்டுவா உனது உரிமையைப்பற்றி பேசவோம் வா அறவழியிலே போராடு, ஜனநாயக வழியிலே போராடு இந்தமாதிரி கன்சப்டிலே (எண்ணைக்கருவிலே) நம்மை மக்களை வளாத்து எடுத்துப் போனார்களேயானால் இந்தியா என்ற ஒருமைப்பாடு இருக்கும் இல்லாவிட்டால் அவனவன் கிளம்பிட்டு எனக்குப் பிரிச்சுக்கொடு என்று பறப்பட்டு;டுவான் இன்று இந்தியா பெரிய வல்லரசு என்று சொல்லுகிறீர்களே அது எல்லாம் புஷவாணமாகிவிடும். விடுதலைப் புலிகளுக்கான சப்போட்டை எந்தக் காலத்திலும் ஆதரிக்கமுடியாது. யுத்தகால கஸ்டங்களை தவிர்க்கமுடியாது. அந்த மக்களுக்கு உதவவேண்டுமென்று நீங்கள் கோரினால் அதை நாங்கள் ஆதரிக்கலாம போரை நிறுத்தச் சொன்னால் அது புலிக்குத்தான். தமிழர்களோடு போர் நடக்கவில்லை போரை நிறுத்துவதற்கென கோரிக்கை வைப்பார்களேயானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதேவேளை இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் எம்;.பியான கே.எம் காதர் முகைதீனும் தனது அண்மைய ஆசியன்றிபியூன் பேட்டியின்போது இந்திய அரசின் நிலைப்பாட்டை வலியுறத்தி புலிகள் அயுதங்களைக் கைவிட்டு யுத்த நிறுத்தத்திற்கு வரவேண்டுமென்று கோரியிருப்பினும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் பல பிரிவினையை ஆதரிக்கின்ற வேளையில் அதனைதாங்கள் ஆதரிக்கவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றமை பொதுவாக தமிழக முஸ்லிம்களின் புலிகளுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 commentaires :

Post a Comment